Historical tamil names for girl baby: ஒவ்வொரு பெற்றோருமே தங்கள் குழந்தைகள் பிறக்கும் முன்னரே பல கனவுகளை வைத்திருப்பர். குறிப்பாக, குழந்தைகளுக்கு பெயர் வைப்பது அவர்களின் மிகப்பெரிய கனவாகும். பலர் பலவிதமாக குழந்தைக்கு பெயர் சூட்டுகின்றனர். சிலர் குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த தேதி மற்றும் நேரம் வைத்தும், ஜாதகம் பார்த்து, ராசி நட்சத்திரம் வைத்தும் பெயர் சூட்டுகின்றனர். சிலர் குழந்தைக்கு பெயர் வைக்கும் போது முன்னோர்களின் பெயர் வைப்பர்.
இருப்பினும், இன்னும் சிலர் குழந்தைகளுக்கு மாடர்ன் பெயர் வைக்கும் இந்த காலகட்டத்தில் தமிழ் பெயர்களை நாடும் பெற்றோர்களும் பலர் உள்ளனர். பொதுவாக குழந்தைக்கு பெயர் வைக்கும் போது அது நமது கலாச்சாரம் சார்ந்து பாரம்பரியத்துடனும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைக்க வேண்டும். அதே போல, குழந்தைக்கு வைக்கும் பெயர் அவர்களின் வாழ்நாளின் அடையாளமாக இருக்கும். இதில் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைக்கு உகந்த பெயர்களின் பட்டியலையும், அந்தப் பெயரின் பொருளையும் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Parenting Tips: குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த இந்த டிப்ஸ ஃபாளோ பண்ணுங்க!
பெண் குழந்தைக்கான தமிழ் பெயர்கள்
வைஷ்ணவி (Vaishnavi name meaning in tamil)
வைஷ்ணவி என்பதன் பொருள் விஷ்ணுவை வணங்குதல் அல்லது விஷ்ணுவின் தனிப்பட்ட ஆற்றலைக் குறிக்கிறது. இதை பெண் குழந்தைகளுக்கு வைக்கப்படுகிறது. இது புதிய தலைமுறைக்கு ஏற்றதாகவும், தனித்துவமான மற்றும் அர்த்தமான விருப்பங்களையும் வழங்குகிறது.
நர்மதா (Narmada)
நர்மதா என்ற பெயரானது நதியைக் குறிக்கிறது. இது இந்தியாவில் பாயக்கூடிய மிகவும் நீளமான நதியாகும். நர்மதா பெயருக்கு சமஸ்கிருத மொழியில் இன்பத்தை அளிப்பவள் என்று பொருள். இந்த பெயரைக் கொண்ட ஒருவர் எப்போதும் இன்னும் ஒரு காரியத்தைச் செய்யத் தயாராக இருப்பார். அவர்களின் நிரம்பி வழியும் ஆற்றல் அவர்களை அவர்களின் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது.
ஹரிணி (Harini)
ஹரிணி என்ற பொருள் மானைப் போன்றதாகும். மேலும் இந்து புராணங்களில் சொர்க்கத்தில் வசிக்கும் அழகான மற்றும் கனிவான பெண்ணைக் குறிக்கிறது. ஹரிணி என்பது விஷ்ணுவின் தாயாரின் பெயராகும். மேலும் மஞ்சள், மல்லிகைக்கும் இந்த பெயர் பயன்படுத்தப்படுகிறது.
அழகி (Azhagi)
அழகி என்ற பெயருக்கு அழகான பெண் என்று பொருள்படுகிறது. மேலும், இது அழகன் என்ற சொல்லின் பெண்பால் வடிவம் ஆகும். இது உலகில் உள்ள பலரால் விரும்பப்படும் ஒரு நல்ல பெயர் ஆகும். இது வெளிப்படையான, மிகவும் சமூக திறன் கொண்ட, வேடிக்கையான அன்பான மற்றும் வாழ்க்கையை அனுபவிக்கக் கூடியதாகும்.
கீர்த்தனா (Keerthana)
இது கீர்த்தன் என்று சொல்லக் கூடிய சமஸ்கிருத வார்த்தையாகும். இது ஒரு கருத்து அல்லது கதையை கூறுதல் அல்லது விவரித்தல் என்று பொருள்படுகிறது. கீர்த்தனா என்ற பெயர் வைத்த நபர்கள் இயல்பாகவே மிகவும் நம்பிக்கை மற்றும் தைரியமானவர்கள். இவர்கள் நுட்பமான அறிவைக் கொண்டிருப்பர். எனவே அவர்களின் வாழ்க்கையில் சிறந்த வெற்றியை அடைய உதவுகிறது.
யாமினி (Yamini)
யாமினி என்ற பெயருக்கான அர்த்தம் நட்சத்திரங்கள் நிறைந்த இரவைக் குறிக்கிறது. யாமினி என்ற பெயர் கொண்டவர்கள் சுதந்திரமானவர்களாகவும், மரியாதைக்குரியவர்களாகவும் காணப்படுவார்கள். மேலும் இவர்கள் ஆக்கப்பூர்வமானவர்களாகவும், கலைநயமிக்கவர்களாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: ஆண் குழந்தைக்கான சிறந்த அழகான பெயர்கள் மற்றும் விளக்கம்!
நித்யா (Nithya)
நித்யா என்ற பெயருக்கு நித்தியம், நிலையான, நிரந்தரம் அல்லது மாறாதது என்று பொருள்படுகிறது. இது சமஸ்கிருத தோற்றம் கொண்ட பெயர் ஆகும். இந்த பெயர் வைத்த பெண்கள் பெரும்பாலும் அழகானவர்கள், புத்திசாலிகள் என்று பார்க்கப்படுகின்றனர். இவர்கள் பலவிதமான சோதனைகளை கடந்து தடைகளை உடைத்து வெற்றி பெறுவார்கள். நித்யா பெயர் உடையவர்கள் உழைப்பே உயர்வு என்பதை தத்துவமாக வைத்து செயல்படுபவர்கள்.
சக்தி (Sakthi)
வடமொழிச் சொல்லான சக்தி என்ற பெயருக்கு திறன், வலிமை, முயற்சி, ஆற்றல் என்று பொருள்படுகிறது. இது பெண்கள், ஆண் குழந்தைகள் என இருவருக்கும் பெயர் வைப்பர். சக்தி என்ற பெயர் உடையவர்கள் முயற்சி செய்து வெற்றி பெறுபவர்கள் மற்றும் ஆற்றல் மிக்கவராகவும் காணப்படுவர்.
காவியா (Kaviya)
காவியா என்ற பெயருக்கு கவிதை மற்றும் இயக்கத்தில் கவிதை என்று பொருளாகும். இது பெரும்பாலான பெண் குழந்தைகளுக்கு அதிகமாக சூட்டப்படும் பெயர்களில் ஒன்றாகும். இந்தப் பெயர் கொண்டவர்கள் பக்குவம் கொண்டவராகவும், அதே சமயம் நண்பர்களுக்கு உறுதுணையாகவும், மற்றவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் நன்மை கொண்டவராகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் மீது அதிகப்படியான பொறுப்பு மற்றும் அன்பு கொண்டவராக இருப்பர். இது அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் குணம் கொண்டவராகவும் காணப்படுவர்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: உங்கள் பெண் குழந்தைக்கான அழகான தமிழ் பெயர்கள் மற்றும் விளக்கம்!
Image Source: Freepik