Side effects of using perfume on skin you should know: இன்று மக்கள் பலரும் வெளியில் செல்லும் போது, நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துகின்றனர். சிலர் வீட்டிலிருக்கும் போதும் வாசனைத் திரவியத்தை பயன்படுத்துவர். பொதுவாக வாசனை திரவியத்தைப் பயன்படுத்தும் போது, புத்துணர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் உணர்கின்றனர். எனவே தான் இது நறுமணத்தின் தேவதை என்றும் அழைக்கப்படுகிறது. இப்போதெல்லாம், எல்லோரும் வெவ்வேறு வகையான வாசனை திரவியங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், பலரும் சருமத்தின் மீது நேரடியாக திரவியத்தைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மேலும் பல வகையான விளம்பரங்கள் இதைச் செய்வதாகக் காட்டப்படுகிறது. இதை பார்த்து, மக்கள் சருமத்தில் வாசனை திரவியத்தைப் பூசுகிறார்கள். வாசனை திரவியத்தை நேரடியாக சருமத்தில் பூச வேண்டுமா அல்லது துணிகளில் பூச வேண்டுமா என்பது குறித்து மும்பையில் உள்ள டாக்டர் ஷரீஃபா ஸ்கின் கேர் கிளினிக்கின் தோல் மருத்துவரான டாக்டர் ஷரீஃபா சாஸ் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவர் வாசனை திரவியத்தைப் பூசும் முறைகள் பற்றிய தகவல்களையும், வாசனை திரவியத்தை சருமத்தில் நேரடியாகப் பூச வேண்டுமா இல்லையா என்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: பர்ஃபியூம் வாசனை நீண்ட நேரம் இருக்க வேண்டுமா? அப்போ இந்த இடங்களில் அடிக்கவும்…
சருமத்தில் வாசனை திரவியம் பூசுவது ஏன் ஆபத்தானது?
மருத்துவர் ஷரிஃபா சௌஸ் அவர்களின் கூற்றுப்படி, “சருமம் உணர்திறன் மிக்கதாகும். மேலும் இது வெளிப்புற தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. சருமத்தில் நேரடியாக வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம். எனவே, எப்போதும் அதை ஆடைகளில் அல்லது தூரத்திலிருந்து பயன்படுத்த வேண்டும். மேலும், வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.
ஆல்கஹால் மற்றும் ரசாயனங்கள்
பெரும்பாலான வாசனை திரவியங்கள் ரசாயனங்களால் ஆனதாகும். மேலும் இதில் ஆல்கஹால் உள்ளது. இந்நிலையில், இதை சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்தப்பட்டால் அரிப்பு, எரிதல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
வறண்ட சருமம்
வாசனை திரவியத்தில் உள்ள ஆல்கஹால் சருமத்தின் ஈரப்பதத்தைக் குறைக்கிறது. மேலும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு, அவர்களின் சருமம் இன்னும் வறண்டதாக மாறலாம்.
ஒவ்வாமை
சருமம் உணர்திறன் மிக்கதாக இருந்தால், சருமத்தில் நேரடியாக வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவதால் தடிப்புகள், அரிப்பு போன்றவை ஏற்படலாம். மக்கள் இந்த தடிப்புகளுக்கு கவனம் செலுத்தவில்லை எனில், ஒவ்வாமையும் தீவிரமாகிவிடும்.
வெயிலில் எரிதல்
வெயிலில் வெளியே செல்லும் போது சில வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவது வெயிலில் எரிதல் மற்றும் கருமையான திட்டுகளை ஏற்படுத்தக்கூடும். இது மக்களுக்கு தோல் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.
உடலின் எந்தெந்த பகுதிகளில் வாசனைத் திரவியங்களை பயன்படுத்தக்கூடாது?
டாக்டர் ஷரிஃபாவின் கூற்றுப்படி, “உடலின் சில பகுதிகளில் வாசனை திரவியத்தை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.
- முகம் மற்றும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில்
- கழுத்தின் மடிப்புகளில்
- அக்குள் பகுதியில்
- காயம் அல்லது காயத்தின் மீது
- தொடைகளின் உட்புறம்
இந்த பதிவும் உதவலாம்: Fragrance Moisturizer: வாசனையான மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது எவ்வளவு ஆபத்து தெரியுமா?
வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி
டாக்டர் ஷரீஃபாவின் கூற்றுப்படி, வாசனை திரவியத்தை முறையாகப் பயன்படுத்தினால், அது நறுமணத்தைத் தருவதைத் தவிர, சருமத்திற்கு வேறு எந்தத் தீங்கும் விளைவிக்காது.
- துணிகளில் தெளிக்கவும் - வாசனை திரவியத்தை துணிகளில் தெளிக்க வேண்டும். இது வாசனை திரவியத்தின் நறுமணத்தை நீண்ட நேரம் நீடிக்க வைக்கிறது.
- தூரத்திலிருந்து தெளிக்கவும் - வாசனை திரவிய பாட்டிலை சருமத்தில் சேராமல் இருக்க குறைந்தபட்சம் 6 முதல் 8 அங்குல தூரத்தில் வைக்கலாம்.
- பேட்ச் டெஸ்ட் செய்வது - ஒரு புதிய வாசனை திரவியத்தைப் பயன்படுத்தும் போது, எப்போதும் பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும். கையில் அல்லது காதுக்குப் பின்னால் சிறிது வாசனை திரவியத்தைப் பூசி, 24 மணி நேரம் எதிர்வினையைக் கவனிக்க வேண்டும்.
- மாய்ஸ்சரைசர் தடவுவது - வாசனை திரவியத்தைத் தடவுவதால் சருமத்தை வறண்டு போகச் செய்யலாம். எனவே. ஈரப்பதத்திற்காக சருமத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
- உணர்திறன் வாய்ந்த சருமத்தில் தடவ வேண்டாம் - சருமம் உணர்திறன் மிக்கதாக இருந்தால், வாசனை திரவியத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
வாசனை திரவியங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் என்ன செய்வது?
“வாசனை திரவியத்தைப் பூசும்போது உடலில் தடிப்புகள், அரிப்பு அல்லது எரியும் உணர்வு ஏற்பட்டால் உடனடியாக அதை தண்ணீரில் கழுவ வேண்டும். கடுமையான ஒவ்வாமை இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும். இத்தகைய திட்டுகளில் நீங்களே எந்த வகையான கிரீம்களையும் தடவ வேண்டாம். ஏனெனில், சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், தொற்று தீவிரமாகிவிடும்” என மருத்துவர் கூறுகிறார்.
முடிவுரை
டாக்டர் ஷரீஃபா அவர்களின் கூற்றுப்படி, வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவது ஆளுமையை மேம்படுத்துகிறது. ஆனால் தவறாகப் பயன்படுத்துவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். வாசனை திரவியத்தைப் பாதுகாப்பாகப் பூசி சருமத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம். சருமத்தில் வாசனை திரவியத்தைப் பூசியிருந்தால், எப்போதும் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: வாசனை திரவியம் அல்லது டியோடரண்ட்.. இவற்றில் எது சிறந்தது.?
Image Source: Freepik