Sugar During Pregnancy: கர்ப்ப காலத்தில் சர்க்கரை ஏன் அதிகரிக்கிறது?

  • SHARE
  • FOLLOW
Sugar During Pregnancy: கர்ப்ப காலத்தில் சர்க்கரை ஏன் அதிகரிக்கிறது?


கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய சர்க்கரை நோயானது, பொதுவாக 6 மாதங்களுக்குப் பிறகு சரியாகிவிடும். முன்பிருந்தே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, பிறகு கர்ப்பம் தரித்திருந்தால், அது சர்க்கரை நோய் எனப்படும்.

பெரும்பாலான பெண்களில், கர்ப்பகால நீரிழிவு நோய் இருப்பது வெளிப்படையான அறிகுறிகளை கொண்டிருக்காது. உங்களுக்கு தாகம் அதிகமாக இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தால் சுகர் டெஸ்ட் கொள்வது நல்லது.

என்ன பிரச்சனைகள் வரும்:

  • கர்ப்ப காலத்தில் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லை என்றால், அமினோடிக் திரவம் அதிகரிப்பு, குழந்தையின் அதிக எடை அதிகரிக்கும், குறை பிரசவம், கருப்பையிலேயே குழந்தை இறந்துவிடுவது, பிரசவத்திற்குப் பிறகு அதிக இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
  • அதிக எடை, பிசிஓடி, குடும்பத்தில் நீரழிவு நோயாளிகளைக் கொண்ட பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • மூன்றில் ஒரு பங்கு பெண்கள் பிரசவத்திற்குப் பிறகும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
  • கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டால், குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம், இதய நோய், நரம்பியல் பிரச்சனைகள் ஏற்படலாம். குழந்தைக்கு டைப்-2 நீரிழிவு நோய் உருவாக்கும் அபாயம் உள்ளது.

என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:

  • கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயைத் தடுப்பதற்கு யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள், நார்ச்சத்து அதிகமுள்ள மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.
  • பழங்கள், கறிவேப்பிலை, முழு தானியங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். இருப்பினும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையின் படி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • வாரத்தில் சில நாட்கள் 30 நிமிடங்கள் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி போன்ற மெதுவான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
  • மருத்துவரின் அறிவுரையின் படி இயற்கையாக கருத்தரித்த பெண்களுக்கு சர்க்கரை நோய் இருப்பின், தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்திற்கு வேகமான உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடில்லாமல் இருப்பவர்களுக்கு மட்டுமே இன்சுலின் தேவைப்படுகிறது. கர்ப்பகால நீரிழிவு ஒரு தீவிர பிரச்சனையாக கருதப்படுகிறது. அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிதல், முறையான ஸ்கிரீனிங் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது மட்டுமே ஒரே தீர்வாகும்.

Read Next

Normal Delivery Tips: நார்மல் டெலிவரிக்கு 9வது மாதத்தில் இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க!!

Disclaimer