$
Is fatty liver dangerous: உங்கள் கல்லீரலில் நீண்ட காலமாக கொழுப்பு குவிந்திருந்தால், நீங்கள் கல்லீரல் கொழுப்பு நோயால் பாதிக்கப்படலாம். அதிக கொழுப்பு கல்லீரல் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும் உங்கள் கல்லீரலை சேதப்படுத்தும். கூடுதலாக கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும். கல்லீரல் கொழுப்பு நோய் எவ்வளவு ஆபத்தானது என்பதை புரிந்து கொள்ள, இந்த பதிவை மேலும் படிக்கவும்.
கல்லீரல் கொழுப்பின் நிலைகள்:
இதில் நான்கு நிலைகள் உள்ளன. அவை பின்வருமாறு

1. எளிய கொழுப்பு: கல்லீரலில் கொழுப்பு அதிகரித்து அது முன்னேறாமல் இருந்தால் அது பாதிப்பில்லாத நிலையாக அறியப்படுகிறது.
2. ஸ்டீட்டோஹெபடைடிஸ்: கல்லீரலில் அதிகபடியான கொழுப்பு நிறைந்திருப்பது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
3. ஃபைப்ரோஸிஸ்: தொடர்ச்சியான அலெற்சி கல்லீரலில் வடுக்களை ஏற்படுத்துகிறது. ஆனால் இன்னும், கல்லீரல் சாதாரணமாக செயல்பட முடியும்.
4. சிரோசிஸ்: இது மிகக் கடுமையான கட்டமாகும், அதை மாற்ற முடியாது. எனவே, அது மேலும் வளர்ச்சியடைவதைத் தடுப்பது அவசியம்.
இதையும் படிங்க: Kidney Infections: இருப்பதை எப்படி தெரிந்துக்கொள்வது
கல்லீரல் கொழுப்பு நோயின் அறிகுறிகள்:
இந்நோய் கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கு முன்னேறும் வரை மக்கள் அறிகுறிகளை அனுபவிக்க மாட்டார்கள். கல்லீரல் கொழுப்பு நோயின் அறிகுறிகள் பின்வருமாறு:
* வயிற்று வலி
* எடை இழப்பு அல்லது பசியின்மை
* குமட்டல்
* மஞ்சள் காமாலை
* வீங்கிய கால்கள்
* பலவீனம் அல்லது சோர்வு
* இருண்ட நிற சிறுநீர்
* மார்பக விரிவாக்கம்
கிரேடு 1 கல்லீரல் கொழுப்பு குணப்படுத்த முடியுமா?
கிரேடு 1 கல்லீரல் கொழுப்பு ஆரம்ப நிலைகளில் ஏற்படுகிறது. இந்த நிலையில் கல்லீரல் மேல் அதிகபடியான கொழுப்பு குவிந்திருக்கும். ஆனால் இது கல்லீரலின் செயல்பாட்டில் தலையிடாது.
கிரேடு 1 கல்லீரல் கொழுப்பு உள்ளவர்களுக்கு எந்த அறிகுறிகளும் தெரியாது. வழக்கமான அல்ட்ராசவுண்ட் அல்லது பிற நிலைமைகளுக்கான உடல்நலப் பரிசோதனைகள் மூலம் அவர்கள் பொதுவாக அதைப் பற்றி அறிந்துக்கொள்வார்கள்.

கிரேடு 1 கல்லீரல் கொழுப்பு உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் அவர்களின் உணவை கண்காணிக்க வேண்டும் மற்றும் மதுவை தவிர்க்கவும், கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதை குறைக்கவும் முயற்சிக்க வேண்டும்.
இது லேசானது என்பதால், நீங்கள் சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியை தவறாமல் உட்கொண்டால், இதனை குணப்படுத்த முடியும்.
இதையும் படிங்க: மலச்சிக்கல் இத்தனை பாதிப்பை ஏற்படுத்துமா?
கல்லீரல் கொழுப்பின் விளைவுகள் என்ன?
கல்லீரல் கொழுப்பு நோய்களின் முக்கிய விளைவு சிரோசிஸ் ஆகும். இது கல்லீரல் வடுவை ஏற்படுத்துகிறது. மேலும் அடிவயிற்றில் திரவம் குவிதல், உணவுக்குழாயில் வீங்கிய நரம்புகள் உடைந்து இரத்தம் வரக்கூடும், தெளிவற்ற பேச்சு, தூக்கம், குழப்பம், கல்லீரல் புற்றுநோய் மற்றூம் கல்லீரல் செயலிழப்பு போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.
குறிப்பு
கல்லீரல் கொழுப்பு நோய் என்பது வாழ்க்கை முறை தேர்வுகளின் விளைவாகும். மது அருந்துவதைக் குறைப்பது அல்லது தவிர்ப்பது போன்ற இந்தத் தேர்வுகளை மாற்றுவதன் மூலம் இந்த நிலை மோசமடைவதைத் தடுக்கலாம்.
Image Source: Freepik