Is Thyroid Curable Permanently: தைராய்டு ஒரு சுரப்பி, இது தைராய்டு ஹார்மோனை வெளியிடுகிறது. இந்த சுரப்பி கழுத்துக்கு அருகில் அமைந்துள்ளது. தைராய்டு ஹார்மோன் நமது உடலின் பல செயல்பாடுகளை சீராக இயங்க உதவுகிறது. தைராய்டு சுரப்பி சரியாக செயல்படவில்லை என்றால், தைராய்டு நோய் ஏற்படலாம். தைராய்டு தொடர்பான பல வகையான நோய்கள் உள்ளது. இதில், ஹைப்பர் தைராய்டிசம், ஹைப்போ தைராய்டிசம் மற்றும் தைராய்டிடிஸ் ஆகியவை அடங்கும்.
உடல் தைராய்டு ஹார்மோனை அதிக அளவில் உற்பத்தி செய்தால், அது ஹைப்பர் தைராய்டிசம் என்று அழைக்கப்படுகிறது. மாறாக, சுரப்பி குறைந்த அளவில் தைராய்டு ஹார்மோனை வெளியிட்டால், அது ஹைப்போ தைராய்டிசம் எனப்படும். இந்த இரண்டு சூழ்நிலைகளையும் புறக்கணிக்க முடியாது.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம் : Thyroid In Children: குழந்தைகளுக்கு தைராய்டு ஏற்படுவதற்கான காரணங்களும், அறிகுறிகளும்
எனவே, பாதிக்கப்பட்ட நபர் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது அவசியம். சரியான தைராய்டு சிகிச்சையால், தைராய்டை முழுமையாக குணப்படுத்த முடியுமா? இல்லை வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டுமா? என்ற கேள்வி மக்கள் மனதில் அடிக்கடி எழுகிறது. இதற்கான பதிலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தைராய்டை முழுமையாக குணப்படுத்த முடியுமா?

சாரதா மருத்துவமனையின் பொது மருத்துவப் பேராசிரியர் டாக்டர் அனுராக் பிரசாத் கூறுகையில், “முறையான சிகிச்சை அளித்தால், தைராய்டு சுரப்பி சீராக இயங்குவதோடு, உடல் ரீதியான பிரச்னைகள் குறையும். ஆனால், தைராய்டை முற்றிலும் குணமாகும் என்று கூற முடியாது. உண்மையில், தைராய்டு சுரப்பியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அதற்கு வழக்கமான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை தேவைப்படுகிறது.
இதனுடன், சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையையும் பின்பற்றுவது அவசியம். அதுமட்டுமின்றி, ஒருவர் தனது உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இந்த புள்ளிகளை கவனத்தில் கொள்ளாவிட்டால், தைராய்டு ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படலாம் மற்றும் நபரின் உடல் பிரச்சினைகள் அதிகரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Thyroid Diet Plan: தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்?
மொத்தத்தில், தைராய்டு சுரப்பியில் பிரச்சனை இருந்தால், ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் தனது ஆரோக்கியத்தை கண்காணிக்க வேண்டும் மற்றும் வழக்கமான தைராய்டு பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
யாருக்கு தைராய்டு ஆபத்து அதிகம்?

யாருக்கெல்லாம் தைராய்டு ஏற்பட வாய்ப்பு அதிகம் என பார்த்தால், ழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் அல்லது ஆண்களுக்கு உருவாகலாம். ஆனால், ஒரு சிலருக்கு தைராய்டு வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது.
- குடும்பத்தில் யாருக்காவது ஏற்கனவே தைராய்டு பிரச்சனை இருந்தால், வருங்கால சந்ததியிநறுக்கு இந்தப் பிரச்சனை அதிகரிக்கலாம்.
- ஒருவருக்கு இரத்த சோகை, டைப் 1 நீரிழிவு போன்ற நோய்கள் இருந்தால், அவர்களுக்கு தைராய்டு பிரச்சனையும் இருக்கலாம்.
- சில மருந்துகளை நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டால், நோயை மோசமாக்கும்.
- 60 வயதைத் தாண்டிய பெண்களுக்கும் தைராய்டு அபாயம் அதிகம்.
இந்த பதிவும் உதவலாம் : Thyroid foods: தைராய்டு நோயாளிகள் இனிப்பு சாப்பிடுவது நல்லதா? இதோ உங்களுக்கான பதில்
தைராய்டு அறிகுறிகள் என்ன?

ஹைப்பர் தைராய்டிசம் ஏற்பட்டால், நோயாளியில் பின்வரும் அறிகுறிகளை அனுபவிப்பார்கள்-
- கவலை, எரிச்சல் மற்றும் பதட்டம்
- தூக்கமின்மை
- எடை இழப்பு
- தசை பலவீனம்
- மாதவிடாய் தொடர்பான பிரச்சனை
- உடல் மிகவும் சூடாக உணர்தல்
- கண் பிரச்சனைகள்
ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள்
- களைப்பு
- எடை அதிகரிப்பு
- விஷயங்களை நினைவில் கொள்வதில் சிக்கல்
- மாதவிடாய் மாற்றங்கள் மற்றும் அடிக்கடி கடுமையான இரத்தப்போக்கு
- குரலில் மாற்றம்
- மிகவும் குளிராக உணர்தல்
Pic Courtesy: Freepik