Doctor Verified

Covid Variant Ba 2.86: புதிய வகை கொரோனா மாறுபாடு பிஏ.2.86 அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள்

  • SHARE
  • FOLLOW
Covid Variant Ba 2.86: புதிய வகை கொரோனா மாறுபாடு பிஏ.2.86 அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள்


கோவிட் 19 மாறுபாடு பிஏ.2.86

UNDAC & ஜெனிவாவின் பொது சுகாதாரத் தலைவர் டாக்டர் சபின் கபாசியின் கூற்றுப்படி, BA.2.86 ஆனது கோவிட்-19 நோய்க்குக் காரணமான SARS-CoV-2-ன் ஒமிக்ரான் மாறுபாட்டின் புதிய துணை வகையைச் சேர்ந்ததாகும். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் உலகில் சில நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மற்ற நாடுகளும் இதன் கண்காணிப்பைத் தொடர வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இந்த புதிய வகை கோவிட்-19 மாறுபாடு பிஏ.2.86 அதன் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மரபணு மாற்றங்களால் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Tooth Decay: தீரா பல் வலியை தடுக்க உகந்த வைத்தியம்!

புதிய கோவிட் மாறுபாடு பிஏ.2.86 அறிகுறிகள்

கோவிட்-19-இன் மற்ற மாறுபாடு வகைகளைப் போல, இந்த புதிய வகை கோவிட் மாறுபாட்டின் அறிகுறிகளும் இருக்கும். தீவிர காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், தலைவலி, தொண்டை வலி, பசியிழப்பு போன்றவை பிஏ.2.86-ன் அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

இந்த புதிய வகை மாறுபாடு பிஏ.2.86 முந்தைய மாறுபாடுகளை விட வேகமாக பரவுவதற்கும், கடுமையான நோய் தாக்கத்திற்கும் எந்த ஆதாரமும் இல்லை எனினும், மாறுபாட்டின் பகுப்பாய்வில் இந்த குறிப்பிடத்தக்க சவாலானது புதிய கோவிட்-19 வழக்குகளின் குறைக்கப்பட்ட சோதனை மற்றும் மரபணு பகுப்பாய்வு ஆகும்.

புதிய கோவிட் மாறுபாடு பிஏ.2.86 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கோவிட்-19 புதிய மாறுபாடு பிஏ.2.86 தாக்கங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ள கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டாலும், தனிநபர்கள் நோய்த்தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  • தேவையற்ற வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
  • பயணம் செய்யும் போது குறிப்பாக பொது இடங்களில் முகமூடியை அணிந்து கொள்ள வேண்டும்.
  • காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பின், மருத்துவரை உரிய நேரத்தில் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.
  • ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி முறைகளைக் கையாள்வதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Liver Healthy Tips: கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்களுக்கான டிப்ஸ்!

Image Source: Freepik

Read Next

உறக்கம் முக்கியம்: தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்