கோதுமை சப்பாத்தி vs மல்டி கிரைன் சப்பாத்தி: எது ஆரோக்கியமானது என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்திய உணவில் சப்பாத்தி ஒரு முக்கிய உணவாகும். சப்பாத்தி தினசரி உணவாக காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளுடன் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த கட்டுரை சோளம், கோதுமை, ராகி என ஒரே ஒரு தானியத்தை வைத்து தயாரிக்கப்படும் சிங்கிள் தானிய சப்பாத்தியா அல்லது பலவகையான தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மல்டி கிரைன் சப்பாத்தி நல்லதா என அறிந்து கொள்ளலாம்.
  • SHARE
  • FOLLOW
கோதுமை சப்பாத்தி vs மல்டி கிரைன்  சப்பாத்தி: எது ஆரோக்கியமானது என்று உங்களுக்குத் தெரியுமா?


வட இந்திய மாநிலங்களில் பெரும்பாலான வீடுகளில் சப்பாத்தி தினமும் காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் உண்ணப்படுகிறது. தற்போது தென்னிந்தியாவில் கூட பெரும்பாலான வீடுகளில் அரிசி மற்றும் அரிசி சார்ந்த இரவு உணவுகளுக்குப் பதிலாக சப்பாத்தி சாப்பிடுகின்றனர். நாட்டில் கோதுமை மாவு சப்பாத்திகள் அதிக அளவில் நுகரப்படுகின்றன. இருப்பினும், கோதுமையில் அதிக அளவில் பசையம் காணப்படுகிறது. இதனால் வெயிட் லாஸ் செய்ய விரும்புவோர் அதனை சாப்பிடுவது கிடையாது.

இதனால் எந்த சப்பாத்தி உடல் நலத்திற்கு சிறந்தது என்பதில் பலருக்கு குழப்பம் உள்ளது. பெரும்பாலான மக்கள் மல்டிகிரைன் சப்பாத்திகளையே சிறந்ததாகக் கருதுகின்றனர். சிங்கிள் தானியத்தால் செய்யப்பட்ட சப்பாத்திகள் அல்லது பல தானிய மாவில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்திகள் இடையிலான ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

சிங்கிள் கிரைன் சப்பாத்திக்கும் மல்டி கிரைன் சப்பாத்திக்கும் என்ன வித்தியாசம்?:

பெயரில் இருப்பது போலவே, ஒற்றை தானிய சப்பாத்திகள் ஒரே வகை தானியத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலான மக்கள் கோதுமை மாவை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். சப்பாத்திக்கு இரண்டுக்கும் மேற்பட்ட தானியங்களைக் கலந்து பல தானிய மாவு தயாரிக்கப்படுகிறது. பல தானிய சப்பாத்தி மாவு பல்வேறு தானியங்கள் மற்றும் விதைகளைச் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. கோதுமை, தினை, ஓட்ஸ், கொண்டைக்கடலை, பார்லி, சோளம் போன்றவை. பல தானிய மாவில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே, இந்த பல தானிய சப்பாத்தி மாவு அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளது.

எந்த சப்பாத்தி ஆரோக்கியமானது?

ஒற்றை தானிய சப்பாத்தி மாவு மற்றும் பல தானிய சப்பாத்தி மாவு இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்போது, உணவுத் தேவைகளையும் பட்ஜெட்டையும் கருத்தில் கொள்வது அவசியம். இரண்டு மாவுகளும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இரண்டிலும் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு அமிலங்கள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

 

 

image
Chapati-1-1732503873266.jpg

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்துகின்றன. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. பாரம்பரிய கோதுமை சப்பாத்தியை விட பல தானிய சப்பாத்தியில் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

பல தானிய சப்பாத்திகளை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை மிகவும் திறம்பட கட்டுப்படுத்த உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் மேம்படுத்த உதவும் சோளம், ராகி சப்பாத்திகள் போன்ற ஒற்றை தானியத்திலிருந்து தயாரிக்கப்படும் சப்பாத்திகளை சாப்பிடுவது நல்லது.

Image Source: Free

Read Next

இதய ஆரோக்கியம் முதல் சரும ஆரோக்கியம் வரை.. கருப்பு கொண்டைக்கடலை சாப்பிடுவதன் நன்மைகள் இங்கே..

Disclaimer

குறிச்சொற்கள்