Avocado Scrub Benefits: பார்லர் போகாமல் பத்தே நிமிடத்தில் முகத்தை பளபளப்பாக்க உதவும் அவகேடோ ஃபேஸ் பேக்!

  • SHARE
  • FOLLOW
Avocado Scrub Benefits: பார்லர் போகாமல் பத்தே நிமிடத்தில் முகத்தை பளபளப்பாக்க உதவும் அவகேடோ ஃபேஸ் பேக்!


இதனால், சருமம் எளிதில் வயதான தோற்றத்தை பெரும். இவற்றை தவிர்க்க பலர் சந்தைகளில் விற்கப்படும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால், அவை சரியான முடிவை நமக்கு தருவதில்லை. அதற்கு பதிலாக சருமத்திற்கு கெடு விளைவிக்கிறது. சருமத்தை பராமரிக்க எப்போதும் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. அந்தவகையில், சருமத்தை அழகாகவும், பளபளப்பாகவும் மாற்ற, அவகேடோ மற்றும் ஓட்ஸைக் கொண்டு வீட்டிலேயே எப்படி ஸ்க்ரப் தயார் செய்யலாம் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : மஞ்சள் மற்றும் பால் கொண்டு முகத்தை சுத்தம் செய்வது எப்படி?

அவகேடோ மற்றும் ஓட்ஸ் ஸ்க்ரப் செய்வது எப்படி?

தேவையான பொருள்:

ஓட்ஸ் - 1 ஸ்பூன்.
பட்டர் ஃப்ரூட் - ½ பழம்.
எலுமிச்சை சாறு - ½ ஸ்பூன்.
தேன் - 1 ஸ்பூன்.
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்.
அத்தியாவசிய எண்ணெய் - 2 சொட்டு.

அவகேடோ மற்றும் ஓட்ஸ் ஸ்க்ரப் செய்முறை:

அவகேடோ மற்றும் ஓட்ஸ் ஸ்க்ரப் செய்ய, முதலி 1 கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில், அவகேடோவை தோல் நீக்கி நன்றாக மசிக்கவும். இப்போது, அதில் ஓட்ஸ் தூள், எலுமிச்சை சாறு, தேன், தேங்காய் எண்ணெய் மற்றும் அத்தியாவசிய ஆயிலை சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். சுமார், 2 முதல் 3 நிமிடங்கள் வரை அடித்து கெட்டியான கலவையை தயார் செய்யவும்.

இந்த பதிவும் உதவலாம் : Causes of Pimples: முகத்தில் பருக்கள் வர முக்கிய காரணம்!

இப்போது முகத்தை சுத்தம் செய்து, முறையாக செய்து வைத்த ஸ்க்ரப்பை தடவி மசாஜ் செய்யவும். தேவை பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். ஸ்க்ரப்பிங் செய்த பிறகு, இந்த கலவையை முகத்தில் 5 நிமிடங்கள் அப்படியே விடவும். அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த ஸ்க்ரப்பைப் பயன்படுத்திய பிறகு, முகத்தை ஏதேனும் கிரீம் அல்லது கற்றாழை ஜெல் கொண்டும் மசாஜ் செய்யலாம். இந்த ஸ்க்ரப்பை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.

அவகேடோ மற்றும் ஓட்ஸ் ஸ்க்ரப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

  • அவகேடோ மற்றும் ஓட்ஸ் ஸ்க்ரப் தடவினால் கரும்புள்ளிகள் மற்றும் ஒயிட்ஹெட்ஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • அவகேடோ சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் ஓட்ஸ் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்த உதவுகிறது.
  • அவகேடோ மற்றும் ஓட்ஸ் சருமத்தை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி பளபளப்பாகவும் இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : நிறைய தண்ணீர் குடிப்பதால் சருமம் பளபளப்பாக மாறுமா?

  • அவகேடோ சருமத்திற்கு ஊட்டமளித்து மந்தமான தன்மையை குறைக்கிறது.
  • அவகேடோ மற்றும் ஓட்ஸ் ஸ்க்ரப் சருமத்தில் உள்ள வறட்சியை நீக்கி, சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.
  • பட்டர் ஃப்ரூட் மற்றும் ஓட்ஸ் பயன்பாடு சூரிய ஒளியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
  • இந்த ஸ்க்ரப் சீரற்ற தோல் நிறத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

அவகேடோ மற்றும் ஓட்ஸ் ஸ்க்ரப் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இருப்பினும், அதைப் பயன்படுத்துவதற்கு முன் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

Pic Courtesy: Freepik

Read Next

Skin Infections: முகப்பரு இருந்தா இதெல்லாம் செய்யாதீங்க. இந்த சரும பிரச்சனைகளும் ஏற்படலாம்

Disclaimer