What herb makes you not want sugar: யாருக்குத் தான் இனிப்பு என்றால் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இனிப்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் இனிப்பு என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது சர்க்கரை ஆகும். ஆனால், இந்த சுவையான சர்க்கரை உட்கொள்ளல் ஆனது மீண்டும் மீண்டும் அதை சுவைக்கத் தூண்டுகிறது. இவ்வாறு சுவைக்காக சர்க்கரையை சாப்பிடுவது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது உடல் எடை அதிகரிப்பு, இதய நோய் பாதிப்பு மற்றும் இன்னும் சில உடல்நல அபாயங்களுக்கு வழிவகுக்கலாம்.
எனவே, இந்த அதிகளவிலான சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். பொதுவாக, உணவு உணர்திறன், நீண்ட மன அழுத்தம், தனிமை உணர்வுகள், இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்றத்தாழ்வு அல்லது ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் போன்றவை கூட நம்மை இனிப்புப் பொருள்கள் சாப்பிட ஏங்க வைக்கலாம். எனினும், அதிக இனிப்பு உணவுகள் சாப்பிடுவது சிறந்ததாக இருக்காது. சர்க்கரை மிகவும் அடிமையாக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
எனவே, நீண்ட காலத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை விரும்பினால், சர்க்கரை உட்கொள்ளலைக் குறைக்கலாம். அதிர்ஷ்டவசமாக, சில மசாலா பொருள்கள் சர்க்கரை பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் சர்க்கரை பசியைக் கட்டுப்படுத்த உதவும் மசாலா பொருள்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஸ்வீட் சாப்பிடனும் போல தேனுதா.? அப்போ இந்த பழங்களை சாப்பிடுங்க..
சர்க்கரை பசிக்குக் காரணங்கள்
ஹெல்த்ஷாட்ஸ் தளத்தில் குறிப்பிட்டபடி, சர்க்கரையைச் சேர்க்கும் போது, நம் உடலில் மூளையில் உள்ள நியூரோட்ரான்ஸ்மிட்டர் செரோடோனின் சுரப்பை அதிகரிக்கிறது. அதே சமயம், பீட்டா-எண்டோர்பின்கள் என்ற இயற்கையான வலி நிவாரணிகள் மிகவும் நன்மை பயக்கும். இவை பதட்டத்தைத் தணிக்க உதவுகிறது.
முக்கிய கட்டுரைகள்
மேலும், நம் உடலில் மக்னீசியம் இல்லாததே சர்க்கரைக்கான நமது முடிவில்லாத விருப்பத்திற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணமாக அமைகிறது. எனவே கீரை, டார்க் சாக்லேட், பூசணி விதைகள் மற்றும் கீரை போன்ற மக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
சர்க்கரை பசியைக் கட்டுப்படுத்த உதவும் மசாலாப் பொருட்கள்
சர்க்கரை பசியைக் கட்டுப்படுத்துவது சவாலானதாகும். குறிப்பாக இந்திய உணவு வகைகளில் பிரபலமாக இருக்கும் சர்க்கரை நிறைந்த இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகளின் பரவலின் காரணமாக, சர்க்கரை பசியைக் குறைப்பது சவாலானதாக அமைகிறது. இதில் சர்க்கரை பசியைக் குறைக்க உதவும் மசாலா பொருள்களைக் காணலாம்.
வெந்தய விதைகள்
வெந்தய விதைகள் என்ற மெத்தி விதைகளில் இன்சுலின் சுரப்பைத் தூண்டும் ஒரு அமினோ அமிலம் நிறைந்துள்ளது. சிறந்த வழியாக, இவற்றை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சாப்பிடுவது, அல்லது பொடியாக அரைத்து கறி மற்றும் பருப்புகளில் சேர்ப்பது மிகவும் நன்மை பயக்கும்.
கிராம்பு
கிராம்பு உட்கொள்வது இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும், இரத்தத்தில் குளுக்கோஸ் செறிவைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது. இதை கறிகள், அரிசி உணவுகள் அல்லது தேநீர்களில் கூட சேர்த்து சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஸ்வீட்ஸ் சாப்பிடுவதை விடாமலே சர்க்கரை பசியைக் குறைக்கலாம்.. நிபுணர் சொன்ன இந்த 4 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
இலவங்கப்பட்டை
டால்சினி என்றழைக்கப்படும் இலவங்கப்பட்டை, இன்சுலின் செயல்பாட்டைப் பின்பற்றுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்துவதாகவும், செல்களுக்குள் குளுக்கோஸ் போக்குவரத்தை அதிகரிப்பதாகவும் அறியப்படுகிறது.
ஏலக்காய்
இது ஒரு தனித்துவமான சுவை கொண்ட ஒரு பிரபலமான நறுமண மசாலா மற்றும் சர்க்கரை பசியைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை தேநீர், இனிப்பு வகைகள் அல்லது அரிசி உணவுகளில் கூட சேர்க்கலாம்.
இஞ்சி
இஞ்சி உட்கொள்வது இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதன் சுவையானது பசியைக் குறைக்கிறது. இது காலை தேநீரில் ஒரு பிரபலமான கூடுதலாகும்.
ஆரோக்கியமான, சர்க்கரை இல்லாத உணவிற்கு மசாலாப் பொருள்களைச் சேர்க்கலாம். இதை மெலிந்த புரதங்கள், நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் முழு தானியங்களுடன் உணவில் சேர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனினும், இந்த மசாலா பொருள்களில் ஏதேனும் ஒவ்வாமை அல்லது எதிர்வினையை கவனித்தால், உடனடியாக ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: சீனி சாப்பிடுவதை சட்டுனு நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா.?
Image Source: Freepik