உங்கள் பெண் குழந்தைக்கான அழகான தமிழ் பெயர்கள் மற்றும் விளக்கம்!

உங்களுக்கு பிறந்த குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் என குழப்பத்துடன் இருக்கும் உங்களுக்கு உதவும் விதமாக பெண் குழந்தைகளுக்கான சில பாரம்பரிய பெயர்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
  • SHARE
  • FOLLOW
உங்கள் பெண் குழந்தைக்கான அழகான தமிழ் பெயர்கள் மற்றும் விளக்கம்!


பொதுவாக தம்பதிகள் திருமணத்திற்கு பின் விவாதிக்கும் பல முக்கியமான விஷயங்களில் ஒன்று குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதுதான். பலர் பல விதமாக குழந்தைக்கு பெயர் சூட்டுகிறார்கள்.

சிலர் குழந்தைக்கு ஜாதகம் பார்த்தும் குழந்தை பிறந்த தேதி நேரம் வைத்தும் அவர்களின் ராசி நட்சத்திரம் வைத்தும் பெயர் சூட்டுகிறார்கள். சிலர் புதுவிதமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அதேசமயம் அது மாடலாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பெயர் வைக்கிறார்கள்.

வெகு சிலரே தங்கள் குழந்தைக்கு முன்னோர்களின் பெயர்களை வைக்கிறார்கள். பொதுவாக குழந்தைக்கு பெயர் வைக்கும் அது நம் கலாச்சாரம் சார்ந்து பாரம்பரியத்துடனும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைக்க வேண்டும். அதேசமயம் உங்கள் குழந்தைக்கும் நீங்கள் வைக்கும் பெயர் என்பது அது அவர்களின் வாழ்நாளின் அடையாளமாக இருக்கப் போகிறது என்பதை நினைவில் வைத்து பெயர் வைக்க வேண்டும்.

அதிகம் படித்தவை: Skin Color Changes: பிறந்த சில நாட்களுக்குப் பிறகு குழந்தையின் நிறம் ஏன் மாறத் தொடங்குகிறது?

பெண் குழந்தைக்கான பாரம்பரிய தமிழ் பெயர்கள்

உங்கள் குழந்தையின் பெயரை அழைக்கும் போது அது அவர்களுக்கும், உங்களுக்கும், வீட்டுக்கும் பாசிட்டிவ் எண்ணத்தை அளிக்கும்படி இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைக்க வேண்டும். அப்படி பெண் குழந்தைகளுக்கான பாரம்பரிய தமிழ் பெயர்களை பார்க்கலாம்.

girl-baby-traditional-name

பவானி

பவானி என்ற பெயரை உச்சரித்து அழைக்கும் போது அது மனதுக்கு தெம்பு அளிக்கக் கூடியதாக இருக்கும். பவானி என்றால் உயிரை கொடுப்பவர் என்று அர்த்தமாகும். அதேபோல் இதற்கு இயற்கையான சக்தி, படைப்பு ஆற்றல் என பொருள் உண்டு.

நந்தினி

நந்தினி என்பது மகிழ்ச்சியை குறிக்கும் பொருளாகும். அதேபோல் சிவனின் வாகனமாக இருக்கக் கூடிய நந்தியை இந்த பெயர் குறிக்கிறது. மகிழ்ச்சி வழங்குபவர் என்பதை இந்த பெயர் குறிக்கிறது.

கவிதா

கவிதா என்பது தமிழில் மட்டுமல்ல இந்தி, பெங்காலி, மராத்தி போன்ற பல்வேறு இந்திய மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த பெயரானது கவிதை என்பதை குறிக்கிறது. கவிதை போன்ற நயம் மற்றும் கருத்தானவர் என்பதையும் இந்த பெயர் குறிக்கிறது.

காஞ்சனா

காஞ்சனா என்பதும் பெண் கடவுளை குறிக்கும் பெயராகும். காஞ்சனா என்பது தங்கம், செல்வம் என்பதை குறிக்கிறது. முன்பு எல்லாம் பல பெண் குழந்தைகளுக்கு காஞ்சனா என பெயர் வழங்கப்பட்டது. இப்போது இந்த பெயர் சூட்டுவது குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சுந்தரி

சுந்தரி என்பது அழகைக் குறிக்கும் பொருளாகும். சுந்தர வடிவு என்ற சொல்லுக்கு ஏற்ப பெண்களுக்கு சுந்தரி என பெயர் சூட்டப்படுகிறது. இந்த பெயர் கொண்டவர்கள் ஒரு வேலையை தங்களிடம் வழங்கினால் அதற்காக தங்களையே அர்ப்பணிப்பார்கள்.

ருக்மணி

ருக்மணி என்பது கடவுள் கிருஷ்ணின் மனைவியை குறிக்கும் பெயராகும். ருக்மணி என்பது மிகவும் உணர்ச்சிவசமானவர் என்பதை குறிக்கிறது. இது உறவிலும் குறிக்கும். அவர்கள் கொள்ளும் பாசத்தில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். ருக்கு என செல்லமாக இந்த பெயர் கொண்டவர்களை அழைப்பார்கள்.

ஜனனி

ஜனனி என்றால் பலரும் வடமொழி கலந்த சொல் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் ஜனனி என்பது பெற்றவள் என்பதை குறிக்கிறது. அதாவது அன்னை என்பதை குறிக்கும் சொல். இந்த சொல் மிகவும் புகழ்பெற்ற பெயராகும். இதை அழைக்கும் போதே மனதிற்கு பாசிட்டிவ் எனர்ஜியை வழங்கும்.

இதையும் படிங்க: தாய்மார்களே கவனமா இருங்க; குழந்தை வளர்ப்பில் இந்த 5 தவறுகளை செஞ்சுடாதீங்க!

சாந்தி

சாந்தி என்பது சாந்தம் அதாவது அமைதியானவள் என்பதை குறிக்கும் பெயராகும். முந்தைய காலத்தில் இந்த பெயர் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது, ஆனால் இப்போது அந்த பெயர் சூட்டும் வழக்கம் குறைந்து வருகிறது. சாந்தி என்ற சொல்லை அழைக்கும் போது மனதுக்கு அமைதி அளிக்கக் கூடியதாக இருக்கும்.

pic courtesy: freepik

Read Next

ஆண் குழந்தைக்கான சிறந்த அழகான பெயர்கள் மற்றும் விளக்கம்!

Disclaimer

குறிச்சொற்கள்