குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் விஷயத்தில் பெற்றோர்கள் பெரிதும் குழப்பம் அடைகிறார்கள். இதற்கு பெற்றோர்களுக்கு உதவும் விதமாக குழந்தைக்கான சிறந்த பிரபலமான பெயர்கள் பட்டியல் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் விஷயத்தில் பெற்றோர்கள் மிகவும் குழப்பம் அடைகிறார்கள். குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கிறோம் என்பது மிக மிக முக்கியம். காரணம் அது அவர்களின் வாழ்நாள் அடையாளமாகவும் அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கக் கூடியதாகவும் இருக்கப் போகிறது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
அதிகம் படித்தவை: உங்கள் பெண் குழந்தைக்கான அழகான தமிழ் பெயர்கள் மற்றும் விளக்கம்!
குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது சிலர் தங்களது முன்னோர்களின் பெயர்களை வைக்கிறார்கள். ஆனால் இந்த காலக்கட்டத்தில் முன்னோர்களின் பெயர்கள் என்றால் அது பழையதாக இருக்கிறது என்றே அதை பலர் கருத்தில் கொள்வதில்லை.
புதுமையாகும் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஏதோஏதோ பெயர்கள் வைக்கிறார்கள். ஏராளமானோர் இன்றை காலக்கட்டத்தில் குழந்தை பிறந்த நேரம், காலம், ராசி, நட்சத்திரம் ஆகியவை முடிவு செய்து அதற்கு ஏற்றால் போல் பெயர் வைக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது சில முக்கிய விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். யாருடைய பெயரையாவது குறிப்பிட்டு வைக்கிறேன் என தங்களுடைய சித்தாந்தத்தை அவர்கள் மீது திணிக்கக் கூடாது. அதேபோல் குழந்தைகளின் பெயர் ஒலிக்கும் போது பாசிட்டிவ் ஆகவும் நேர்மறையாகவும் இருக்கிறதா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இது அவரின் வாழ்க்கையையும், உங்கள் வீட்டின் தரத்தையும் மேம்படுத்தக் கூடும்.
அதன்படி, ஆண் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என சிந்தித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு உதவும் விதமாக சிறந்த பாப்புலர் புகழ்பெற்ற தமிழ் பெயர்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
ஆண் குழந்தைகளுக்கான புகழ் பெற்ற தமிழ் பெயர்கள்
விக்னேஷ்
விக்னேஷ் என்ற பெயர் ஏராளமானோருகக்கு வைக்கப்பட்டிருக்கும். இது முதன்மை கடவுளான விநாயகரின் பெயராகும். இந்திய வம்சாவளியை சேர்ந்த பலருக்கு இந்த பெயர் சூட்டப்படுகிறது. இந்த பெயருக்கான அர்த்தம் தடைகளை நீக்குபவர் என அர்த்தம் ஆகும். இந்த பெயர் கொண்டவர்களை விக்கி என சுருக்கி செல்லமாகவும் அழைக்கப்படுவது உண்டு.
மாதவன்
மாதவன் என்பதற்கு சிவன் என பொருளாகும். மாதவா என்ற சிம்ஹா என்றும் அர்த்தம். மாதவன் என இந்தியாவில் பல குழந்தைகளுக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மாதவன் என்பதை சுருக்கி மேடி என செல்லமாகவும் அழைக்கப்படுவது உண்டு. அதேபோல் மாதவா என அழைக்கும் போது மனதில் ஒரு நம்பிக்கை தோன்றும்.
ஹர்ஷன்
ஹர்ஷன் என்றால் நேர்மறையானவன் மற்றும் சக்தி வாய்ந்தவன் என அர்த்தம் இருக்கிறதும். மற்றொரு விஷயம் என்னவென்றால் ஹர்ஷா என்றால் மகிழ்ச்சி எனவும் அர்த்தம் இருக்கிறது. ஹர்ஷா என்று அழைக்கும் போது புதுமையாகவும் இருக்கும்.
பார்த்திபன்
பார்த்திபன் என்றால் பெருமாளை குறிக்கும் அர்த்தமாகும். பார்த்திபன் என்பது பார்த்தசாரதி என்பதை குறிக்கிறது, இது கிருஷ்ணரின் அவதாரத்தை குறிக்கிறது. பார்த்தி என செல்லமாக இவர்களை அழைக்கலாம்.
கிருஷ்ணா
கிருஷ்ணா என்பது இந்தியா முழுவதும் சூட்டப்படும் ஒரு பெயராகும். இது பெருமாளின் அவதாரத்தின் பெயராகும். மேலும் இந்தியாவில் ராம கிருஷ்ணா, மாயா கிருஷ்ணா, முத்து கிருஷ்ணா என பலருக்கு இந்த பெயர் வைக்கப்படுவது உண்டு. இந்த பெயர் அழைக்கும் போது நேர்மையையும் பாசிட்டிவ் எனர்ஜியையும் அளிக்கும்.
கார்த்திக்
எந்த காலத்திலும் புதுமையாக இருக்கக் கூடும் பெயர்களில் இதுவும் ஒன்று. பலருக்கு கார்த்தி என பெயர் சூட்டப்படுவது உண்டு. இது தமிழ் கடவுள் முருகனின் பெயராகும். கார்த்திகேயா எனவும் பெயர் வைக்கலாம்.
ரகுநந்தன்
ரகுநந்தன் என்பதில் இரு பொருளை எடுக்கலாம், ரகு என்பது ராம அவதாரத்தையும் நந்தன் என்பது சிவனின் வாகனமான நந்தியையும் இது குறிக்கிறது. நந்தா என்றும் ரகு என்று இவர்களை செல்லமாக அழைக்கலாம்.
வெற்றி
வெற்றி என்றால் வெற்றியை குறிக்கும். இந்த பெயரை அழைக்கும் போது எல்லாம் மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். வெற்றி என்று உச்சரிக்கும் போதெல்லாம் பாசிட்டிவ் எனர்ஜி வீட்டிற்கே கிடைக்கும்.
pic courtesy: freepik