$
Alzheimer's Disease Symptoms: அல்சைமர் நோயில் ஆரம்பகால அறிகுறிகள் குறித்து டாக்டர் சுதிர் குமார், சீனியர் கன்சல்டன்ட் நியூராலஜிஸ்ட், அப்போலோ மருத்துவமனை, ஜூபிலி ஹில்ஸ், ஐதராபாத் கூறிய தகவலை பார்க்கலாம்.
அல்சைமர் நோயின் மிகவும் பொதுவான அறிகுறி நினைவாற்றல் இழப்பு ஆகும். இருப்பினும், அல்சைமர் நோய் உடைய சில நோயாளிகள் குறைவாக அறியப்பட்ட சில அறிகுறிகளுடன் கூட இருக்கலாம். அல்சைமர் நோயின் ஆரம்பகால சிகிச்சையை செயல்படுத்த இந்த அறிகுறிகளை அடையாளம் காண்பது முக்கியம்.
அல்சைமர் நோயின் ஆரம்பகால அடிப்படை அறிகுறிகள்

- வாசனை இழப்பு: வாசனை உணர்வு குறைபாடு என்பது அல்சைமர் நோயின் ஆரம்பகால அம்சமாகும். ஆரம்ப கட்ட அல்சைமர் நோயாளிகளில் சுமார் 85% பேர் ஆல்ஃபாக்டரி செயலிழப்பை வெளிப்படுத்துவதாக மருத்துவ காரணிகள் தெரிவிக்கின்றன. ஆல்ஃபாக்டரி என்பது வாசனை தொடர்பான சோதனை ஆகும். ஆல்ஃபாக்டரி குறைபாடு உள்ள நோயாளிகளைக் கண்டறிவது முக்கியம். இது அல்சைமர் ஆரம்பகால நோயறிதலை கண்டறிய உதவும். அல்சைமருக்கான சிகிச்சைகள் ஆரம்ப கட்டத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- மொழி செயலிழப்பு: அல்சைமர் சில சந்தர்ப்பங்களில், நினைவாற்றல் குறைபாடு முதல் மிக தீவிர பிரச்சனைகள் வரை சந்திக்க வைக்கும். அல்சைமர் உள்ளவர்கள் ஆரம்பக்கட்டத்தில் பேசும்போது பொருத்தமான வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதில் சிரமப்படுவார்கள். மற்றவர்களுடன் பேசும்போது புரிந்துகொள்ளும் திறன் குறைவாக இருக்கும். சில பொருட்களுக்குப் பெயரிடுவதிலும், வார்த்தைகள் அல்லது வாக்கியங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதிலும் சிரமம் இருக்கலாம். அல்சைமரின் இந்த மாறுபாடு லோகோபெனிக் மாறுபாடு என அழைக்கப்படுகிறது.
- ஆரம்பகால காட்சி தொந்தரவுகள்: அல்சைமர் நோயாளிகளுக்கு பார்வை கோளாறுகள் இருக்கலாம். அதாவது அவர்கள் தங்கள் சொந்த வீடுகளில் கழிப்பறை அல்லது சமையலறையைக் கண்டறிவது கூட கடினமாக இருக்கலாம். அவர்கள் முன்பு அடிக்கடி சென்ற கடை அல்லது நண்பரின் வீட்டைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். சாதாரண பார்வை இருந்தாலும் பொருட்களை அடையாளம் காண்பதில் அல்லது அவற்றின் செயல்பாடுகளை புரிந்து கொள்வதில் அவர்களுக்கு சிரமம் இருக்கலாம். இது கார்டிகல் அட்ராபி என அழைக்கப்படுகிறது.
- அல்சைமரின் ஆரம்பகால அறிகுறியாக அவர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்படலாம். அதாவது தடை செய்வது, அக்கறையில்லாமல் இருப்பது, கட்டாயப்படுத்துவது போன்ற குணாதிசியங்கள் தோன்றலாம்.
Image Source: Freepik