Kudampuli Benefits: குடம்புளியின் வியக்க வைக்கும் பலன்கள்!

  • SHARE
  • FOLLOW
Kudampuli Benefits: குடம்புளியின் வியக்க வைக்கும் பலன்கள்!

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

குடம்புளி உட்கொண்டால், குடலில் ஏற்படும் அமிலத்தன்மை நீங்கும். மேலும் அஜீரணம், இரைப்பை போன்ற குடல் சார்ந்த பிரச்சனைகளை இது கட்டுப்படுத்துகிறது. வெதுவெதுப்பான நீரில் குடம்புளி சாறு கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் இயக்கம் சீராகும். இதனால் செரிமான செயல்பாடுகள் ஒழுங்காக நடக்கும். இது மலச்சிக்கலை தடுக்கிறது. இது மலத்தை இளக்கி வெளியேற்ற செய்கிறது.

இதையும் படிங்க: Clove water Benefits: முகப்பரு, சரும கருமை, மங்கு பிரச்சினையை நீக்கும் கிராம்பு தண்ணீர்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

குடம்புளியில் இருக்கும் கார்சினோல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது அழற்சி எதிர்ப்பு செயல்பாட்டை கொண்டுள்ளதால், மூட்டுவலி வராமல் தடுக்கிறது. கர்ப்பிணி பெண்கள் இதனை உட்கொண்டால், தாய் மற்றும் குழந்தை இருவரின் ஊட்டச்சத்தும் அதிகரிக்கும். கருப்பை மற்றும் பக்கவாதம் நோய் உள்ளவர்களுக்கு இதை கொண்டு சிகிச்சையளிக்கப்படும். 

முடி மற்றும் சரும பாதுகாப்பு

குடம்புளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ரேடிகள்ஸில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுவதால், முடி வளர்ச்சி சரியான முறையில் இருக்கும். குடம்புளியை பசு நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வர வறட்சியில்லா சருமம் பெற முடியும். மேலும் அடர்த்தியான முடியை பெற முடியும். 

எடை குறைய உதவும்

வெதுவெதுப்பான நீரில் குடம்புளி கலந்து குடித்து வர, உடல் எடை குறையும். இதனை குடிப்பதன் மூலம் பசியை அடக்க முடியும். உடல் எடையை குறைக்க விரும்புவோர், இதனை கண்டிப்பாக எடுத்துக்கொள்ளவும். ஆனால், இதனை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. 

குடம்புளியில் அதிக நன்மைகள் உள்ளது என்றாலும், இதனை அதிகமாக உட்கொள்வது சில மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஆகையால், இதனை எடுத்துக்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.  

Image Source: Freepik

Read Next

Figs Health Benefits: அத்திப்பழத்தில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்