Alcoholism: தொடர் ஆல்கஹால் பயன்பாடு ஒரு நோயா? தினசரி குடிக்க காரணம் என்ன?

  • SHARE
  • FOLLOW
Alcoholism: தொடர் ஆல்கஹால் பயன்பாடு ஒரு நோயா? தினசரி குடிக்க காரணம் என்ன?


இதன் காரணமாக, அவர்களின் மனநிலை மோசமாக பாதிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் உடல்நிலையும் பாதிக்கப்படுகிறது. நாராயணா மருத்துவமனையின் மருத்துவருமான டாக்டர் பங்கஜ் வர்மா இதுகுறித்து கூறுகையில், ஒரு நபர் மது அருந்துவதில் எந்த அறிகுறிகளை அனுபவிக்கிறார் என்பதை அறிந்துக் கொள்வது அவசியம்.

மது அருந்துதல் ஒரு நோயா?

ஆல்கஹால் பயன்பாட்டுக் கோளாறு என்பது ஒரு மருத்துவ நிலை. இது மூளையின் செயல்பாடு தொடர்பான பிரச்சனை ஆகும். அதை கட்டுப்படுத்த ஒரு உளவியலாளர் மற்றும் மருத்துவரின் உதவி தேவைப்படலாம்.

உட்கொள்ளும் மதுவின் அளவு மற்றும் அதன் விளைவுகளைப் பொறுத்து, இந்த கோளாறு லேசான, மிதமான மற்றும் கடுமையானது என பிரிக்கப்படுகிறது. மது அருந்தும் பழக்கம் குறுகிய காலத்திலேயே வேகமாக அதிகரிக்கும் என்பதை நினைவில் வைக்க வேண்டும். இது மது போதை மற்றும் மது அடிக்ட் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆல்கஹால் பயன்பாட்டுக் கோளாறுக்கான காரணங்கள் என்ன?

ஆல்கஹால் பயன்பாட்டுக் கோளாறுக்கான சரியான காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் சில காரணிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

குழந்தை பருவத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை மறக்க ஒரு நபர் குடிக்க ஆரம்பிக்கலாம்.

மன அழுத்தத்தை போக்க மது அருந்துதல்.

உடல் அல்லது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பலியாகும்போது மது அருந்துதல்.

இதெல்லாம் ஒருபுறம் என்றாலும் சிலர் சந்தோஷமாக இருந்தாலும், சோகமாக இருந்தாலும் மது அருந்துவார்கள். வீட்டில் அசைவம் எடுத்தாலும் சரி, எதிர்பார்த்த நிகழ்வு நடக்கும்போதும் சரி அந்த நபர் தேடிச்செல்வது மதுவை தான்.

மது அருந்துதல் அடிக்ட் அறிகுறிகள்

திட்டமிடாமல் தினமும் குடிப்பது

அதிக நேரம் குடிப்பது

மது அருந்தாத போது எரிச்சல் உணர்வு

மது குடிக்க அடிக்கடி தூண்டுதல்

முக்கியமான தினசரி வேலைகளைத் தவிர்த்தல் மற்றும் மது அருந்துதல்

மது அருந்துவதன் மூலம் மன அழுத்தம் இல்லாமல் உணர்வு

மது அருந்துவதை நிறுத்த முயற்சித்த பிறகும் அதை கைவிட முடியவில்லை

மது அருந்துவதைக் குறைத்த பிறகு, உடலில் கனமான உணர்வு, அமைதியின்மை, வியர்வை, தூக்கமின்மை, உடலில் நடுக்கம் போன்ற அறிகுறிகளை ஏற்படும்.

ஆல்கஹால் பிரச்சனை சிகிச்சை

மனநல ஆலோசகர்கள் மற்றும் உளவியலாளர்கள், பேச்சு சிகிச்சையின் மூலம் ஒரு நபரின் நடத்தையைப் புரிந்துகொண்டு அதன்மூலம் சிகிச்சை அளிக்க முயற்சிக்கின்றனர்.

மருந்துகள்

இந்த சிக்கலை சமாளிக்க, மருத்துவர் சில மருந்துகளை கொடுக்கலாம். இதன் மூலம் மது அருந்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் நீங்கும். மேலும், மன அழுத்தத்தை போக்க மருந்துகளையும் ஆலோசனையும் எடுத்துக் கொள்ளலாம்.

குடிப்பழக்கத்தை தவிர்க்க ஆதரவு குழு

குடிப்பழக்கத்தை தவிர்க்க, நீங்கள் ஒரு ஆதரவு குழுவில் சேரலாம். அவர்கள் ஒரு ஆதரவு குழுவாக வேலை செய்கிறார்கள். இந்த குழுக்களில் சேருவதன் மூலம், மக்களின் மன அழுத்தம் மற்றும் அடிக்கடி குடிப்பழக்கம் ஆகியவற்றைக் குறைக்கலாம். மேலும், நபர் மற்றவர்களுடன் பேசுவதை நன்றாக உணர்கிறார்.

மது அருந்தும் பழக்கத்தை கைவிட மனதை திடப்படுத்துவது சிறந்த வழியாகும். உங்கள் குடும்பத்தாரை, உங்கள் உடல் ஆரோக்கியத்தை, பொருளாதார வீண் செலவை சிந்தியுங்கள். முடியாதபட்சத்தில் மருத்துவர், ஆலோசகரை அணுகுங்கள்.

Image Source: FreePik

Read Next

World Purple Day: வலிப்பு நோய் வகை, அறிகுறி மற்றும் சிகிச்சை முறை…

Disclaimer

குறிச்சொற்கள்