Symptoms Of Depression In Men: தற்போதைய காலத்தில் மன அழுத்தம் மற்றும் மன சோர்வு ஆகியவை இயல்பாகிவிட்டது. குறிப்பாக ஆண்களிடையே அதிகரித்துள்ளது. ஏனென்றால், வேலை செய்யும் இடத்தில் போட்டியும், பொறாமையும், வெற்றியும் அதிகமாகிவிட்டது. இதை சமாளிக்க பல மணி நேரம் தொடர்ந்து வேலை செய்ய முயல்கிறார்கள். இதனால், உடலுக்கும், மூளைக்கும் சரியான ஓய்வு இல்லாததால் சோர்வடைகிறார்கள்.
இதனால், இவர்கள் முதலில் மன அழுத்தத்தை (Mental Stress) சந்திக்கிறார்கள். பின்னர், தங்களின் குறிக்கொள்படி விரும்பியபடி முடிவுகளைப் பெறாவிட்டால் மனச்சோர்வை (Depression) எதிர்கொள்சிறார்கள். இவற்றை ஆண் மற்றும் பெண் என இருவரும் சந்திக்கிறார்கள். மன சோர்வு குறித்த மேலும் தகவல்கள் குறித்து நாங்கள் மணிப்பால் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் பிரசாந்த் பட் அவர்களிடம் பேசினோம். மனச்சோர்வின் போது ஆண்கள் என்னென்ன அறிகுறிகளை சந்திக்கிறார்கள். அதிலிருந்து அவர்களை எப்படி பாதுகாப்பது என இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Vitamin B12 Deficiency: கவனிக்க வேண்டியவை இது தான்…
ஆண்களிடம் காணப்படும் மனச்சோர்வின் அறிகுறிகள் என்ன?

எரிச்சல் மற்றும் கோபம்
மனச்சோர்வில் உள்ள ஆண்கள் பெரும்பாலும் தங்கள் பிரச்சினைகளை எரிச்சல் மற்றும் கோபத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை பற்றி மட்டுமே சிந்திக்கத் தொடங்குகிறார். மேலும், அவர்களுடன் யார் பேசினாலும் அவர்களுக்கு பிடிக்காது. படிப்படியாக அவர்கள் அனைவரின் மீதும் கோவப்பட துவங்குவார்கள்.
செரிமான பிரச்சினை
மனச்சோர்வு காரணமாக, மனித மூளையின் செயல்பாடு வெகுவாக பாதிக்கப்படும். இந்நிலையில், வயிற்று வலி மற்றும் மெதுவான செரிமானம் போன்ற அறிகுறிகளும் தோன்றும். இது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களின் விளைவு, இது மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம் : உணர்திறன் வாய்ந்த பற்களை பராமரிப்பதற்கான 5 வழிகள் இங்கே…
மக்களிடம் இருந்து ஒதுங்குதல்
மனச்சோர்வடைந்தால், ஆண்கள் மற்றவர்களிடமிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொள்கிறார்கள். மேலும், அவர் மற்றவர்களை சந்திக்க விரும்புவதில்லை. அதுமட்டுமின்றி, அவர்கள் தங்கள் குடும்பத்தின் சொந்த விழாக்களில் கூட கலந்துகொள்ள யோசிப்பார்கள். குடும்பத்தின் வற்புறுத்தலின் பேரில் அவர் ஒரு விருந்துக்கு சென்றாலும், அவர் மக்களுடன் பழகுவதில்லை.
தூக்க முறைகளில் மாற்றங்கள்
மனச்சோர்வின் போது, ஆண்களுக்கு தூக்க முறைகளில் மாற்றம் ஏற்படலாம். எனவே, அவர்கள் அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை பிரச்சனை இருக்கலாம். தூக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் சோர்வு, எரிச்சல் மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற மனச்சோர்வின் மற்ற அறிகுறிகளை அதிகரிக்கும்.
வேலையில் ஆர்வமின்மை
மனச்சோர்வினால் ஆண்களால் தங்கள் வேலையில் சரிவர கவனம் செலுத்த முடிவதில்லை. மேலும், அவர்கள் தங்கள் விஷயங்களை கூட செய்ய விரும்புவதில்லை. ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் போது அவர் தனது சொந்த எண்ணங்களில் தொலைந்து போகிறார்.
இந்த பதிவும் உதவலாம் : நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்
மனச்சோர்விலிருந்து ஆண்களை எவ்வாறு பாதுகாப்பது?

- சிறிது நேரம் வேலையில் இருந்து ஓய்வு எடுப்பது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதாவது, வேளையில் இருந்து சற்று ஓய்வு எடுத்து சில நாட்களுக்கு சுற்றுலா செல்லுங்கள்.
- மனச்சோர்வைக் குறைக்க, நீங்கள் மனநல மருத்துவரின் உதவியைப் பெறலாம்.
- மனச்சோர்வை நீக்க காலையிலும் மாலையிலும் நடைபயிற்சி செல்வது மிகவும் நல்லது.
- அவர்களது பிரச்சனைகளை குடும்ப உறுப்பினர்கள் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
- யோகா மற்றும் உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் மனச்சோர்விலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
ஆண்களுக்கு மனச்சோர்வு இருந்தால், அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். மருத்துவர் அவர்களின் நிலையைப் புரிந்துகொண்டு சரியான ஆலோசனைகளை வழங்குவார். இது தவிர, மனச்சோர்வின் போது அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியம். இதை செய்ய தவறுவதால், ஆண்கள் மது மற்றும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகலாம்.
Pic Courtesy: Unsplash