இன்றைய காலக்கட்டத்தில் மாரடைப்பால் குழந்தைகள், இளைஞர்கள் உயிரிழக்கின்றனர். நம் முன்னே சுறுசுறுப்பாக இருந்தவர்கள் கூட திடீரென இடிந்து உயிரை விட்டுப் போய்விடுகிறார்கள்.
ஒரு காலத்தில் உடல் பருமனாக இருப்பவர்களுக்கும், உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கும், வயதானவர்களுக்கும் மாரடைப்பு, இதயம் சம்பந்தமான நோய்கள் வரும். ஆனால் இப்போதெல்லாம் இளைஞர்கள் உயிரிழப்பது கவலை அளிக்கிறது.

நான் ஃபிட்டாக இருக்கிறேன், தொப்பை இல்லை… தினமும் ஜிம் செல்கிறேன், இதனால் எனக்கு மாரடைப்பு பிரச்சனை வராது என நினைக்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக ஜிம் செல்லும் பலரும் கூட மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.
எனவே இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதய நோய் பற்றி பலர் கொண்டிருக்கும் கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கட்டுக்கதை 1 : இளம் பெண்களுக்கு இதய நோய் வர வாய்ப்பில்லை?
இதய நோய் அனைத்து வயது பெண்களையும் பாதிக்கிறது என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கர்ப்பத்தடை மாத்திரைகள் மற்றும் புகைப்பிடிக்கும் இளம் பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் 20 சதவீதம் அதிகம். உட்கார்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவது ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது.
கட்டுக்கதை 2 : இதய நோய் பெண்களை விட ஆண்களை அதிக அளவில் பாதிக்கிறது?
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் படி, ஆண்களை விட பெண்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் இறப்புக்கு இதய நோய் முக்கிய காரணமாகும். 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் அல்லது இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் என முதுமைக்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டுக்கதை 3 : நீரிழிவு மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு இதய நோய் வராது
நீரிழிவு மருந்துகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. கண்பார்வை இழப்பு, நரம்பு பாதிப்பு, சிறுநீரக நோய்கள் போன்றவற்றை தடுக்கிறது. குறைந்த இரத்த சர்க்கரை அளவு இரத்த நாளங்களை பாதிக்கிறது. இது இதய நோயை உண்டாக்கும்.
கட்டுக்கதை 4 : இதய நோய் பரம்பரையாக இருந்தால், மருந்துகளால் எந்தப் பயனும் இல்லை
குடும்பத்தில் இதய நோய் இருந்தால், மற்றவர்களுக்கு அது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் சில நடவடிக்கைகள் அந்த ஆபத்தை குறைக்கலாம். உடல் செயல்பாடு, இதயத்திற்கு ஆரோக்கியமான உணவு, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், புகைபிடிப்பதைத் தவிர்ப்பது மற்றும் ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பது ஆகியவை இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.
கட்டுக்கதை 5 : புகைபிடிப்பதை நிறுத்துவது இதய நோய் அபாயத்தை குறைக்காது
புகைபிடிப்பதை நிறுத்துவது ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தாது. ஹார்வர்ட் ஹெல்த் படி, புகைபிடிப்பதை விட்டுவிட்டு ஒரு வருடத்திற்குப் பிறகு மாரடைப்பு ஆபத்து 50 சதவிகிதம் குறைகிறது.
கட்டுக்கதை 6 : தினமும் உடற்பயிற்சி செய்வது இதய நோயைத் தடுக்கும்
உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மட்டும் இதய நோய் அபாயத்தைக் குறைக்காது. ஹார்ட் ஃபவுண்டேஷனின் கூற்றுப்படி, தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அதிக கொழுப்பு, இரத்த அழுத்தம், புகைபிடித்தல் மற்றும் உடல் பருமன் போன்ற இதய நோய்க்கான பிற ஆபத்து காரணிகள் குறைவாகவே உள்ளன.
Image Source: Freepik