Must know supplements that support cancer prevention: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் புற்றுநோயும் ஒன்றாகும். புற்றுநோய் என்பது உயிருக்கு ஆபத்தான நோயாகும். இது கட்டுப்பாடற்ற செல்கள் பரவுவதால் ஏற்படக்கூடியது. பல வகையான புற்றுநோய்கள் உள்ளன. மேலும் இவை ஏற்படுவதற்கான காரணமும் பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமைகிறது. இதில் சுற்றுச்சூழல், மரபணு மற்றும் வாழ்க்கை முறை போன்றவை அடங்கும்.
இவற்றில், பல விஷயங்கள் ஒரு நபருக்கு புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம். குறிப்பாக இன்றைய காலத்தில் புற்றுநோய் வேகமாகப் பரவி வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதைத் தடுக்க நாம் ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுக்க முயற்சிப்பது முக்கியமாகும். ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறை மற்றும் உடல் செயல்பாடுகளின் மூலம் புற்றுநோய் வளர்வதைத் தடுக்கலாம். அதே சமயத்தில், புற்றுநோய் செல்கள் வளர்வதையோ அல்லது பரவுவதையோ தடுக்க உதவும் சில சப்ளிமெண்ட்ஸ்களும் காணப்படுகிறது.
இதில் நொய்டாவின் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் இணை ஆலோசகர் டாக்டர் நீது பாண்டே அவர்கள் புற்றுநோய் எதிர்ப்பு சப்ளிமெண்ட்களாக நமது உணவில் என்னென்ன சேர்க்கலாம் என்பது குறித்து விளக்கியுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Cancer Fighting Foods: புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான 5 சூப்பர் ஃபுட்கள்!
புற்றுநோயைத் தடுக்க உதவும் புற்றுநோய் எதிர்ப்பு சப்ளிமெண்ட்ஸ்
பூண்டு
பூண்டில் உள்ள அல்லிசின் என்ற சேர்மம் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றதாகும். இது வீக்கத்தைக் குறைக்கவும், உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. தேசிய மருத்துவ நூலகம்மற்றொரு ஆய்வின்படி, பூண்டு புற்றுநோய் தடுப்பிலும் முக்கிய பங்கு வகிக்க முடியும் என கூறப்படுகிறது.
இந்த ஆய்வில், “வெவ்வேறு முன் மருத்துவ புற்றுநோய் மாதிரிகளில், பூண்டின் உயிரியல் ரீதியாக செயல்படும் கூறுகள் மற்றும் அதன் நானோ-சூத்திரங்கள் பல வகையான புற்றுநோய்களில் செல் வளர்ச்சி, இணைப்பு, அப்போப்டொசிஸ் தடுப்பு, இடம்பெயர்வு, படையெடுப்பு மற்றும் மெட்டாஸ்டாஸிஸ் போன்றவற்றைக் குறைக்கும்” எனக் கூறப்படுகிறது.
இஞ்சி
இஞ்சியில் காணப்படும் ஜிஞ்சரால் என்ற கலவை உடலில் வீக்கத்தைக் குறைக்கவும், ஆக்ஸிஜனேற்ற விளைவுகளை அதிகரிக்கவும் உதவுகிறது. இந்த இரண்டு பண்புகளுமே புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. ஆராய்ச்சியில் இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ நூலகம் ஒரு ஆய்வின்படி, "புற்றுநோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படும் சில பண்புகள் இஞ்சியில் காணப்படுகிறது. இவை புற்றுநோயைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் இஞ்சி ஒரு பங்கை வகிக்கக்கூடும். ஆனால், இது மட்டும் முழுமையாக பயனுள்ளதாக இருக்காது” எனக் கூறப்படுகிறது.
ஆளிவிதைகள்
ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், லிக்னான்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதில் லிக்னான்கள் என்பது ஒரு வகையான பைட்டோ ஈஸ்ட்ரோஜன் ஆகும். இது புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற பல்வேறு புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
தேசிய மருத்துவ நூலகத்தில் குறிப்பிட்டபடி ஆய்வு ஒன்றில், “ஆளி விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சில வகையான புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ உதவுகிறது”. ஆளி விதைகளில் உள்ள அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்லுலார் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. பொதுவாக ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் நிலையற்ற மூலக்கூறுகள் செல்லுலார் சேதத்தை ஊக்குவிக்கும் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cancer Fighting Foods: புற்றுநோயை எதிர்த்து போராட உதவும் அற்புத உணவுகள் இங்கே..
மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற செயலில் உள்ள சேர்மமானது சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது டிஎன்ஏ சேதமடைவதைத் தடுக்கவும், புற்றுநோய் செல்களை ஊக்குவிக்கும் முன்னோடிகளின் உருவாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் இது புற்றுநோய் செல்களை ஊக்குவிக்கும் முன்னோடிகளின் உருவாக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது.
தேசிய மருத்துவ நூலகத்தில் குறிப்பிட்ட படி, “மஞ்சளில் உள்ள குர்குமினின் பண்புகள் கதிரியக்க சிகிச்சை அல்லது கீமோதெரபியின் பக்க விளைவுகளைக் குறைத்து, அதன் மூலம் நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் குர்குமின் நோயாளியின் உயிர்வாழும் நேரத்தை அதிகரித்து, கட்டியின் அளவைக் குறைத்துள்ளதாக பல ஆய்வுகளில் காட்டப்படுகிறது” என்று குறிப்பிடப்படுகிறது.
செலினியம்
இது ஆக்ஸிஜனேற்ற நொதிகளை செயல்படுத்தும் ஒரு இயற்கை கனிமமாகும். இவை புற்றுநோயின் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. தேசிய சுகாதார நிறுவனங்கள் “புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுடன் செலினியம் சரியான அளவு மற்றும் நேரத்தில் வழங்கப்படுவதன் மூலம், அது கட்டியின் இரத்த நாளங்களை இயல்பாக்குகிறது. மேலும் இது புற்றுநோய் செல்களை சிறப்பாகச் சென்றடைய அனுமதிக்கிறது. இதை முறையாகப் பயன்படுத்தப்படும்போது, குறிப்பாக சிறுநீரக புற்றுநோய் சிகிச்சையின் போது சிகிச்சையை மிகவும் பயனுள்ளதாக மாற்றும்” என்று கூறப்படுகிறது.
முடிவுரை
புற்றுநோயைத் தடுப்பதற்கு மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்துக் கொள்வது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது. மேலும் இந்த சப்ளிமெண்ட்களை அன்றாட உணவில் சேர்ப்பதுடன் ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறை மற்றும் உடல் செயல்பாடுகளிலும் கவனம் செலுத்துவது முக்கியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: புற்றுநோய் செல்களை எதிர்த்து அதை முற்றிலும் அழிக்க இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க!
Image Source: Freepik