Sat Sep 12, 2026 | 02:22 AM IST

Thick Hair Tips: தலைமுடி ரொம்ப அடர்த்தி கம்மியா இருக்கா? இந்த பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!

How To Get Thick Hair Naturally: தலைமுடி நமது அழகை அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, முகத்தின் அழகை அதிகரிக்க, முடியை அழகாகவும் அடர்த்தியாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆனால், காலநிலை மாற்றம் மற்றும் உணவு பழக்கத்தால் தலைமுடி உதிர்வு பிரச்சினையை சிந்திப்போம். இதனால், கூந்தலின் அடர்த்தி குறைய ஆரமிக்கும்.

உங்கள் தலைமுடியை அடர்தியாக்க நீங்கள் விரும்பினால், சந்தைகளில் விற்கப்படும் விலையுயர்ந்த ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்களுக்கு பதிலாக இயற்கையான பொருட்களை பயன்படுத்துங்கள். ஏனென்றால், இவை எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. இயற்கையாக முடியை அடர்தியாக்க உதவும் சில வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Cinnamon for hair : அடர்த்தியான கூந்தலை பெற இலவங்கப்பட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க!

வெந்தயத்தை பயன்படுத்துங்கள்

காலம் காலமாக வெந்தயம் முடிக்கு பயன்படுத்தப்படும் மருந்து. வெந்தயத்தில் புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. புரோட்டீன் முடிக்கு மிகவும் அவசியமான சத்து. புரோட்டீன் முடியை பலப்படுத்துகிறது. உங்கள் தலைமுடி மெலிதாக இருந்தால், வெந்தய பேஸ்ட்டைப் பயன்படுத்தலாம்.

வெந்தய ஹேர் மாஸ்க்

  • ஹேர் மாஸ்க் தயாரிக்க, 1/4 கப் வெந்தய விதைகளை ஒரு இரவு முழுவதும் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.
  • மறுநாள் காலையில் ஊறவைத்த வெந்தயத்தை மிக்ஸியில் அரைக்கவும்.
  • இதை முடியில் தடவவும். 30-45 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் முடியைக் கழுவவும்.

இந்த முகமூடியை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால், முடி அடர்த்தியாக மாறும்.

இந்த பதிவும் உதவலாம் : ஆரோக்கியமான கூந்தலுக்கு பின்பற்ற வேண்டிய ஆயுர்வேத குறிப்புகள்

ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்துங்கள்

முடி தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதில் விளக்கெண்ணெய் மிகவும் நன்மை பயக்கும். மெல்லிய முடியை அடர்த்தியாக மாற்றவும் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். இதில், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் முடிக்கு அவசியமானவை. இவை இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியை தூண்டுகிறது. ந்த எண்ணெயைக் கொண்டு முடியை மசாஜ் செய்யவும். ஒரு மாதத்தில் வித்தியாசத்தை நீங்கள் காணத் தொடங்குவீர்கள்.

செம்பருத்தி பூவை பயன்படுத்துங்கள்

செம்பருத்திப் பூவைப் பயன்படுத்தி முடி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இந்த பூ முடி உதிர்வது முதல் நரை முடி வரை பல பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. நீங்கள் அடர்த்தியான கூந்தலை பெற விரும்பினால், செம்பருத்தி பூவை பயன்படுத்தி செய்யப்படும் ஹேர் மாஸ்கை பயன்படுத்தலாம். இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இதன் காரணமாக முடி அடர்த்தியாக மாறும்.

இந்த பதிவும் உதவலாம் : ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? உங்களுக்கான 6 ஆசனங்கள் இங்கே…

  • முதலில் செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகளை கழுவவும்.
  • இவற்றை மிக்ஸியில் பூக்கள் மற்றும் இலைகளுடன் சிறிது தயிர் சேர்த்து அரைக்கவும்.
  • இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவி, சுமார் 1 மணி நேரம் கழித்து லேசான ஷாம்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் உங்கள் தலைமுடியைக் கழுவவும்.

Pic Courtesy: Freepik

Read Next

Onion for Hair: குளிர்காலத்தில் தலை முடிக்கு வெங்காயச் சாறு தடவுவது நல்லதா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content