Sat Sep 12, 2026 | 12:47 AM IST

Onion for Hair: குளிர்காலத்தில் தலை முடிக்கு வெங்காயச் சாறு தடவுவது நல்லதா?

Can we apply onion juice on hair in Winter: வானிலை மாறும்போது நமது பராமரிப்பு வழக்கமும் மாறும். இந்தியாவில் தற்போது குளிர்காலம் துவங்கிவிட்டது. இந்நிலையில், முடி பராமரிப்பு மற்றும் தோல் பராமரிப்பு குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வீட்டு வைத்தியமாக நாம் குளிர்ச்சி விளைவைக் கொண்ட பல பொருட்களைப் பயன்படுத்துகிறோம்.

நம்மில் பலர் முடி ஆரோக்கியத்தை பராமரிக்க வெங்காய சாற்றை பயன்படுத்துவோம். முடி வளர்ச்சி, முடி மெலிவு, முடி உதிர்வு போன்ற பிரச்சினைகளை குறைக்க வெங்காயம் சிறந்த தீர்வு. ஆனால், வெங்காயச் சாற்றை குளிர்காலத்தில் பயன்படுத்தலாமா? என்ற கேள்வி நம் அனைவரின் மனதிலும் இருக்கும். இதன் பயன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Hair Growth Oil: அடர்த்தியா, நீளமா முடி வளர இந்த எண்ணெய்களை முயற்சி செஞ்சி பாருங்க!

குளிர்காலத்தில் வெங்காய சாற்றை தலைக்கு தடவுவது நல்லதா?

வெங்காயத்தை தலையில் தடவுவது மிகவும் நல்லது. அதிகப்படியான முடி உதிர்வு அல்லது குறைந்த வளர்ச்சிக்கு இது மிகவும் நல்லது. வெங்காயச் சாற்றை குளிர்காலத்தில் பயன்படுத்துவது நல்லதா? இந்த கேள்விக்கு நிபுணர் கூறியதாவது, அதில் எந்தத் தீங்கும் இல்லை. ஆனால், அவற்றை அளவாக பயன்படுத்துவது நல்லது அல்ல. அதேபோல வெங்காயச் சாற்றைத் தினமும் தடவுவதைத் தவிர்க்கவும். . இது தவிர, வெங்காய சாறு உங்களுக்கு பொருந்தவில்லை என்றால், அதைப் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

வெங்காயச் சாற்றை முடிக்கு எப்படி பயன்படுத்துவது?

முதலில் தேவையான அளவு வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்யவும். பின்னர், அவற்றை மிக்ஸியில் நன்கு அரைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். தேவைப்பட்டால் அரிசி கழுவிய தண்ணீரை சேர்க்கவும். பின்னர், அவற்றை வடிகட்டி பருத்தி துணியின் உதவியுடன் முடியில் தடவவும். பின்னர், 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும்.

இந்த பதிவும் உதவலாம் : Hair Growth Remedy : ஒரே மாதத்தில் முடி இடுப்புவரை நீளமாக வளர இதை செய்தால் போதும்!

வெங்காயச் சாற்றை தலையில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்

முடி உதிர்வை குறைக்கும்: ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, வெங்காய சாறு முடி உதிர்வதை தடுக்கிறது. வெங்காயத்தில் சல்பர் உள்ளது, இது முடியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, வெங்காயத்தில் உள்ள கொலாஜன், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. கொலாஜன் உச்சந்தலையை சுத்தம் செய்து புதிய முடி வளர உதவுகிறது.

இளநரை பிரச்சினை: வெங்காயச் சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இந்த உறுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஹைட்ரஜன் பெராக்சைடு முடி முன்கூட்டியே நரைப்பதற்கு காரணமாக கருதப்படுகிறது. வெங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஹைட்ரஜன் பெராக்சைட்டின் அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : முடி உதிர்வதைத் தடுக்க வீட்டிலேயே இந்த எண்ணெய்யை தயாரித்து பயன்படுத்துங்கள்

பொடுகை குறைக்க உதவுகிறது: வானிலை மாறும்போது பொடுகு பிரச்சனை அதிகரிக்க ஆரம்பிக்கிறது. இதற்கு பூஞ்சை தொற்றும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. பொடுகுத் தொல்லையால், தலையில் அரிப்பு மற்றும் வறண்ட சருமம் போன்ற பிரச்சனை தொடங்குகிறது. இந்த வகை பிரச்சனையிலும் வெங்காய சாறு நன்றாக வேலை செய்கிறது.

Pic Courtesy: Freepik

Read Next

முடி தாறுமாறா கொட்டுதா? முருங்கை இலையை இப்படி பயன்படுத்துங்க.

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content