Fri Sep 11, 2026 | 10:48 PM IST

Doctor Verified

பிறந்த குழந்தைக்கு பசும்பால் கொடுப்பது நல்லதா? கொடுத்தா என்னாகும்? மருத்துவர் தரும் அறிவுரை

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது வழக்கம். ஆனால், பிறந்த குழந்தைகளுக்கு சிலர் பசும்பால் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் பிறந்த குழந்தைக்கு பசும்பால் கொடுப்பது நல்லதா? அப்படி கொடுத்தால் என்னாகும் என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு முக்கிய மற்றும் முதன்மையான ஆதாரமாக அமைவது தாய்ப்பால் ஆகும். ஏனெனில், தாய்ப்பால் கொடுப்பது தாய், சேய் இருவருக்குமே மிகுந்த நன்மை பயக்கும். பிறந்த குழந்தைகளுக்கு பொதுவாக நோயெதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். இதனால் அவர்கள் எளிதில் நோய்வாய்ப்பட அதிகம் வாய்ப்புள்ளது. இந்நிலையில், குழந்தைகளின் நோயெதிர்ப்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் தாய்ப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், பெரும்பாலான தாய்மார்களுக்குத் தாய்ப்பால் அதிகளவு சுரக்காமல் இருப்பதால், குழந்தைகளுக்குப் போதுமான அளவு பால் தருவதில் சிரமம் ஏற்படலாம்.

இந்நிலையில், பிறந்த குழந்தைகளின் வயிற்றை நிரப்ப, வீட்டில் சிலர் அவர்களுக்கு பசுவின் பால் அல்லது பதிவு செய்யப்பட்ட பால் கொடுக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் மருத்துவர்கள் இது குழந்தைகளுக்கு ஆபத்தைத் தரும் என அறிவுறுத்துகின்றனர். உண்மையில், பிறந்த குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பது நல்லதா? அவ்வாறெனில், அது உடலுக்கு என்னென்ன ஆபத்தைத் தரும் என்பது குறித்த தகவல்களை WCF வில்லிவாக்கம், MRCOG , டிஆர் ராஜசேகர் MBBS அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

பிறந்த குழந்தைகளுக்கு எந்த பால் கொடுப்பது நல்லது?

மருத்துவர் தனது வீடியோ பதிவில் கூறியதாவது, குழந்தை பிறகு முதல் 2 நாள்களுக்கு தாய்ப்பால் குறைவாக வருகிறது என, வீட்டில் உள்ளவர்கள் பசும்பால் கொடுப்பதை அறிவுறுத்துகின்றனர். ஆனால், குழந்தையின் 12 வயது வரைக்கும் அவர்களுக்குக் கட்டாயம் பசும்பால் கொடுக்கக் கூடாது. அவ்வாறெனில், என்ன பால் கொடுக்கலாம்.

முதலாவதாக, குழந்தையைப் பெற்ற தாயின் தாய்ப்பால், இரண்டாவது வேறு தெரிந்தவர்கள் அம்மாவின் தாய்ப்பால் கொடுக்கலாம். இதை விரும்பாதவர்களுக்கென, தாய்ப்பால் பேங்க் உள்ளது. இது உங்கள் வீட்டின் அருகில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் இருக்கும். இந்த வழிகளில் தாய்ப்பால் கொடுப்பதே சிறந்தது என்று அறிவுறுத்துகிறார்.

image

Tips-for-Breastfeeding-After-a-C-Section-1761625891322.jpg

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு பசும்பால் நல்லதா?

மேலும் அவர், பிறந்த குழந்தைகளுக்கு பசும்பால் ஏன் கொடுக்கக்கூடாது என்பதற்கான காரணங்களைப் பகிர்ந்துள்ளார். அதன் படி,

  • குழந்தை பிறந்த உடன், அவர்களின் குடல் வலிமையாக இருக்காது. இதனால், பசும்பால், எருமைப்பால் போன்றவற்றைக் கொடுப்பது சரியாக செரிமானம் அடையாமல் போகும்.
  • இரண்டாவதாக கால்சியம், கேசீன் (Casein) புரதம் உள்ளன. இவை இரண்டும் குழந்தைகள் இரும்புச்சத்து எடுப்பதைக் குறைக்கிறது. இதனால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து விடும். நோயெதிர்ப்புச் சக்தி குறைவதன் காரணமாக டயரியா ஏற்படக்கூடும். இதில் இருமல், சளி போன்றவை ஏற்படும்.

இந்த பதிவும் உதவலாம்: உங்க குழந்தை தாய்ப்பால் மறக்கத் தயாராக உள்ளார்களா? அதற்கான 7 அறிகுறிகள் இதோ

  • பசும்பாலில் வைட்டமின் சி மற்றும் ஈ இரண்டுமே குறைவாக உள்ளது. ஆனால் இது குழந்தையின் நோயெதிர்ப்பு சக்திக்கு மிகவும் அவசியமாகும்.
  • மேலும் தாய்ப்பால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு சரியான தேர்வாகும். மூளை வளர்ச்சிக்கு தேவையான சில கொழுப்புகள் தாய்ப்பாலில் உள்ளன.
  • மேலும் அவர், அறிவியலின் படி, அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் அக்காடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் மற்றும் வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் கூறியதாவது, பசும்பால் கட்டாயம் குழந்தைகளுக்கு 12 மாசம் வரைக்கும் கொடுக்க கூடாது என்பதை எடுத்துரைத்தார். குழந்தைகளுக்கு செரிமான ஆரோக்கியம் நல்ல அளவு கிடையாது. பசும்பாலில் உள்ள புரோட்டீனை செரிமானம் செய்ய குழந்தைகளுக்கு ஏதுவாக இருக்காது எனக் குறிப்பிட்டார்.
  • சோடியம், பொட்டாசியம் போன்ற சில மினரல்கள் நம் அனைவருக்கும் தேவை. செடிகள், ஆடு, மாடுகளுக்கும் இது தேவை. ஏனெனில், சிறுநீரகங்கள் இதில் தான் செயல்படுகிறது. இந்நிலையில், பாலில் உள்ள சோடியம், பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இவற்றை குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
  • பசும்பால் கொடுப்பதால், குடலின் உள்ளே அரிப்பு வரக்கூடும். இதில் இரத்தம் சிறிது சிறிதாக வெளியேற வாய்ப்புள்ளது. இதனால் குழந்தை வலிமையற்றதாகி விடும். மேலும் இரும்புச்சத்து குறைவாக இருக்ககும்.
  • பசும்பால் குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். இதனால் உடலில் அரிப்பு ஏற்படுவதுடன், திட்டு திட்டாக இருக்கலாம்.

இவை அனைத்தும் குழந்தைகளுக்குப் பசும்பால் கொடுப்பதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள் ஆகும்.

image

how-to-handle-breathing-issues-in-newborns-in-the-rainy-season-Main

குழந்தை பிறந்த ஒரு வருடம் கழித்து சாதம், உப்புமா போன்ற உணவுகளை சிறிது சிறிதாக சேர்க்கலாம். ஆனால், 12 மாதம் வரை பசும்பாலைக் குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாது. தாய்ப்பால் ஒரு நாள், இரண்டு நாள் சுரக்கவில்லை எனில், அதை மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், தாய் மற்றும் குழந்தைக்கு இணைப்பை ஏற்படுத்துகிறது.

தாய்ப்பால் இல்லையெனில், தாய்ப்பால் பேங்கில் வாங்கும் பால் அல்லது வேறு ஒருவரிடம் பால் வாங்கி கொடுக்கும் போது, அது மீதமுள்ளது எனில் சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம் என திருப்பி குடுக்க கூடாது. மீதமுள்ல பாலைக் கொடுப்பது குழந்தைகளுக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும் மருத்துவர் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கிறார்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் உணவுகள் – மருத்துவர் சிவராமன் அறிவுரை!

Image Source: Freepik

Read Next

குழந்தைகளின் எடை அதிகரிப்பிற்கு ரவை நல்லதா? எப்போது, எப்படி கொடுக்கலாம்? மருத்துவரிடம் கொள்ளுங்கள்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 10, 2025 17:47 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content