Clear Skin Tips : நம் முகத்தை பளபளப்பாக மாற்ற வீட்டிலேயே ஸ்கிரப் செய்வது எப்படி?

  • SHARE
  • FOLLOW
Clear Skin Tips : நம் முகத்தை பளபளப்பாக மாற்ற வீட்டிலேயே ஸ்கிரப் செய்வது எப்படி?

என்னதான் சரும பராமரிப்புக்கு சந்தைகளில் பல பொருட்கள் காணப்பட்டாலும், அதில் உள்ள கேம்மிக்கல்கள் நமது சருமத்தை சேதமாக்கும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஸ்க்ரப் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : நிறைய தண்ணீர் குடிப்பதால் சருமம் பளபளப்பாக மாறுமா?

ஸ்க்ரப் செய்வதன் நன்மைகள்:

  • ஸ்க்ரப்பிங் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை எளிமையாக நீக்கலாம். அத்துடன் சருமத்தை மிருதுவாகும்.
  • முகத்தில் படியும் தூசி, அழுக்கு, எண்ணெய் போன்றவை சருமத்தில் இருக்கும் துளைகளை அடைத்து, கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகள் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. ஸ்க்ரப்பிங் செய்வது துளையில் அடைத்துள்ள அழுக்குகளை அகற்றலாம்.
  • ஸ்க்ரப் செய்வதால் முகம் பளபளப்பாக்கும். ஸ்க்ரப்பிங் செய்யும் போது, ​​தோல் தேய்க்கப்படுவதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், சருமம் பளபளப்பாகும்.

ரோஜா இதழ் ஸ்க்ரப் செய்வது எப்படி?

இந்த ஸ்க்ரப் செய்ய, முதலில் ரோஜா இலைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இப்போது மிக்ஸியில் 10 ரோஜா இதழுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். பின், இதில் ஒரு கப் சர்க்கரை, இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் 8-10 சொட்டு ரோஸ் ஆயில் சேர்த்து நன்கு கலக்க ஸ்க்ரப் தயார்.

இந்த பதிவும் உதவலாம் : Causes of Pimples: முகத்தில் பருக்கள் வர முக்கிய காரணம்!

எப்படி பயன்படுத்துவது?

உங்கள் கையில் சிறிதளவு ஸ்க்ரப் எடுத்துக்கொள்ளவும்.
இப்போது அதில் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
ஸ்க்ரப்பை இரண்டு கைகளாலும் தேய்த்து முகத்தில் தடவவும்.
30-60 விநாடிகளுக்கு முகத்தை வட்ட இயக்கத்தில் தேய்க்கவும்.
கடைசியில் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

ஆப்பிள் ஸ்க்ரப் செய்வது எப்படி?

உங்கள் சருமத்தில் முகப்பரு இருந்தால், இந்த ஸ்க்ரப் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தேன் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. பழ அமிலங்கள் மற்றும் என்சைம்கள் ஆப்பிளில் காணப்படுகின்றன, இது ஸ்க்ரப்பிங்கிற்கு உதவுகிறது. ஆப்பிள் ஸ்க்ரப் செய்ய, ஒரு பழுத்த மற்றும் தோல் நீக்கப்பட்ட ஆப்பிள், 1/2 தேக்கரண்டி தேன் மற்றும் 1/2 ஜோஜோபா எண்ணெய் தேவைப்படும்.

செய்முறை :

தோல் நீக்கிய ஆப்பிளை மிக்ஸியில் போட்டு ப்யூரி செய்து கொள்ளவும்.
இப்போது ஆப்பிள் ப்யூரியில் தேன் மற்றும் ஜோஜோபா எண்ணெய் கலக்கவும்.
இதோ வீட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்க்ரப் ரெடி.

இதை உங்கள் முகத்தில் 30-60 விநாடிகளுக்கு வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை சுத்தம் செய்யவும்.

Image Credit: freepik

Read Next

Skin Tanning Remedies : உங்க ஸ்கின் ரொம்ப கருப்பா இருக்கா? அப்போ குளிக்கும் போது இதை யூஸ் பண்ணுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்