ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு, ஒரு நபர் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதோடு, நோய்களிலிருந்து தன்னைத் தானே விலக்கிக் கொள்ள முயற்சிப்பதும் முக்கியம். ஆரோக்கியமான வாழ்க்கை என்பது உடல் ஆரோக்கியத்தை மன ஆரோக்கியத்தை ஒருங்கிணைப்பதே ஆகும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்று குறிப்பிடும் போது சரியான நேரத்தில் தூங்குவது, சரியான நேரத்தில் எழுந்திருத்தல், வீட்டில் சமைத்த உணவை உண்ணுதல், உடற்செயற்பாடுகள் உள்ளிட் பல வாழ்க்கை முறைகளை உள்ளடக்கியது ஆகும்.
முழுமையான ஆரோக்கியத்திற்கான அடிப்படை வசதிகள்

அதிகப்படியான சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை உணவில் இருந்து குறைப்பதன் மூலம் சிறந்த ஆரோக்கியத்தை பெறலாம். இதன்மூலம் இரத்த சர்க்கரை அளவு மற்றும் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு குளியல் அவசியம்
குளிர்ந்த நீரில் குளிப்பது இரத்த ஓட்டத்தை பெருமளவு மேம்படுத்த உதவுகிறது. இப்படி குளிப்பது மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். குளிர்ந்த நீரில் குளிப்பது தசைகளை வலுவாக வைத்திருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுவாக வைத்திருக்கும்.
உடல் எடை பராமரிப்பு
உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா உள்ளிட்ட பயிற்சிகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். இவை உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எடை தூக்குவது தசைகளை வலுப்படுத்துகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது.
ஸ்நாக் உணவுகளை தவிர்க்கவும்
தேவையற்ற சிற்றுண்டிகளை குறைப்பதன் மூலம் அல்லது நீக்குவதன் மூலம், நீங்கள் குறைவான கலோரிகள் உட்கொள்வதை உறுதி செய்யுங்கள். ஆரோக்கியமான உணவுகளை உங்கள் உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் ஸ்நாக் வகைகள் உங்கள் உடலில் கொழுப்பு சேருவதில் முக்கியப் பங்கு வகிக்கலாம். இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம்.
சிறந்த ஆரோக்கியமான வாழ்க்கைக்கான குறிகோள்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை அமைத்திருக்க வேண்டியது அவசியம். காலையில் எழுந்திருக்கும் போதே அந்த குறிக்கோளை பின்பற்றி வாழ நினைப்பது உங்களை ஊக்குவிக்கும். தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை காலை எழுந்த உடன் செய்வதை குறிக்கோளாக வைத்திருங்கள். இது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பல வகையில் வழிவகுக்கும்.
தினசரி ஆரோக்கியமான தூக்கம்
தினசரி 7 முதல் 9 மணி நேரம் போதுமான தூக்கம் பெறுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும். உங்கள் படுக்கையறையை சௌகரியமானதாக அமைத்துக் கொள்ளுங்கள். முறையான தூக்கம் என்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முக்கியமானது. போதுமான தூக்கம் உடல் மற்றும் மன முன்னேற்றத்திற்கு உதவுகிறது.
சூரிய ஒளியில் நேரம் செலவிடுங்கள்
போதுமான அளவு சூரிய ஒளியைப் பெறுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. வொர்க் ஃப்ரம் ஹோம், நீடித்த ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் நீங்கள் வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கும் நிலை ஏற்படுகிறது. உடலுக்கு வைட்டமின் டி என்பது மிக முக்கியம். வைட்டமின் டி குறைபாட்டால் உடலில் பல ஆபத்துக்கள் ஏற்படுகிறது. வைட்டமின் டி என்பதை சூரிய ஒளியின் மூலம் பெறலாம்.
இயற்கையோடு நேரத்தை செலவிடுவது, வெளியே சென்று வருவது, நண்பர்களோடு பேசுவது, பிடித்த உணவுகளை அளவாக உண்பது ஆகியவை உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும். ஆரோக்கியம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு தொடர்ந்து ஒன்லிமைஹெல்த் உடன் இணைந்திருங்கள்.
Image Source: FreePik