Managing Diabetes in Summer : பலர் கோடையில் விடுமுறைக்குச் செல்வது பற்றி யோசிப்பார்கள். ஆனால் கோடை காலம் ஆரம்பிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு கொஞ்சம் பிரச்சனையாகவெ இருக்கலாம். அதிக வெப்பம் காரணமாக சர்க்கரை நோயாளிகள் நீரிழப்புக்கு ஆளாக வாய்ப்புள்ளது. நீங்கள் சரியான நேரத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கக்கூடும், மேலும் நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இது கூடுதல் நீரிழழப்புக்கு வழிவகுக்கும். இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் சேதமடைதல் போன்ற பிரச்சனைகளால், வியர்வை சுரப்பிகள் சரியாக செயல்படாமல், உடல் அதிகமாக குளிர்ச்சியடைகிறது. இருப்பினும், நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், கோடை காலத்திலும் பயணம் செய்து மகிழலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பதட்டப்பட வேண்டாம்:
நீரிழிவு நோயாளிகள் தாகம் எடுக்காவிட்டாலும் கூட, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உடம்பில் நீர்ச்சத்து குறைவதைத் தடுப்பது மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார். அவர்கள் காஃபின் கலந்த காபி, குளிர்பானங்கள், எனர்ஜி பானங்கள் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவை உடலில் இருந்து தண்ணீரை வெளியேற்றி, குளுக்கோஸ் அளவை அதிகரிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நிழலில் இருக்க கவனமாக இருங்கள்:
கோடை வெப்பம் காரணமாக பகல் நேர்த்தில் சர்க்கரை நோயாளிகள் உடலில் குளுக்கோஸ் அளவில் மாற்றங்கள் ஏற்படலாம். இதனால் அது இன்சுலின் பயன்பாட்டையும் பாதிக்கக்கூடும். எனவே மற்ற நேரங்களை விட கோடைக்காலத்தில் நீரிழிவு நோய் அடிக்கடி பரிசோதிக்கப்பட வேண்டும். இன்சுலின் பயன்படுத்துபவர்கள் கூட தேவைக்கேற்ப அளவை தீர்மானிக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முடிந்தவரை நிழலில் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏசி அறைகளில் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
குளுக்கோஸ் கட்டுப்பாடு:
தளர்வான, வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள். பருத்தி ஆடைகள் சிறந்தது. ஏனெனில் அவை உடலை நன்றாக சுவாசிக்க அனுமதிக்கின்றன. வசதியான, சரியான அளவிலான காலணிகள் மற்றும் சாக்ஸ் அணிவது உங்கள் பாதங்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. உடற்பயிற்சியை குறைந்த சூரிய ஒளி நேரங்களில் மட்டுமே செய்ய வேண்டும். அல்லது நீங்கள் அதை நிழலில் செய்யலாம். குளுக்கோஸ் மாத்திரைகள் அல்லது பழச்சாறு போன்றவற்றை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். ஒருவேளை எப்போதாவது குளுக்கோஸ் அளவு குறைந்தால், இவற்றை எடுத்துக் கொண்டால் உடனடியாக அளவை அதிகரிக்க உதவும். இன்சுலினை குளிர்ந்த, சிறப்பு கொள்கலனில் சேமித்து வைக்க வேண்டும், இல்லையெனில் வெப்பத்தால் இன்சுலின் கெட்டுப்போகும் அபாயம் உள்ளது. ஏதேனும் மருந்துகளை மாற்ற வேண்டுமா என்று பார்க்க, பயணம் செல்வதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
தண்ணீர் மட்டுமல்ல:
ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு சராசரியாக 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் முக்கியமானது. தண்ணீரைத் தவிர வேறு திரவங்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் மோர் எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை இல்லாமல் எலுமிச்சை அல்லது தக்காளி சாறு குடிக்கலாம். நீங்கள் துளசி, சீரகம், புதினா தண்ணீர் குடிக்கலாம். முட்டைக்கோஸ், பச்சை காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் ஒரு துண்டு தர்பூசணியைக் கூட சாப்பிடலாம். பூசணிக்காய், சுரைக்காய், சீமை சுரைக்காய் மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றையும் தினமும் உட்கொள்ளலாம்.
சிற்றுண்டிகள்:
சர்க்கரை நோயாளிகள் கோடை காலத்தில் வெளியே சென்றாலே, ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட சிற்றுண்டிகளை எப்போதும் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே, முழு கோதுமை ரொட்டி, கிராக்கர்ஸ் மற்றும் பல தானிய ரொட்டிகளை உங்களுடன் எடுத்துச் செல்லலாம். உணவின் ஒரு பகுதியாக வறுத்த உணவுகள் குறைவாக இருக்க வேண்டும். மைதா மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட அரிசியை விட முழு கோதுமை மாவு மற்றும் பஃப்டு அரிசியைப் பயன்படுத்துவது நல்லது. உங்கள் உணவில் பழங்களுடன் ல்வேறு குறைந்த கலோரி கீரைகள் மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Image Source: Freepik