Anti Aging Herbs: முதுமையை எதிர்த்து இளமையை மீட்டெடுக்க உதவும் அற்புதமான இயற்கை மூலிகைகள்

  • SHARE
  • FOLLOW
Anti Aging Herbs: முதுமையை எதிர்த்து இளமையை மீட்டெடுக்க உதவும் அற்புதமான இயற்கை மூலிகைகள்

முதுமையை விலக்கி இளமைத் தோற்றத்திற்கு உதவும் அற்புத மூலிகைகள்

சில மூலிகைகள் முதுமைத் தோற்றத்தின் ஆதாரமான முகத்தின் சுருக்கங்களை நீக்கி இளமைத் தோற்றத்திற்கு உதவி புரிகின்றன.

இலவங்கப்பட்டை

சரும பாதுகாப்பிற்கு இலவங்கப்பட்டை மூலிகை சரியான தீர்வாகும். இது நீண்ட காலத்திற்கு சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகளுக்கு எதிராகப் போராட உதவுகிறது. மேலும், இது சுருக்கங்களை மென்மையாக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Ways To Remove Dark Spots: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் மறைய சில வழிகள்!

ஆர்கனோ

ஆர்கனோ வைரஸ் தடுப்பு மருந்தாகச் செயல்படும் சிறந்த மூலிகையாகும். பொதுவாக இவை ஜலதோஷம் உள்ளிட்ட சுவாசநோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், இவை சருமத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சுருக்கங்களை குறைக்க உதவுகிறது.

ரோஸ்மேரி

ரோஸ்மேரி மூலிகை, முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை எதிர்த்துப் போராடும் ஒரு சிறந்த மூலிகையாகும். இதற்கு ரோஸ்மேரியில் உள்ள ரோஸ்மரினிக் அமிலம் என்ற கலவையே காரணமாகும். இது சூரியன் மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படக்கூடிய சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும், இவை கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி ஆரோக்கியமான சருமத்திற்கு உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Natural Skin Care Tips: அழகான சருமத்திற்கு இயற்கையான சில வீட்டுக்குறிப்புகள்!

குதிரைவாலி

இது சிலிக்காவின் அதிக செறிவு கொண்ட மூலிகையாகும். இது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்த உதவுகிறது.

மஞ்சள்

பொதுவாக, மஞ்சள் ஒரு இயற்கை மூலிகையாகும். இது வயதை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள குர்குமின் என்ற கலவை கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி சுருக்கங்கள் மற்றும் சருமத்தில் ஏற்படும் கோடுகளின் தோற்றத்தைக் குறைக்க உதவுகிறது.

துளசி

இயற்கை மூலிகையான துளசி முகத்தின் சுருக்கங்களைப் போக்கி சருமத்தை மீட்டெடுக்க உதவுகிறது. இதற்கு துளசியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளே காரணம் ஆகும். இவை ஃப்ரீரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும், துளை சருமத்திற்கு கொலாஜனின் உற்பத்தியை அதிகரித்து சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Eye Dark Circles: கண் கருவளையங்கள் நீங்க வீட்டிலேயே பின்பற்ற வேண்டிய சில எளிய முறைகள்!

Image Source: Freepik

Read Next

Curd For Skin : வெறும் 10 நிமிடத்தில் பளீரென மாற 1 கப் தயிர் போதும்!

Disclaimer

குறிச்சொற்கள்