Thu Oct 29, 2026 | 01:55 PM IST

Expert

Sound Sleep Tips: தீபாவளியின் போது உங்கள் குழந்தைகள் நிம்மதியாக தூங்க சில டிப்ஸ்!

Sound Sleep Tips: தீபாவளியின் போது உங்கள் குழந்தைகள் நிம்மதியாக தூங்க சில டிப்ஸ்!Sound Sleep Tips: தீபாவளியின் போது உங்கள் குழந்தைகள் நிம்மதியாக தூங்க சில டிப்ஸ்!

How to make a kid sleep instantly: பண்டிகை காலங்களில் நம்மில் பலர் இரவில் சரியாக தூங்கமாட்டோம். குறிப்பாக, தீபாவளி பண்டிகை அன்று. நாளை என்ன ஆடை அணியலாம் எங்கு செல்லலாம் என பல எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். பெரியவர்கள் மட்டும் அல்ல குழந்தைகளும் பண்டிகை காலத்தில் சரியாக தூங்க மாட்டார்கள். இதனால், உடல் ஆரோக்கியம் மட்டும் அல்ல, மனா ஆரோக்கியமும் பாதிக்கப்படும். குறிப்பாக, குழந்தைகள் சரியாக தூங்கவில்லை என்றால், அவர்களின் மனநிலை மாற்றங்களைக் கையாள்வது இன்னும் கடினமாகிவிடும்.

இரவில் தாமதமாக தூங்குவது, நேரத்துக்கு உணவு உண்ணாதது, அதிக உற்சாகம் போன்ற காரணங்களால் குழந்தைகள் பெரும்பாலும் நிம்மதியாகவும், முழுமையாக தூங்குவதில்லை. இந்த பண்டிகை காலத்தில் உங்கள் குழந்தை போதுமான அளவு தூங்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சில குறிப்புகள் மற்றும் தந்திரங்களை முயற்சி செய்யவும்.

இந்த பதிவும் உதவலாம் : நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்

இது குறித்த மேலும் தகவலுக்கு, பெங்களூரில் உள்ள ஸ்பர்ஷ் மருத்துவமனையின் நியோனாட்டாலஜிஸ்ட் மற்றும் குழந்தை நல மருத்துவரான டாக்டர் பராஸ் குமாரிடம் பேசினோம். அவர் கூறிய உதவிக்குறிப்புகள் இங்கே_

உறக்க நேர வழக்கத்தை உருவாக்கவும்

குழந்தைகள் நிம்மதியாக தூங்க அதற்கான உரக்க நேரத்தை வழக்கமாக்க வேண்டும். புத்தகம் வாசித்தல், மென்மையான இசை அல்லது சூடான குளியல் போன்ற செயல்பாடுகள் குழந்தைகளின் தூக்கத்தின் திறனை மேம்படுத்தும். உங்கள் குழந்தை தூங்கும் அறையில் சத்தம் இருக்கக்கூடாது. இதைத் தவிர, தூக்கம் ஏன் முக்கியமானது மற்றும் வேலைக்கும் தூக்கத்திற்கும் இடையில் சமநிலையை ஏன் பராமரிக்க வேண்டும் என்று உங்கள் குழந்தையுடன் பேசுங்கள்.

இந்த விஷயங்களிலிருந்து விலகி இருங்கள்

இனிப்புகள் இல்லாத தீபாவளி இல்லை என்பது உண்மைதான், ஆனால் அவற்றின் நுகர்வைக் கட்டுப்படுத்துவது பெற்றோரின் பொறுப்பு. குழந்தைகளின் ஆற்றலை அதிகரிக்கவும், தூக்கத்தில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கவும், தூங்கும் முன் குழந்தை இனிப்புகளை சாப்பிட அனுமதிக்காதீர்கள்.

இந்த பதிவும் உதவலாம் : Sleep Talking: தூக்கத்தில் பேசுபவரா நீங்கள்? காரணம், சிகிச்சை குறித்து நிபுணர்கள்

திரைகளில் இருந்து விலகி இருங்கள்

தற்போது எலக்ட்ரானிக் சாதனங்களின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளதால், பண்டிகை காலங்களில் குழந்தைகள் அவற்றை இன்னும் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த சாதனங்களில் இருந்து வரும் புற ஊதா கதிர்களால் குழந்தைகளின் தூக்கம் பாதிக்கப்படலாம். எனவே, உங்கள் பிள்ளையின் மனநலம் ஆரோக்கியமாக இருக்க, அவரது திரை நேரத்தை வரம்பிற்குள் வைத்திருங்கள்.

குழந்தை தீபாவளியைக் கொண்டாடுவதை உங்களால் தடுக்க முடியாது, ஆனால் அந்தக் குழந்தைகளின் பண்டிகையை முழுமையாக அனுபவிக்கும் உதவியின் மூலம் நீங்கள் நிச்சயமாக அந்த விஷயங்களைக் கவனித்துக் கொள்ளலாம். உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான தூக்கம் மற்றும் உற்சாகம் மற்றும் பொழுதுபோக்கிற்கு இடையே சமநிலையை உருவாக்க வேண்டும்.

Pic Courtesy: Freepik

Read Next

→ Kidney Stones: சிறுநீரக பிரச்சனை உள்ளதா?… அப்போ கட்டாயம் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.