Doctor Verified

Dehydration Symptoms: நீரிழப்பு நோயின் அறிகுறிகள், தாக்கங்கள் மற்றும் தடுக்கும் முறைகள்

  • SHARE
  • FOLLOW
Dehydration Symptoms: நீரிழப்பு நோயின் அறிகுறிகள், தாக்கங்கள் மற்றும் தடுக்கும் முறைகள்


Dehydration Symptoms and Prevention: பொதுவாக கோடைக்காலம் என்றாலே, வெயிலின் தாக்கம் அதிகரித்து உடலுக்கு அதிக அளவு நீர் தேவைப்படுகிறது. மனித உடலுக்கு இன்றியமையாத ஒன்றாக விளங்குவது தண்ணீர் ஆகும். ஆனால் உடலில் திரவத்தின் அளவு குறைந்து கொண்டே வரும் போது நீரிழப்பு ஏற்படுகிறது. அதாவது, உடலுக்குத் தேவையான நீரை விட, நாம் குறைவான நீரை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும், அதிகளவு நீர் நம் உடலில் இருந்து வெளியேறுவதன் மூலமாகவும் நீரிழப்பு ஏற்படுகிறது. இதில், ஒருவருக்கு நீரிழப்பு எப்படி ஏற்படுகிறது, அதன் தாக்கங்கள் மற்றும் நீரிழப்பை எவ்வாறு தவிர்ப்பது உள்ளிட்ட விவரங்களைக் காணலாம்.

நீரிழப்பு நோய்

உடலில் தண்ணீரின் பற்றாக்குறையால் ஏற்படும் நீரிழப்பு நோய் குறித்தும், இதனால் பாதிக்கப்படுபவர்கள், மற்றும் நீரிழப்பு நோயின் சிக்கல்கள் குறித்து DrinkPrime-ன் இணை நிறுவனர் மற்றும் CEO விஜேந்தர் ரெட்டி முத்யாலா சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி இங்கு காணலாம்.

மனித உடல் போதுமான அலவு நீர் பெறவில்லை எனில் உடல் நீரிழப்புக்கு உள்ளாகிறது. பொதுவாக உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்காத போது ஏற்படுகிறது. மேலும், இவை காலநிலை மாற்றங்கள், உடற்பயிற்சியின் தீவிரம் மற்றும் உணவுப் பழக்கங்கள் உள்ளிட்டவை நீரிழப்புக்கு பங்களிக்கின்றன. எனினும் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கும் போதும் நீரிழப்பு ஏற்படலாம். குறிப்பாக வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது சர்க்கரை நோய் போன்றவை ஏற்படும் போது நீரிழப்பு ஏற்படலாம். இது ஒருவர் அறியாமலேயே ஏற்படுவதால், சில பக்க விளைவுகளைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே கோடைக்காலத்தில் அல்லது நோய்வாய்ப்பட்டிருக்கும் நேரத்தில் அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் தினசரி போதுமான அளவு உடலுக்குத் தேவையான தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Liver Healthy Tips: கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்களுக்கான டிப்ஸ்!

நீரிழப்பு நோயின் அறிகுறிகள்

நீரிழப்பு நோயின் அறிகுறிகள் வயதுக்கு ஏற்றாற்போல மாறுபடலாம். ஆனால், இது பெரியவர்களுக்கு மிகவும் பொதுவானவை.

  • அதிகமாக தாகம் எடுப்பது
  • இலேசான உணர்வு
  • சோர்வடைதல்
  • வாய் மிகவும் வறண்டு போகுதல்
  • வழக்கத்தை விட குறைவாக சிறுநீர் கழிப்பது
  • மிகுந்த அடர் நிறத்தில் சிறுநீர்

நீரிழப்பால் மனித உடலில் ஏற்படும் தாக்கங்கள்

நீரிழப்பு நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு தீவிர சிக்கல்களை ஏற்படுத்தும். மேலும், இதற்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினமாகும். ஒருவர் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லையெனில் கீழ்காணும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சிறுநீர் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள்

சிலருக்கு நீடித்த நீரிழப்பு அல்லது மீண்டும் மீண்டும் நீரிழப்பு ஏற்படலாம். சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதை தொற்று மற்றும் உயிருக்கு ஆபத்து விளைவுக்கும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

இதயத்தில் பிரச்சனை

தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் நபர்கள், போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை எனில் இதயத்தில் பிரச்சனைகள் உண்டாகலாம். அதிலும் குறிப்பாக அதிகம் வியர்வை இல்லை என்றாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையெனில் நீரிழப்பு நோய் ஏற்படலாம். நீரிழப்பால் இதய பிரச்சனை தொடர்பான சிறிய பிடிப்புகள் முதல் உயிருக்கு ஆபத்தான பக்கவாதம் வரை ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Sleep Talking: தூக்கத்தில் பேசுபவரா நீங்கள்? காரணம், சிகிச்சை குறித்து நிபுணர்கள்

வலிப்புத் தாக்கங்கள் மற்றும் குறைந்த இரத்த அளவு அதிர்ச்சி

நீரிழப்பு ஏற்படும் போது, உடலில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் சமநிலையை மீறுகின்றன. இதனால், உடலில் உள்ள செல்கள் மின் சமிக்ஞைகளை எடுத்துச் செல்ல முடியாது. இதனால், சுயநினைவு இழப்பு மற்றும் தசைச் சுருக்கம் போன்றவை ஏற்படலாம்.

நீரிழப்பு காரணமாக உடலில் இரத்த அளவு குறைகிறது. இந்த குறைந்த இரத்த அளவு அதிர்ச்சி மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். மேலும், இது இரத்த அழுத்தம் மற்றும் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவதற்கு வழிவகுக்கிறது.

நீரிழப்பு நோயை எவ்வாறு தவிர்ப்பது?

நீரிழப்பு நோய்க்கு முக்கிய காரணம் உடல் நீரேற்றம் இல்லாமல் இருத்தல் ஆகும். நீரேற்றமாக இருக்க உதவும் சில பயனுள்ள குறிப்புகளைக் காணலாம்.

  • தாகம் எடுக்காத போதும், தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு நாளும் 6 முதல் 8 கப் அளவிலான தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பகல் மற்றும் இரவு நேரங்களில் 6 கப் தண்ணீரை சமநிலையுடன் எடுத்துக் கொள்ளவும்.
  • பழச்சாறுகள் உள்ளிட்ட ஆரோக்கியமான மாற்றுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அன்றாட உணவுகளில் சில திரவ உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், உடலை நீரேற்றமாக வைத்திருக்க முடியும். நீரிழப்பு ஏற்பட்ட பிறகு சிக்கல்களில் இருந்து குணமடைய முயற்சிப்பதை விட, நீரிழப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவது சிறந்தது.

இந்த பதிவும் உதவலாம்: Asthma During Monsoon: மழைக்காலத்தில் ஆஸ்துமாவை தடுக்கும் முறைகள்…

Image Source: Freepik

Read Next

Covid Variant Ba 2.86: புதிய வகை கொரோனா மாறுபாடு பிஏ.2.86 அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள்

Disclaimer

குறிச்சொற்கள்