Healthy Milk Recipes For Children: குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் முக்கிய ஆதாரமாகபால் உள்ளது. இது அவர்களுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது.
சில குழந்தைகள் பாலை மிகவும் விரும்பி அருந்துவர். இன்னும் சிலர் பால் என்றாலே வெறுத்து ஒதுக்குவர். எனினும், பாலின் முக்கியத்துவத்தை அறிந்து அதன் ஊட்டச்சத்துகளை குழந்தைகளுக்குத் தர வேண்டுமென்பதால் பெற்றோர்களுக்கு இது ஒரு சவாலான ஒன்றாகும். உடலுக்குத் தேவையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை பால் வழங்குகிறது. மேலும், இது குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக அமைகிறது. குழந்தைக்கு வைட்டமின் டி, கால்சியம் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துகளை உட்கொள்வதற்கு பால் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். இப்போது பால் விரும்பாத குழந்தைகளுக்கு பாலை ஆரோக்கியமாகவும், சுவையாகவும் வழங்குவது எப்படி என்பதைக் காணலாம்.
குழந்தைகளுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான பால் செய்வது எப்படி?
குழந்தைகளுக்கு பாலை விதவிதமாகவும், ஆரோக்கியமாகவும், சுவையாகவும் வைத்திருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Food Allergy: குழந்தைக்கு உணவில் ஒவ்வாமை எதனால் ஏற்படுகிறது தெரியுமா?
சாக்லேட்டுகளைப் பயன்படுத்துதல்
பெரும்பாலும் சாக்லேட்டுகள் எல்லாக் குழந்தைகளும் விரும்பி உண்ணும் பானமாகும். பாலில் சாக்லேட்டுகள் சேர்ப்பது சாப்பிடுவதைத் தூண்டுகிறது. அதே சமயம் பாலில் சர்க்கரை மற்றும் செயற்கைச் சுவைகளால் ஆன சாக்லேட் கலவைகளைப் பயன்படுத்துவதற்குப் பதில் வீட்டிலேயே செய்யப்பட்ட சாக்லேட் பாலை உருவாக்கலாம். மேலும் இதன் சுவை அதிகரிக்க தேன் அல்லது மேப்பிள் சிரப் போன்ற இயற்கை இனிப்புகளை சேர்க்கலாம்.
தானியங்களைப் பயன்படுத்துதல்
குழந்தைகளுக்கு பாலுடன் சேர்த்து இன்னும் பிற ஊட்டச்சத்துகளை அளிக்கும் தானியங்களைச் சேர்த்துத் தரலாம். மேலும் தானியங்களை வைத்து தயாரிக்கப்படும் கஞ்சியில் பாலைச் சேர்த்து செய்யலாம். இதன் மூலம் பாலில் இருந்து பெறப்படும் புரதம், கால்சியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் தவிர, தானியங்களிலிருந்து கூடுதல் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைப் பெறலாம்.
சுவை சேர்த்தல்
பொதுவாக குழந்தைகள் சிலருக்கு பால் வாசனை பிடிக்காது. இதனால் பாலை அருந்த மாட்டார்கள். இதனைத் தவிர்க்க, பாலுடன் உலர் பழத்தூள், வெனிலா எசன்ஸ் மற்றும் இன்னும் பிற மாற்று கலவைகளைச் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Kids Teeth Care: குழந்தைகளின் பற்களை சேதப்படுத்தும் மோசமான உணவுகள் இதோ!
பால் லாலிபாப்ஸ்
சுவைக்காகவும், ஊட்டச்சத்துக்காகவும் பால் லாலிபாப்ஸ் செய்த் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இது மிகவும் எளிதாக தயாரிக்கக் கூடியதாகும். இதில் வெவ்வேறு வடிவங்களில் மில்க் ஷேக்குகளை உறைய வைத்து குழந்தைகளுக்கு சுவை மிக்கதாக கொடுக்கலாம்.
குளிர்ச்சி சேர்த்து வழங்குதல்
குளிர்ச்சியான பாலை குழந்தைகள் விரும்புவர். எனவே, குழந்தைகளுக்கு பாலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சிறிது நேரம் கழித்து கொடுக்கலாம். இவ்வாறு கொடுக்கும் போது அதிகளவு குளிர்ச்சி இருக்கக் கூடாது. ஏனெனில் அதிக குளிர்ச்சி குழந்தைகளின் பற்களைப் பாதிக்கலாம்.
நட்ஸ் மற்றும் உலர் பழங்களைச் சேர்த்தல்
நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் இனிப்பு சுவையுடன் ஆரோக்கியத்தையும் தருகிறது. எனவே பாலுடன் நட்ஸ் மற்றும் உலர் பழங்களில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
மில்க் ஷேக் செய்தல்
பாலில் பழங்கள், ஐஸ்கிரீம், போன்ற பிறசுவைகளைச் சேர்த்து குழந்தைகளுக்குத் தருவது சிறப்பான வழியாகும். இது குழந்தைகள் விரும்பும் வழியாகவும் அமையும். ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சேர்க்கும் போது குறைந்த கொழுப்பு கொண்டதை சேர்க்கலாம். மேலும் ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழங்கள், மற்றும் குழந்தைகளுக்குப் பிடித்த காய்கறிகள் போன்றவற்றை பாலில் கலந்து கொடுக்கும் போது குழந்தைகள் விரும்பி அருந்தும்.
இது போன்ற பல்வேறு நுட்பங்களைத் தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்குப் பாலைத் தருவதன் மூலம் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Thyroid In Children: குழந்தைகளுக்கு தைராய்டு ஏற்படுவதற்கான காரணங்களும், அறிகுறிகளும்
Image Source: Freepik