Asthma prevention tips: இந்த குளிர்ந்த காலநிலையில் ஆஸ்துமா தாக்குதலை எப்படி தடுப்பது?

Tips to prevent asthma attack: குளிர்காலத்தில் ஆஸ்துமா ஏற்படுவது பொதுவான ஒன்றாகும். இது அன்றாட வாழ்க்கையை கடினமாக்கலாம். அதிலும் குளிர்ந்த காலநிலையில் ஏற்படும் ஆஸ்துமா மிகவும் பிரச்சனைக்குரியதாகும். இதில் குளிர்காலத்தில் ஏற்படும் ஆஸ்துமாவை நிர்வகிப்பதற்கும், அந்த தாக்குதல்களைத் தடுப்பதற்கும் சில பயனுள்ள வழிகள் உதவுகிறது. இதில் குளிர்கால ஆஸ்துமாவைத் தடுக்க உதவும் சில ஆரோக்கியமான குறிப்புகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Asthma prevention tips: இந்த குளிர்ந்த காலநிலையில் ஆஸ்துமா தாக்குதலை எப்படி தடுப்பது?


Tips to prevent asthma attacks: ஒருவருக்கு ஆஸ்துமா ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மிகவும் அசௌகரியமான நிலையையே அனுபவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக, இருமல், மூச்சுத்திணறல் போன்ற எதுவாக இருப்பினும், இந்த அறிகுறிகள் அன்றாட வாழ்க்கையை தேவைப்படுவதை விட கடினமாக்கலாம். ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்களுக்கு அதன் தாக்குதல் எவ்வளவு எதிர்பாராததாக இருக்கும் என்பதை பலரும் அறிந்திருப்போம். எனினும், இந்த ஆஸ்துமா தாக்குதலைத் தவிர்க்க சில ஆரோக்கியமான வழிகாட்டுதல்கள் உதவுகிறது.

ஆஸ்துமா தாக்குதல் என்றால் என்ன?

நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகளை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நிலையே ஆஸ்துமா தாக்குதல் எனப்படுகிறது. இவை வீக்கமடைந்து குறுகியதாக மாற்றுவதுடன், சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தலாம். அதன் படி இருமல், மூச்சுத் திணறல் அல்லது மார்பு இறுக்கம் போன்றவை ஆஸ்துமா தாக்குதலின் பொதுவான அறிகுறிகளாகும். எரிச்சல், ஒவ்வாமை அல்லது உடற்பயிற்சி போன்ற பல்வேறு தூண்டுதல்கள் காரணமாக இந்த அறிகுறிகள் திடீரென மோசமடையும் போதே ஆஸ்துமா தாக்குதல் ஏற்படுகிறது. இதில் காற்றுப்பாதைகள் அதிகம் வீங்கி அடைக்கப்பட்டு, சுவாசிப்பதை கடினமாக்கலாம். இந்த ஆஸ்துமா தாக்குதலான லேசானது முதல் கடுமையானது வரை காணப்படும்.

இந்த பதிவும் உதவலாம்: இன்ஹேலருக்குப் பதிலாக இந்த ஆயுர்வேத விருப்பங்களை முயற்சிக்கவும்

ஆஸ்துமா தாக்குதலை தடுக்க உதவும் இயற்கை வழிகள்

தூண்டுதல்களை அறிந்து கொள்ளுதல்

ஆஸ்துமா தாக்குதல்களைத் தடுப்பதற்கான முதல் படியாக அமைவது, அதன் அறிகுறிகளைத் தூண்டுவதை அறிவதாகும். இந்த தூண்டுதல்கள் நபருக்கு நபர் மாறுபடலாம். இதற்கு குளிர்காற்று, உடற்பயிற்சி, மன அழுத்தம் போன்றவை கூட காரணமாக இருக்கலாம். ஆஸ்துமா தாக்குதலுக்கு என்ன காரணம் என்பதைக் கண்காணிப்பதன் மூலம், இந்த தூண்டுதல்களின் வெளிப்பாட்டைத் தவிர்க்க அல்லது குறைக்க முடியும். இதற்கு ஆஸ்துமா அறிகுறிகளைக் கண்காணிக்கவும், மருத்துவ ஆலோசனை பெறுவதும் அவசியமாகும்.

குளிர்ந்த காற்றைத் தடுப்பது

ஆஸ்துமா தாக்குதல்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க தூண்டுதலாக குளிர்ந்த காலநிலை அமைகிறது. இதற்கு முக்கிய காரணம் குளிர்ந்த காற்று சுவாசக் குழாயின் புறணியை சுருக்கி எரிச்சலடையச் செய்யலாம். இவையே இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. எனவே குளிர் காலநிலை ஒரு பொதுவான ஆஸ்துமா தூண்டுதலாக அமைகிறது. குளிர்ந்த நாள்களில் வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், முகமூடியை அணிவதன் மூலம் ஆஸ்துமாவைத் தவிர்க்கலாம். வானிலை குளிர்ச்சியாக இருக்கும்போது வெளியில் கடுமையான உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும். மாற்றாக, உட்புற செயல்பாடுகளைத் தேர்வு செய்வது நல்லது.

புகைபிடிப்பதைத் தவிர்ப்பது

ஆஸ்துமா தாக்குதல்களுக்கு ஒரு முக்கிய தூண்டுதலாக அமைவது புகைபிடிப்பதாகும். எனவே ஆஸ்துமா இருப்பின் புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது சுவாசப்பாதைகளை எரிச்சலடையச் செய்து ஆஸ்துமாவை மோசமாக்கலாம். இது மூச்சுக்குழாய் அழற்சியை உருவாக்கலாம். இது அடிக்கடி மற்றும் கடுமையான ஆஸ்துமா தாக்குதல்களுக்கு வழிவகுக்கிறது. எனவே புகைபிடிப்பதை விட்டு விடுவதன் மூலம் ஆஸ்துமா அறிகுறிகளைக் குறைப்பதுடன் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Asthma Prevention: ஒரே புகை மூட்டமா இருக்கு... ஆஸ்துமா இருக்கா.? ஜாக்கிரதை..

முகமூடி அணிவது

மாசு, ஒவ்வாமை அல்லது தூசி அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் ஃபேஸ் மாஸ்க் அணியலாம். இது சுவாசப்பாதைகளை எரிச்சலிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. ஃபேஸ் மாஸ்க் அணிவது தூசி வெளியேற்றம் போன்ற காற்றில் பரவும் ஒவ்வாமைகளின் வெளிப்பாட்டை கணிசமாகக் குறைக்கிறது. இவை அனைத்துமே ஆஸ்துமா அறிகுறிகளைத் தூண்டும் காரணிகளாகும். குறிப்பாக, காற்று மாசுபாடு அளவு அதிகம் இருக்கும் இடங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் ஆஸ்துமா தாக்குதல்களை ஏற்படுத்தும் நுண்ணிய துகள்களைத் தடுக்க முடியும்.

அதிக நீர் அருந்துவது

உடலை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இவை ஆஸ்துமா தாக்குதல்களைத் தடுக்க உதவுகிறது. போதுமான நீர் அருந்துவது, காற்றுப்பாதைகளை ஈரப்பதமாக வைக்கவும், சுவாசத்தை எளிதாக்கவும் உதவுகிறது. நீரிழப்பு ஏற்படுவது சளியை ஏற்படுத்தலாம். இது மூச்சுக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் மற்றும் ஆஸ்துமா தாக்குதலைத் தூண்டுகிறது. இவ்வாறு நீரேற்றமாக இருப்பது ஆஸ்துமா தாக்குதலைத் தடுப்பதற்கான எளிய மற்றும் பயனுள்ள வழியாக அமைகிறது.

இவ்வாறு பல்வேறு வழிகளில் குளிர்ந்த காலநிலையில் ஏற்படும் ஆஸ்துமா தாக்குதலிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Asthma Diet:ஆஸ்துமா நோயாளிகள் கவனத்திற்கு… குளிர் காலத்தில் இந்த உணவுகளை சாப்பிடுங்க!

Image Source: Freepik

Read Next

Eucalyptus oil benefits: யூகலிப்டஸ் எண்ணெயில் இத்தனை நன்மைகள் இருக்கா?

Disclaimer