Doctor Verified

Earphones Side Effects: நீண்ட நேரம் இயர்போன் பயன்படுத்துபவர்களா நீங்கள்? இதை தெரிஞ்சிக்கோங்க

  • SHARE
  • FOLLOW
Earphones Side Effects: நீண்ட நேரம் இயர்போன் பயன்படுத்துபவர்களா நீங்கள்? இதை தெரிஞ்சிக்கோங்க


Side Effects Of Using Earphones Too Much: நடைபயிற்சி, தூக்கம், உள்ளிட்ட எல்லா நேரங்களிலும் இயர்போன்களை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இளைய தலைமுறையினர் பெரும்பாலும் ஹெட்போன்கள், மொபைல் பயன்பாடு இல்லாமல் இருப்பதில்லை. சிலர் படிக்கும் போதும் ஹெட்போன்களைப் பயன்படுத்துவர். ஆனால், இது ஒரு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையாகும். இது உடல் மற்றும் மனதிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
அதிகளவு இயர்போன்களைப் பயன்படுத்துவது கற்பனை செய்ய முடியாத அளவிலான உடல் நலக்கேடுகளை ஏற்படுத்தும். இவ்வாறு ஹெட்போன்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல அபாயங்கள் குறித்து குருகிராம், மேக்ஸ் ஹெல்த்கேர், ENT & தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சைத் துறையின் இயக்குநர் மற்றும் HOD டாக்டர் ரவீந்தர் கெரா அவர்கள் விளக்கியுள்ளார்.

இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

இயர்போன் இல்லாமல் தூங்க முடியாது, படிக்க முடியாது என்ற அளவிற்கு இயர்போன் உபயோகத்திற்கு ஒருவர் அடிமையாகலாம். ஆனால், இயர்போன்களில் வெளியேறும் ஒலி, செவியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. சில சமயங்களில் செவிப்பறைக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தலாம். தினமும் நீண்ட இயர்போன்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து டாக்டர் ரவீந்தர் கெரா கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்

காது வலி

காது வலி ஆனது தினந்தோறும் நீண்ட நேரம் இயர்போன்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பொதுவான விளைவுகளில் ஒன்றாகும். இதில், அதிகப்படியான சத்தம் காதுகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டு செவிப்பறையை பாதிக்கிறது. மேலும், இயர்போன்கள் அல்லது ஹெட்போன்களின் பயன்படுத்துவது லேசானது முதல் கடுமையான காது வலியை ஏற்படுத்தலாம். எனவே, காதின் வெளிப்புறத்தில் அதிக அழுத்தம் மற்றும் செவிப்பறைகளில் காது வலி போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது.

காது தொற்று

காதில் நீண்ட நேரம் இயர்போன்கள் அல்லது ஹெட்போன்கள் செருகப்பட்டிருப்பின், அது காற்றுப்பாதைக்கு தடையாக மாறும். இந்த அடைப்பு பல்வேறு விதமான காது நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கு கரணமாகலாம். மேலும், இயர்போன்களை அதிகளவு பயன்படுத்துவதால் பாக்டீரியாக்கள் பெருகும். குறிப்பாக இயர்போன்களை பகிர்ந்து பயன்படுத்துதலைத் தவிர்க்க வேண்டும். இதில் ஒருவர் காதில் ஏற்படும் தொற்றுகள் ஹெட்போன் மூலமாக, மற்றவர்கள் காதிற்கு மாற்றப்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Boost Brain Power: மூளை ஆற்றலை அதிகரிப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்

மயக்கம் ஏற்படுவது

இயர்போன்கள் அதிகமாகப் பயன்படுத்துவதால், வெர்டிகோ எனப்படும் உடல்நிலைக் குறைபாடு ஏற்படலாம். வெர்டிகோ என்பது தலைச்சுற்றல் பிரச்சனையாகும். இது எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இயர்போன்கள் வழியாக வரும் உரத்த ஒலிகள், காதின் கால்வாயில் அழுத்தத்தை அதிகரித்து தலைச்சுற்றலை ஏற்படுத்தும்.

கவனம் இல்லாமல் போவது

இயர்பட்ஸ்கள் மிகச்சிறியதாக இருக்கும். இவை செவிப்பறையில் பெரும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஹெட்போனில் இருந்து வரும் ஒலி காதுகளில் இருந்து மூளைக்குப் பயணித்து நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. இது நினைவாற்றல் மற்றும் கவனத்தைக் குறைக்கலாம். மேலும், நீண்ட நேரம் இயர்போன்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் கவனம் செலுத்துதல் திறன் பலவீனமடையலாம்.

செவித்திறன் இழப்பு

தினமும், நீண்ட நேரத்திற்கு இயர்போன்களைப் பயன்படுத்துவது காது கேளாமை உள்ளிட்ட கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இயர்போன்கள் அல்லது ஹெட்போன்களில் இருந்து வரும் ஒலி மிகவும் உணர்திறன் கொண்டதாகும். காதுகளில் பல செல்கள் உள்ளன. இந்த செல்கள் சிறிய முடி போன்ற அமைப்பைக் கொண்டுள்ளன. இவை காதுகளில் இருந்து மூளைக்குப் பயணிக்கும் ஒலிக்கான டிரான்ஸ்மிட்டராக செயல்படுகிறது. இது மேலும் செயலாக்கப்படுகிறது. அதிகமாக உரத்த ஒலி ஏற்படுவது நிரந்தர சேதத்தை ஏற்படுத்துகிறது. இது ஒலி பரிமாற்றத்தின் செயல்முறையைத் தொந்தரவு செய்வதாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Sleep Talking: தூக்கத்தில் பேசுபவரா நீங்கள்? காரணம், சிகிச்சை குறித்து நிபுணர்கள்

Image Source: Freepik

Read Next

Vitamin B12 Benefits: வைட்டமின் பி12 நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்