Drumstick For Summer: கோடையில் முருங்கைக்காய் சாப்பிட்டால் இந்த 5 பிரச்சனைகள் கிட்ட கூட வராது!

  • SHARE
  • FOLLOW
Drumstick For Summer: கோடையில் முருங்கைக்காய் சாப்பிட்டால் இந்த 5 பிரச்சனைகள் கிட்ட கூட வராது!


பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதன் ஒரு பகுதியாக கோடை காலத்தில் முருங்கைக்காய் சாப்பிடுவதால் என்னென்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என அறிந்து கொள்ளுங்கள்.

அப்படி என்ன ஸ்பெஷல்?

சீசன் மாறும் போது உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அந்தந்த சீசனில் கிடைக்கக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை கட்டாயம் சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில் இயக்குநர் பாக்யராஜ் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆன முருங்கைக்காய் கோடை காலத்தில் எப்படியெல்லாம் நன்மை புரிகிறது என பார்க்கலாம்.

முருங்கைக்காயைப் பொறுத்தவரை பொதுவாக தாம்பத்ய பிரச்சனைகளுக்கு வரப்பிரசாதம் போல பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இது நீர்ச்சத்து நிறைந்த காய்கறியாகும். இதனால் கோடை காலத்தில் அதனை உட்கொள்வது உடல் சூட்டை தணிக்கவும், நீரேற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

முருங்கைக்காயில் இரும்பு, கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’, வைட்டமின் பி12 ஆகிய சத்துக்களுடன், உடலுக்கு தேவையான நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் போன்ற நுண்ணூட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.

கோடையில் முருங்கைக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

எடையை குறைக்க நினைக்கிறீங்களா?

முருங்கைக்காயில் உள்ள நார்ச்சத்து, சாப்பிட்டு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை ஏற்படுத்துவதோடு, அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்கிறது. இது எடை குறைக்க உதவுகிறது.

வயிற்று தொல்லை இனி இல்லை:

முருங்கைக்காயில் நார்ச்சத்து அதிகம். இவற்றை உட்கொள்வதால் வாயு, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குறையும். இதில் உள்ள நார்ச்சத்து உணவு சரியாக செரிமானம் ஆக உதவுகிறது.

அழற்சி எதிர்ப்பு:

முருங்கைக்காயில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் பினாலிக் அமிலம் அழற்சி எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் வீக்கம் குறையும். மேலும், இது கீல்வாதம் மற்றும் ஒவ்வாமை அறிகுறிகளைக் குறைக்கிறது.

உடல் குளிர்ச்சி பெற:

கோடையில் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் நீரிழப்பை ஈடு செய்வது என்பது சவாலான காரியம். அப்படியானால் இந்த பிரச்சனையைச் சரி செய்ய முருங்கைக்காய் உங்களுக்கு உதவும். ஏற்கனவே கூறியது போல், முருங்கைக்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளது.

இதனால் நீரிழப்பு பிரச்சனை ஏற்படாது. உடலும் குளிர்ச்சியாக இருக்கும். முருங்கைக்காயில் குளிர்ச்சி தன்மை உள்ளது. அவை உடலை உள்ளே இருந்து குளிர்ச்சியாக வைத்திருக்கும். இவற்றை உட்கொள்வதால், உடலில் ஏற்படும் அதிக வியர்வை, சோர்வு, வெயிலின் தாக்கம் போன்ற பிரச்சனைகள் குறையும்.

ரத்த சர்க்கரை:

இரத்த சர்க்கரை அளவை சீராக்கி அதை கட்டுக்குள் வைப்பதுதான் முருங்கைக்காயின் பிரதான நன்மை. அதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் பித்தப்பையின் வேலையை மேம்படுத்துவதால் நீரிழிவு நோயாளிக்குக்கு நன்மைகளை அள்ளித்தருகிது.

ImageSource: Freepik

Read Next

Raw Mango Benefits: மாங்காயில் இவ்வளவு விஷயம் இருக்கா.?

Disclaimer

குறிச்சொற்கள்