இன்றைய நவீன காலத்தில் உள்ள மோசனாம வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றால், நல் தலை முடி பாதிப்புக்குள்ளாகிறது. இதனை கட்டுப்படுத்த நாம் பல வைத்தியங்களை முயற்சித்து வருகிறோம். சிலர் முடி கொட்டுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனை சரி செய்ய ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறார்கள். ஆனால் இதனை வீட்டில் உள்ள பொருள்களை கொண்டே குணப்படுத்த முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இதற்காக நீங்கள் பயன்படுத்த வேண்டிய பொருள்கள் என்னென்னவென்று இங்கே காண்போம்.

முட்டை
முடி வளர்ச்சியில் முட்டை சிறந்து திகழ்கிறது. இதில் இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம் மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை முடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.
கற்றாழை
கற்றாழையில் உள்ள புரோட்டியோலிடிக் என்சைம்கள், மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இதனை கண்டிஷனராக செயல்படுத்தலாம். இது கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.
இதையும் படிங்க: Karanja Oil Benefits: சருமப் பொலிவு, முடி வளர்ச்சி இரண்டுக்கும் இந்த ஒரு எண்ணெய் போதும்
நெல்லிக்காய்
நெல்லிக்காய் நம் உடலில் உள்ள சூட்டை நீக்கி, குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால் முடி உதிர்வு குறைந்து, முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர்கிறது. மேலும் இதில் அமினோ அமிலங்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
தேங்காய் எண்ணெய்
லாரிக் அமிலம் மற்றும் கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள தேங்காய் எண்ணெய், மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இது முடியில் இருந்து புரத இழப்பை தடுக்கிறது.
மீன் எண்ணெய்
மீன் எண்ணெய் ஒமேகா கொழுப்பு அமிலத்தின் சிறந்த மூலமாகும். இது முடிக்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது. இது முடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
மேற்கூறியவற்றை பயன்படுத்திய பின்னரும், உங்களுக்கு முடி உதிர்வு குறையவில்லை என்றால், நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். அவர்கள் இதற்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கான மருத்துவத்தை அளிப்பார்கள்.
Image Source: Freepik