Expert

Buttermilk During Pregnancy: கர்ப்பிணிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மோர்! ஆரோக்கிய நன்மைகள் இங்கே!

  • SHARE
  • FOLLOW
Buttermilk During Pregnancy: கர்ப்பிணிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மோர்! ஆரோக்கிய நன்மைகள் இங்கே!


What are the benefits of drinking buttermilk during pregnancy: கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால், குழந்தை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உணவு தான் வழங்குகிறது. கர்ப்ப காலத்தில் நாம் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பல கேள்விகள் இருக்கும். அதில் ஒன்று தான், “கர்ப்ப காலத்தில் பெண்கள் மோர் சாப்பிடுவது நல்லதா?” குடிக்கலாம் என்றால், எவ்வளவு குடிக்க வேண்டும்? என்ற கேள்வி உங்கள் மனதிலும் இருந்தால், அதற்கான பதிலை இங்கே பார்க்கலாம்.

காய்ச்சிய பாலில் இருந்து தயிர் தயாரிக்கப்படுகிறது. தயிரில் இருந்து மோர் தயாரிக்கப்படுகிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. மோர் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் கர்ப்ப காலத்தில் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மோர் எப்படி உட்கொள்ள வேண்டும் மற்றும் எவ்வளவு குடிக்க வேண்டும் என்பது குறித்த மேலும் தகவலுக்கு, டெல்லியில் உள்ள ஹோலி குடும்ப மருத்துவமனையின் (Holi Family Hospital, Delhi) உணவியல் நிபுணர் சனா கில்லிடம் பேசினோம். அவர் கூறிய விஷயங்கள் இங்கே_

இந்த பதிவும் உதவலாம் : கர்ப்பகாலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

கர்ப்ப காலத்தில் மோர் எப்போது, எவ்வளவு குடிக்க வேண்டும்?

கர்ப்ப காலத்தில் மோர் காலை அல்லது உணவுடன் உட்கொள்வது மிகவும் நல்லது. அதே போல, இரவில் மோர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். இரவில் மோர் குடிப்பதால் அமில வீச்சு ஏற்படலாம். இதன் காரணமாக, நெஞ்செரிச்சல், இருமல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும். கர்ப்ப காலத்தில் தினமும் மோர் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால், அளவாக சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு கர்ப்பிணிகள் 1 முதல் 1.5 கிளாஸ் மோர் உட்கொள்ளலாம்.

மோரில் உள்ள சத்துக்கள் என்னென்ன?

கர்ப்ப காலத்தில் மோர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. மோரில் அதிக அளவு கால்சியம் உள்ளது. எலும்புகள், ஆரோக்கியமாக இருக்க கால்சியம் அவசியம். மோர் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். 100 மில்லி மோரில் சுமார் 1 கிராம் புரதம் உள்ளது. உடலுக்கு ஆற்றலை அளிக்கும் ரிபோஃப்ளேவின் மோரில் உள்ளது. 100 மில்லி குறைந்த கொழுப்புள்ள மோரில் சுமார் 1 கிராம் கொழுப்பு உள்ளது.

இந்த பதிவும் உதவலாம் : கர்ப்ப காலத்தில் எந்த மாதிரியான உடற்பயிற்சிகள் பாதுகாப்பானவை

வீட்டிலேயே மோர் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

தயிர் - 1 கப்.
குளிர்ந்த நீர் - 2 கப்.
கருப்பு உப்பு - ¼ ஸ்பூன்.
கொத்தமல்லி மற்றும் புதினா - சிறிது.

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றவும்.
  • அதில், அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின்னர் அதில் குளிர்ந்த நீர் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
  • இறுதியாக, ஒரு டம்ளரில் மோர் எடுத்து கொத்தமல்லி அல்லது புதினா சேர்க்கவும்.

Pic Courtesy: Freepik

Read Next

Pregnancy Tips: கர்ப்ப காலத்தில் வரும் பொதுவான நோய்த்தொற்றுகள்!

Disclaimer