Fri Sep 11, 2026 | 11:46 PM IST

Doctor Verified

குழந்தையின் சருமத்திற்கு கடலை மாவு தடவுவது நல்லதா? மருத்துவர் தரும் பதில் இதோ

இன்று பலரும் குழந்தைகளின் சருமத்தில் கடலை மாவை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அது பாதுகாப்பானதாக இருக்குமா என யோசித்திருக்கிறீர்களா? இதில் குழந்தைகளின் சருமத்தில் கடலை மாவை பயன்படுத்தினால் என்னாகும் என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

பொதுவாக, பெரியவர்கள் பலரும் குளிக்கும் போது கடலை மாவைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இது பல்வேறு சரும பிரச்சினைகளைத் தடுக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. மக்கள் இதை ஒரு கிளென்சராகவும், ஃபேஸ் பேக், ஸ்க்ரப் மற்றும் டோனர் போன்றவற்றாகவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் பலர் இதை தினசரி ஃபேஸ் வாஷ் ஆகவும் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும், பெரியவர்களின் சருமத்திற்குக் கடலை மாவைப் பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும். அதன் முடிவுகளையும் தெரிந்து கொள்ள முடியும்.

எனினும், பல இந்திய வீடுகளில், குழந்தைகளின் சருமத்திலும் கடலை மாவு பயன்படுத்தப்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தையின் தோலில் கடலை மாவைப் பயன்படுத்துவது அதன் நிறத்தை மேம்படுத்தும் என்று மக்கள் நம்புகின்றனர். இதில் அனைவருக்கும் கேள்வி எழக்கூடியது குழந்தையின் சருமத்திற்கு கடலை மாவு நல்லதா என்பதாகும். இது குறித்து புது தில்லியில் உள்ள எலாண்டிஸ் ஹெல்த்கேரில் உள்ள தோல் மருத்துவர் மற்றும் அழகியல் மருத்துவரான டாக்டர் சாந்தனி ஜெயின் குப்தா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

கடலை மாவு என்றால் என்ன?

கடலை மாவு என்பது ஒரு வகையான கொண்டைக்கடலை மாவு ஆகும். இது கொண்டைக்கடலையில் இருந்து தயாரிக்கப்படுவதால், இதில் புரதம், துத்தநாகம், இரும்பு மற்றும் நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. பண்டைய காலங்களில், ஃபேஸ் பேக்குகள், ஃபேஸ் வாஷ்கள் மற்றும் கிரீம்கள் போன்றவை கிடைக்காதபோது, பெண்கள் சருமத்தை சுத்தப்படுத்துவதற்கு கடலை மாவைப் பயன்படுத்தி வந்தனர்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் உங்க குழந்தைக்குத் தரும் உணவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கொடுப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

குழந்தையின் சருமத்தில் கடலை மாவு தடவுவது பாதுகாப்பானதா?

டாக்டர் சாந்தினி ஜெயின் குப்தா அவர்கள், “குழந்தைகளின் சருமத்தில் கடலை மாவைப் பயன்படுத்துவது பல இந்திய வீடுகளில் ஒரு பாரம்பரிய தோல் பராமரிப்பு முறையாகும்” என்று கூறுகிறார். கடலை மாவு இயற்கையாகவே சருமத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் இது பழுப்பு நிறத்தை நீக்கவும் மற்றும் நிறத்தை மேம்படுத்தவும் உதவுவதாக நம்பப்படுகிறது. ஆனால் இது ஒரு பாரம்பரியம் மட்டுமே. குழந்தைகளின் சருமத்தில் கடலை மாவைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல.

உண்மையில், கடலை மாவு இயற்கையான உரித்தல் மற்றும் சுத்திகரிப்பு பண்புகளைக் கொண்டதாகும். இந்த பண்புகள் வயதுவந்த சருமத்தை மென்மையாகவும் அழகாகவும் மாற்ற உதவுகிறது. ஆனால் குழந்தைகளின் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடும். குழந்தைகளின் சருமம் பெரியவர்களை விட மிகவும் மென்மையானது மற்றும் உணர்திறன் கொண்டதாகும். இந்நிலையில், கடலை மாவில் உள்ள கடுமையான பொருட்கள் குழந்தைகளின் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.

குழந்தைகளின் சருமத்தில் கடலை மாவைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

டாக்டர் சாந்தினி ஜெயின் குப்தாவின் கூற்றுப்படி, குழந்தைகளின் சருமத்தில் தயிர், எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தடவுவது ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும். இவை சிவத்தல் மற்றும் வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

மேலும், கடலை மாவு இயற்கையில் உலர்ந்த தன்மையுடையதாகும். இது சருமத்திலிருந்து அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிவிடுகிறது. குழந்தைகளின் சருமத்தில் ஏற்கனவே குறைவான செபம் (எண்ணெய்) உள்ளது. இந்நிலையில், கடலை மாவின் பயன்பாட்டின் காரணமாக, குழந்தைகளின் சருமத்தில் தடிப்புகள் மற்றும் எரிச்சல் ஏற்படக்கூடும்.

குழந்தைகளின் தோலில் கடலை மாவைத் தேய்த்த பிறகு அதைப் பயன்படுத்துவதால், நுண்ணிய வெட்டுக்கள் அல்லது தீக்காயங்கள் போன்றவை ஏற்படலாம். இதனால் தோல் தொற்று ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Skin Color Changes: பிறந்த சில நாட்களுக்குப் பிறகு குழந்தையின் நிறம் ஏன் மாறத் தொடங்குகிறது?

குழந்தைகளின் மென்மையான சருமத்தில் கடலை மாவை மீண்டும் மீண்டும் தேய்க்கும் போது, அது அரிக்கும் தோலழற்சி, வறண்ட சருமம் மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

குழந்தைகளின் தோலில் என்ன தடவ வேண்டும்?

"வீட்டு வைத்தியத்திற்குப் பதிலாக குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லேசான, மணம் இல்லாத சுத்தப்படுத்தியைப் பயன்படுத்த மருத்துவர் பொதுவாக பரிந்துரைக்கின்றனர். பெற்றோர்கள் இன்னும் கடலை மாவைப் பயன்படுத்த விரும்பினால், அவர்கள் முதலில் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியமாகக் கருதப்படுகிறது. பேட்ச் டெஸ்ட் செய்யும் போது, குழந்தையின் சருமத்தில் ஏதேனும் எரிச்சலை ஏற்படுத்தினால், அதைப் பயன்படுத்தக்கூடாது" என்று டாக்டர் சாந்தினி ஜெயின் குப்தா கூறுகிறார்.

முடிவுரை

மருத்துவருடனான எனது கலந்துரையாடல்களின் அடிப்படையில், கடலை மாவு குழந்தைகளின் சருமத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், அது குழந்தைகளின் சருமத்திற்கு முற்றிலும் பாதுகாப்பானதாக கருதப்படாது. மேலும், அதை எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறலாம். குழந்தைகளின் சருமம் அல்லது ஆரோக்கியத்திற்கு எந்தவொரு வீட்டு வைத்தியத்தையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகக் கருதப்படுகிறது. குழந்தைகளின் சருமத்திலும் கடலை மாவைப் பயன்படுத்த விரும்பினால், நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகக் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Skin Allergies In Newborn: பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் நோய்கள்..! தடுப்பு  நடவடிக்கைகள் என்னென்ன?

Image Source: Freepik

Read Next

குழந்தைகள் தங்களது வயதுக்கு ஏற்ப பகலில் எவ்வளவு நேரம் தூங்குவது நல்லது? நிபுணர் தரும் அறிவுரை

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 26, 2025 23:56 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content