How to detox skin from inside out naturally at home: பளபளப்பான சருமத்தைப் பெற வேண்டும் என்பதில் யாருக்குத் தான் ஆசை இருக்காது? இன்று பலரும் மோசமான உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் சரும பிரச்சனைகளும் அடங்கும். அவ்வாறே சருமத்தில் கரும்புள்ளிகள், எரிச்சல், வறட்சி உள்ளிட்ட பல்வேறு சரும பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க பலரும் பல்வேறு வழிகளில் போராடுகின்றனர்.
இதில் சிலர் சந்தைகளில் கிடைக்கும் பொருள்களை வாங்கி சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்கின்றனர். ஆனால் சில சமயங்களில் இதில் இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் சரும பிரச்சனைகள் மேலும் ஏற்படலாம். எனினும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க சில இயற்கையான வீட்டு வைத்தியங்களைக் கையாள்வது நல்லது. இது இயற்கையான தீர்வாக அமைகிறது. அதே சமயம், சருமத்தை உள்ளிருந்தே டிடாக்ஸ் செய்வது மிகவும் அவசியமாகும். இதற்கு சில ஆரோக்கியமான நடவடிக்கைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Chia Seeds Skin Benefits: சருமத்தை நச்சுத்தன்மையாக்க இந்த சிறிய விதை எப்படி உதவுகிறது தெரியுமா?
சரும பராமரிப்பு
சரும பராமரிப்பு என்று வரும் போது உள்-வெளி அணுகுமுறையைக் கையாள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சருமம் உள்ளே இருந்து ஆரோக்கியமாக இருக்க வைப்பது, சருமத்தின் வெளியே தோன்ற அனுமதிக்கிறது. நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய விஷயமும், நம் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதன் படி, இயற்கை சூழல், பணி கலாச்சாரம், பயன்படுத்தும் பொருட்கள், உண்ணும் உணவு மற்றும் தூக்க சுழற்சி அனைத்துமே சருமத்தின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. எனவே இயற்கையான முறையில் சிறந்த சருமத்தை அடைவது சரும பராமரிப்புக்கான சரியான வழியாகும்.
இதில் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவது இயலாத ஒன்று. வெளிப்புற சுற்றுச்சூழல் அழுத்தங்கள் மற்றும் அசுத்தங்கள், மோசமடையும் காற்றின் தரம், மாசுபாடு போன்றவை நமது சருமத்தை சேதப்படுத்தி, வேகமாக வயதாகும் நிலையை ஏற்படுத்துகிறது. எனவே சருமத்தின் சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்கவும், சரியான வழியில் செழிக்க வைக்கவும் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்யலாம்.
சரும நச்சு நீக்கம் ஏன் முக்கியம்?
சரும நச்சு நீக்கத்தின் முக்கியத்துவம் அறிந்து கொள்ளும் முன் சரும நச்சு நீக்கத்தைக் குறித்துக் காணலாம். சருமத்தை டிடாக்ஸ் செய்வது என்பது சருமத்தின் மேற்பரப்பில் அல்லது துளைகளுக்குள் குவிந்திருக்கும் அசுத்தங்கள், நச்சுகள் மற்றும் மாசுக்களை அகற்றுவதற்கு, அதை சுத்தப்படுத்தி புத்துயிர் பெறச் செய்யும் செயல்முறையைக் குறிக்கிறது. சருமத்தின் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை உள் மற்றும் வெளிப்புற காரணிகள் பாதிக்கலாம். இவையிரண்டிலும் கவனம் செலுத்துவதன் மூலம், சரும பராமரிப்புக்கான முழுமையான அணுகுமுறையைத் தருகிறது. உடலின் இயற்கையான நச்சுத்தன்மை செயல்முறைகளை விரைவில் கணிசமாக மேம்படுத்தவோ அல்லது துரிதப்படுத்தவோ முடியாது. பொதுவாக நச்சு நீக்கம் என்பது காலப்போக்கில் நிகழும் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்.
சருமத்தை டிடாக்ஸ் செய்வதற்கான முக்கிய குறிப்புகள்
அதிக தண்ணீர் அருந்துவது
உடல் சோர்வாக அல்லது வீங்கியதாக உணரும்போது உடல் சில நச்சுகள் மற்றும் அதிகப்படியான கழிவுகளை உள்ளே வைத்திருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் உடல் உபாதைகள் மட்டுமல்லாமல், மந்தமான தன்மை ஏற்படலாம். நாள்தோறும் குறைந்தது 2.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதன் மூலம், நச்சுகளை உடலில் இருந்து வெளியேற்றி இயற்கையான பளபளப்பைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: இரவில் முகத்திற்கு தேன் தடவுவது நல்லதா? இதன் பயன்கள் இங்கே!
ஆரோக்கியமான உணவுகள்
பால் பொருட்கள், இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பசையம், நச்சுக்கள் போன்றவற்றிலிருந்து விடுபட்ட உணவைத் திட்டமிட வேண்டும். உடலை சரியாக மீட்டமைக்கவும், உள்ளே இருந்து சேதத்தை சரிசெய்யவும் அழற்சி எதிர்ப்பு உணவைப் பின்பற்றுவது அவசியமாகும். ஏனெனில் பசையம், பால் மற்றும் சர்க்கரை போன்றவற்றை அதிகளவு உட்கொள்ளும் போது எரிச்சல், வீக்கம் மற்றும் முகப்பருவை ஏற்படுத்தலாம். எனவே தெளிவான சருமத்திற்கு 3 நாள் டிடாக்ஸ் டயட்டுடன் தொடங்கலாம். அதன் பிறகு, படிப்படியாக அதிகரிக்கலாம்.
மூலிகை தேநீர்
மூலிகை தேநீர் சிறுநீரகம், நுரையீரல், குடல் மற்றும் கல்லீரல் போன்றவற்றிலிருந்து அசுத்தங்களை நீக்குவதன் மூலம் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. ஏனெனில், இதில் நச்சுக்கள் அதிகளவு காணப்படலாம். அதன் படி கிரீன் டீ, புதினா டீ, கெமோமில் டீ, ரூயிபோஸ் டீ போன்றவற்றில் சரும ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு பண்புகள் நிறைந்துள்ளது. இதனை அருந்துவது சருமத்தை டிடாக்ஸ் செய்ய உதவுகிறது.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
குடல் ஆரோக்கியம் சரும ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகும். எனவே சீரான மற்றும் ஆரோக்கியமான செரிமானப் பாதையுடன் குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். இதற்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
புரோபயாடிக் உணவுகள்
நார்ச்சத்துக்களைப் போலவே புரோபயாடிக் நிறைந்த உணவுகளும் குடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். ஏனெனில் இவை நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும், வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இது உடலின் இயற்கையான நச்சு நீக்கும் வழிகளை ஆதரிப்பதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியமும் நன்கு பராமரிக்கப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Makhana for skin: இந்த ஸ்நாக்ஸ் சாப்பிட்டா ஸ்கின் ரொம்ப பளபளப்பாகுமாம்
Image Source: Freepik