ஆண் குழந்தைக்கான சிறந்த அழகான பெயர்கள் மற்றும் விளக்கம்!

குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் விஷயத்தில் மிக கவனமாக இருக்கும் பெற்றோர்களுக்கு துணைபுரியும் விதமாக குழந்தைகளுக்கான பாரம்பரிய பெயர்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
  • SHARE
  • FOLLOW
ஆண் குழந்தைக்கான சிறந்த அழகான பெயர்கள் மற்றும் விளக்கம்!


கர்ப்ப காலத்தில்தான் இந்த விவாதம் நடக்கும் என கூறிவிட முடியாது, திருமணமான உடனே தம்பதிகள் விவாதிக்கும் பல விஷயங்களில் முக்கியமான ஒரு விஷயம்தான் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பது. ஆண் குழந்தை பிறந்தால் இந்த பெயர் வைப்போம், பெண் குழந்தை பிறந்தால் இந்த பெயர் வைப்போம் என்ற விவாதம் கண்டிப்பாக நடக்கும்.

பலரும் தங்களது குழந்தைகளுக்கு தனித்துவமான பெயர்கள் இருக்க வேண்டும் என்றுதான் விருப்பப்படுகிறார்கள். இதன்காரணமாக அவர்கள் பெரிதளவு ஆராய்ச்சி செய்து வித்தியாச வித்தியாசமான பெயர்களை தேர்வு செய்கிறார்கள்.

அதேபோல் சிலர் தங்களது குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தை என அவர்களுடைய முன்னோர்களின் பெயர்களை வைக்க விரும்புகிறார்கள். சிலர் அது மிக பழைய பெயராக இருக்கிறது என நினைத்து இதுபோன்ற பெயர்களை வைக்க கருத்தில் கூட கொள்வதில்லை.

அதிகம் படித்தவை: Skin Color Changes: பிறந்த சில நாட்களுக்குப் பிறகு குழந்தையின் நிறம் ஏன் மாறத் தொடங்குகிறது?

இந்த காலக்கட்டத்தில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஏராளமானோர் குழந்தை பிறந்த நேரம், காலம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ஜாதகம் பார்த்துதான் குழந்தைக்கு பெயர்கள் வைக்கிறார்கள். பெயரை கூட்டினால் இந்த எண் வர வேண்டும் என திட்டமிட்டு அக்குழந்தையின் ராசி நட்சத்திரத்திற்கு ஏற்ப பெயர்களை வைக்க விரும்புகிறார்கள்.

சரி, எது எப்படியோ குழந்தைக்கு பெயர் வைக்கும் போது சில குறிப்பிட்ட விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியது முக்கியம். அது தமிழ் சார்ந்த பெயராக இருக்கிறதா என்பதுதான், மற்றொரு குழந்தையின் பெயரை ஒலிக்கும் போது பாசிட்டிவ் ஆக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். இது குழந்தையின் ஒட்டுமொத்த அடையாளத்துக்கும் நல்லது. குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் உடன் வரும் அவர்களின் அடையாளம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

ஆண் குழந்தைக்கான சிறந்த பாரம்பரிய தமிழ் பெயர்கள்

குழந்தைக்கு நீங்களும் நல்ல பெயர் வைக்க வேண்டிய திட்டமிட்டு இருந்தால், அதற்கான ஐடியாக்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. இதில் ஆண் குழந்தைகளுக்கு பாரம்பரிய மற்றும் சிறந்த தமிழ் பெயர்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

boy-baby-traditional-tamil-name

பாலாஜி

பாலாஜி என்பது இந்த கடவுளான பெருமாளின் பெயராகும். இது திருப்பதி விஷ்ணு பகவானின் பெயரும் கூட. இதற்கும் மேல் பாலாஜி என்றால் வலிமை என்று பொருளாகும்.

ஜி என்ற உச்சரிப்பு இந்தியில் மரியாதையை குறிக்கும் சொல்லாகும். எனவே பாலாஜி என்று முடிவு பெறுவது இந்த பெயருக்கு கூடுதல் பலமாகும்.

முருகன்

முருகன் என்பது தமிழ் கடவுளின் பெயராகும். பொதுவாக முருகு என்பது அழகு, இளமை என்பதை குறிக்கும். அதேபோல் இந்த சொல்லை குறிப்பிட்டு அழைக்கும் போது பாசிட்டிவ் எனர்ஜியை உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும், வீட்டிலும் அளிக்கும்.

வெங்கடேஷ்

வெங்கடேஷ் என்பதும் பெருமாளின் பெயராகும். இது திருப்பதி திருமலை ஆண்டவரை குறிக்கும் பெயர். வெங்கடேஷ் என்ற பெயரை சுருக்கி வெங்கி, வெங்குடு என்று அழைக்கப்படுகிறது. வேங்கடத்தின் ஆண்டவர் என்பதை குறிக்க வெங்கடேஷ் அல்லது வெங்கடேஷ்வரா என குறிப்பிடப்படுகிறது.

அனிருத்

அனிருத் அல்லது அனிருத்தா என்பதும் விஷ்ணுவின் பெயர்களில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. சுய விருப்பம், தடுக்க முடியாதது, தோற்கடிக்க முடியாதது, வெல்லவே முடியாதது என பல பொருள்களை அனிருத் என்ற பெயர் குறிக்கிறது.

கார்த்திக்

கார்த்திக் என்பதும் பாரம்பரிய மற்றும் முருகனின் பெயராகும். கார்த்திகேயன் என்று முருகனின் மற்றொரு பெயரை குறிக்கவே இந்த பெயர் பயன்படுத்தப்படுகிறது. இது தமிழ் கடவுள் முருகனின் பெயர், பாரம்பரிய பெயர் அதே அளவு எப்போதும் புதுமையை அளிக்கக் கூடிய பெயராகவும் இது இருக்கிறது.

சிவன்

சிவன் என்பதும் ஈஸ்வரனை குறிக்கும் பெயராகும். சிவன், சிவா, சிவக்குமார் என பல வடிவில் இந்த பெயர் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் சிவா என்று அழைக்கும் போது ஒரு அமைதி மனதில் கிடைக்கும்.

ஆதவன்

ஆதவன் என்பது சூரியனை குறிக்கும் சொல் ஆகும். சூரியன் என்றாலே ஒளி மிக்கவன் என்று அர்த்தமாகும். ஆதவா என அழைக்கும் போது மனதில் ஒரு நம்பிக்கை தன்மை அதிகரிக்கும். ஆதவன் என்ற சொல் பலருக்கு பயன்படுத்தப்படுகிறது, அதேசமயத்தில் இது எக்காலமும் புதுமையான பெயராக இருக்கிறது.

பிரணவ்

பிரணவ் என்ற பெயருக்கு நெருப்பு, புத்திசாலித்தனம் என அர்த்தம் உண்டு. அதேபோல் இது தூய்மையானவர், கம்பீரமானவர் என்பதையும் குறிக்கிறது. பிரணவ் என்பது நான்கே வார்த்தையில் முற்றுப் பெறக்கூடிய அழகிய பெயராக இருக்கிறது.

சந்திரன்

சந்திரன் என்பது நிலவை குறிக்கும் பெயராகும். இது ஒரு யுனிசெக்ஸ் பெயராக கருதப்படுகிறது. இந்த பெயர் பிரகாசமான, பளபளக்கும் என்று பொருள்படும். இது பிற இந்திய மொழிகளிலும் பயன்படுத்தக் கூடியது ஆகும்.

இதையும் படிங்க: தாய்மார்களே கவனமா இருங்க; குழந்தை வளர்ப்பில் இந்த 5 தவறுகளை செஞ்சுடாதீங்க!

ராகவன்

இந்த பெயர் ஒரு தென்னிந்திய பெயராகும். இது ரகு என்ற பெயரில் இருந்து பெறப்பட்ட பெயராகும். ரகு என்பது கடவுள் ராமரின் பெயராகும். விஷ்ணுவின் அவதாரமான ராமரின் பெயரான ரகு என்ற வார்த்தையில் இருந்து ராகவ் மற்றும் ராகவன் என பெயர் வழங்கப்படுகிறது.

pic courtesy: freepik

Read Next

Breast Feeding Tips: தாய்ப்பால் கொடுக்கும் போது மறந்தும் சாப்பிடக் கூடாத உணவுகள்!

Disclaimer

குறிச்சொற்கள்