பெண்கள் அதிகம் சிறுநீரக தொற்றுநோய்க்கு ஆளாகின்றனர். இதற்கு பிறப்புறுப்பு பகுதியில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம் தான் காரணம். இது ஈஸ்ட் மற்றும் பாக்டீரியா தொற்றுகளுக்கு வழிவகுக்கும். இது பிறப்புறுப்பில் சிக்கலை ஏற்படுத்துகிறது. வியர்வை மற்றும் ஈரப்பதத்தால் இந்த தொற்றுகள் ஏற்படுகின்றன. மேலும், இதனால் வளரும் பாக்டீரியாவால் பிறப்புறுப்பில் தொற்றுக்கள் ஏற்படுகின்றன. பெண்கள் நல்ல சுகாதாரத்தை கடைபிடிப்பதன் மூலம் தொற்று அபாயத்தை குறைக்க முடியும். இது பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை கட்டுப்படுத்தும். இதற்காக பின்பற்ற வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவும்

பெண்கள் இருக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது ஈரப்பதத்தை ஏற்படுத்தும். குறிப்பாக ஜீன்ஸ், லெகின்ஸ், ஷார்ட்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவை காற்றோட்டத்தை கட்டுப்படுத்தி, பிறப்புறுப்பை ஈரப்பதமாக வைக்கும். இதனால் ஏற்படும் பாக்டீரியா பிறப்புறுப்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
முக்கிய கட்டுரைகள்
நீரேற்றாமக இருக்க வேண்டும்
சிறுநீரகம் ஆரோக்கியமக இருக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது உங்கள் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும், pH அளவை சீராக பராமரிக்கவும் உதவும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், உடலில் உள்ள கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறும்.
இதையும் படிங்க: Menstrual Cup: மென்சஸ் கப்பின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரியுமா? தெரிஞ்சிகிட்டு பயன்படுத்தலாமே!
அடிக்கடி சுத்தம் செய்யவும்

பெண்கள் தங்கள் பிறப்புறுப்பை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். அடிக்கடி பிறப்புறுப்பை துடைக்க வேண்டும். இது வியர்வையால் ஏற்படும் ஈரப்பதத்தை தடுக்கிறது. குறிப்பாக பிறப்புறுப்பை சுற்றம் செய்யும் போது இயற்கையான பொருள்களை பயன்படுத்துவது நல்லது. கெமிக்கல் நிறைந்த பொருள்களை கொண்டு பிறப்புறுப்பை சுற்றம் செய்வது, தொற்று அபாயத்தை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமான உணவுகளை பின்பற்ற வேண்டும்
அதிக அமிலத்தன்மை கொண்ட காரமான உணவுகள் உங்கள் பிறப்புறுப்பில் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான பிறப்புறுப்பை பராமரிக்க தயிர், பூண்டு, இலை காய்கறிகள் மற்றும் வெங்காயம் போன்ற புரோபயாடிக் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
Image Source: Freepik