$
Things To Check Before Using a Condom : பாதுகாப்பான உடலுறவு மற்றும் தேவையற்ற கருத்தரிப்பு, பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளை (STIs) தடுக்க இன்றுவரை காண்டம் (condom) பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. ஆணுறைகள் ஆணுறுப்பில் வெளிப்புறமாகவும், பெண்ணுறுப்பில் உள்புறமாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆணுறை லேடெக்ஸ் (Latex) என்ற பொருளால் தயாரிக்கப்படுகிறது. ஆணுறைகளை பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் சரிபார்க்க வேண்டிய சில விஷயங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
காலாவதி தேதி

ஆணுறையை பயன்படுத்துவதற்கு முன், அது காலாவதியாகிவிட்டதா என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். அப்படி நீங்கள் பயன்படுத்தும் காண்டம் காலாவதியாகியிருந்தால், அவற்றை பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், காலாவதியான ஆணுறையை பயன்படுத்தினால் உடலுறவின் போது ஏற்படும் உராய்வால் ஆணுறை கிழிந்து விடுவதற்கான வாய்ப்பு அதிகம்.
இந்த பதிவும் உதவலாம் : உயர் இரத்த அழுத்தம் விறைப்புச் செயலிழப்புக்கு வழிவகுக்குமா?
பேக்கிங்யை சரிபார்க்கவும்
காலாவதி தேதியை போலவே, பேக்கேஜிங் -யையும் நாம் மறக்காமல் சரிபார்க்க வேண்டும். அதாவது, ஆணுறை வைக்கப்பட்டுள்ள கவர் ஏதாவது சேதப்பட்டிருந்தாலோ அல்லது ஏற்கனவே திறந்திருந்தாலோ, கிழிந்திருந்தாலோ அவற்றை பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், அவற்றை சரியான இடத்தில் வைத்து பராமரிக்கவில்லை என்றால் அவை சேதப்படலாம். எனவே, அவற்றை சரியான வெப்பநிலையில் வைக்கவும்.
CE குறியீடு முக்கியம்

நீங்கள் வைத்துள்ள ஆணுறை கவரில் CE குறியீடு உள்ளதா என்பதை மறக்காமல் சரிபார்க்கவும். CE குறியீடு இருந்தால், அது பயன்படுத்த பாதுகாப்பான ஆணுறைகள் ஆகும். சில சமயங்களில் இந்த குறியீடு ஆணுறை வாங்கும் அட்டையின் பின் புறத்திலும் காணப்படும்.
BSI கைட்மார்க்
நீங்கள் உபயோகுப்பதற்காக வாங்கி வைத்துள்ள ஆணுறையின் அட்டையில் BSI கைட்மார்க் ( BSI kitemark ) உள்ளதா என்பதை சரிபார்க்கவும். இந்த குறியீடானது ஆணுறைகள் முறையாக சோதனை செய்யப்பட்டதை குறிக்கிறது. கைட்மார்க் என்பது உற்பத்தியாளரின் தரம் மற்றும் உற்பத்தி தரநிலைகள் தொடர்ந்து சோதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதை குறிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : ஆண்கள் பின்பற்ற வேண்டிய 6 ஹைஜீன் பழக்கங்கள்!
புதிய ஆணுறைகளை உபயோகிக்கவும்

ஒவ்வொரு முறையும் உடலுறவில் ஈடுபடும் போது, புதிய ஆணுறை பயன்படுத்த மறக்காதீர்கள். அதே போல, ஒரு முறை பயன்படுத்திய ஆணுறையை மீண்டும் பயன்படுத்தாதீர்கள். அதே போல ஏற்கனவே திறந்த ஆணுறைகளை அடுத்த முறை பயன்படுத்தலாம் என வைத்திருக்க வேண்டாம்.
ஆணுறை கவரை கவனமாக திறக்கவும்
ஆணுறை ரேப்பரை கிழிப்பதற்கு முன், கவருக்குள் இருக்கும் ஆணுறையை ஒரு பக்கமாக பக்கவாட்டிற்கு தள்ளவும். இப்படி செய்வதன் மூலம், ஆணுறை சேதமடைவதை தவிர்க்க முடியும். அதே போல, ஆணுறையை நகம் வைத்து திறக்கும் போது, நகங்களும் ஆணுறையை சேதப்படுத்தலாம். எனவே, ஆணுறை கவரை திறக்க பற்கள் மற்றும் நகங்களை பயன்படுத்த வேண்டாம்.
சரியாக முறையில் அணிதல்

ஆணுறையை உங்கள் உறுப்பில் சரியான திசையில் அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வேறு திசையில் அணிந்தால், அதை கழட்டி மீண்டும் சரியான திசையில் பயன் படுத்த வேண்டாம். ஏனென்றால், அதில் உள்ள விந்தணுக்கள் கர்ப்பத்திற்கு வழிவகுக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : ஆண்மையை மேம்படுத்த வேண்டுமா? உங்களுக்கான 5 மாத்திரைகள் இங்கே
சரியான அளவு
ஆணுறைகள் பல அளவுகளில் கிடைக்கின்றன. எனவே, உங்களுக்கான சரியான அளவை பயன்படுத்த வேண்டியது அவசியம். ஒருவேளை பெரிய அளவில் இருந்தா, உடலுறவின் போது எளிமையாக கழன்றுவிடும். அதே சமயம் ஆணுறை சிறியதாக இருந்தால், இறுக்கமாகவும் சங்கடமாகவும் உங்களை உணரவைக்கும். எனவே, சரியான அளவை தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.
Image Credit: freepik