What are the side effects of eating raw noodles: இன்றைய நவீன காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளையே அதிகம் விரும்புகின்றனர். இந்த வரிசையில் நூடுல்ஸ் அனைவருக்கும் பிடித்த உணவாக அமைகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே நூடுல்ஸ் உட்கொள்வதை பெரிதும் விரும்புவர். அதிலும் சிலர் பச்சையாக நூடுல்ஸ் அதாவது சமைக்காத சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்கின்றனர். ஆனால், அடிக்கடி பச்சையாக நூடுல்ஸ் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். வயிறு வீக்கம், கடுமையான வயிற்று வலி போன்றவை ஏற்படுகிறது. இது பச்சையாக நூடுல்ஸ் சாப்பிடுவதன் விளைவுகளைக் குறிக்கிறது.
மக்களிடையே துரித உணவின் போக்கு அதிகரித்து வருகிறது. துரித உணவுகளில் ஒன்றாக விளங்கும் நூடுல்ஸை பச்சையாக உட்கொள்வது சுவையானதாக இருந்தாலும், அது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கக்கூடும். பச்சை நூடுல்ஸில் ஸ்டார்ச் உள்ளது. இவை லும்புகள் மற்றும் இதயத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பச்சை நூடுல்ஸ் சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பச்சையாக நூடுல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம். இதில் பச்சை நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து லக்னோவின் விகாஸ் நகரில் அமைந்துள்ள நியூட்ரிவைஸ் கிளினிக்கின் ஊட்டச்சத்து நிபுணர் நேஹா சின்ஹா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Noodles Side Effects: நூடுல்ஸ் பிரியர்களே… சற்று இதை கவனியுங்கள்…
பச்சை நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
ரிசர்ச் கேட் நடத்திய ஆய்வில் WHO-வின் கூற்றுப்படி, பச்சை நூடுல்ஸில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் PAH-கள் (பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள்) இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவை புற்றுநோய், நரம்பியல் மற்றும் சிறுநீரக பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, சில பிராண்டுகளில் ஈயத்தின் அளவு WHO-வால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
ஊட்டச்சத்து குறைபாடு
- பச்சை நூடுல்ஸில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் அளவு மிகக் குறைவே ஆகும்
- தொடர்ந்து நீண்ட நாள்கள் பச்சை நூடுல்ஸை உட்கொள்வதால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது.
- பச்சையாக நூடுல்ஸ் சாப்பிடுவதால் சோர்வு, பலவீனம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்றவை ஏற்படுகிறது.
எடை அதிகரிப்பு
- பச்சை நூடுல்ஸில் குறைந்த அளவிலான நார்ச்சத்துக்கள் உள்ளது. இவற்றை சாப்பிடுவது உடலில் கலோரிகளை அதிகரிக்கிறது.
- பச்சையாக நூடுல்ஸ் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு படிந்து, எடையை அதிகரிக்கிறது.
செரிமான பிரச்சனைகள்
- பச்சையாக நூடுல்ஸை சாப்பிட்டால், அதில் உள்ள ஸ்டார்ச் சரியாக செரிமானம் அடையாது. இதனால் செரிமான பிரச்சனைகள் சாத்தியமாகலாம்.
- பச்சையாக நூடுல்ஸ் சாப்பிடுவதால் பிரச்சனைகளில் மலச்சிக்கல் பிரச்சனையும் அடங்குகிறது. மேலும் அமிலத்தன்மை, வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.
- நீண்ட நாள்கள் பச்சை நூடுல்ஸ் சாப்பிடுவதால் செரிமான அமைப்பு பலவீனமடையலாம்.
இதய பிரச்சனைகள்
- பச்சை நூடுல்ஸில் அதிகளவிலான சோடியம் உள்ளது.
- இந்நிலையில், இதை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும் இதய நோய் ஆபத்தை அதிகரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Schezwan Noodles: இனி வீட்டிலேயே செய்யலாம் ஹோட்டல் ஸ்டைல் செஸ்வான் நூடுல்ஸ்!!
வீக்கத்தை ஏற்படுத்துவது
- பச்சை நூடுல்ஸை சாப்பிடுவதால் உடலில் வீக்கம் ஏற்படலாம். மேலும் இது ஒரு நச்சுப் பிரச்சினை இருக்கலாம்.
- பச்சையாக நூடுல்ஸ் சாப்பிடுவதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
- நீண்ட நேரம் பச்சை நூடுல்ஸை சாப்பிடுவது வளர்சிதை மாற்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.
முடிவுரை
பச்சை நூடுல்ஸ் சாப்பிடுவதால் வயிற்று வலி, வயிற்று வாயு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உடலில் வீக்கம், எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் பச்சை நூடுல்ஸில் உள்ள அதிகளவிலான சோடியம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Noodles: எத்தனை வகை நூடுல்ஸ் உள்ளது? எந்த நூடுல்ஸ் உடலுக்கு நல்லது?
Image Source: Freepik