பைக் ஓட்டியே முதுகு வலி வருகிறதா? மறக்காமல் இதை செய்யுங்க!

வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாத விஷயமாக பயணம் என்பது இருக்கிறது. இப்படி பலரும் பயணம் மேற்கொள்ளும் வாகனம் பைக் தான். பைக் ஓட்டுவதால் பலரும் சந்திக்கும் பிரச்சனை முதுகு வலி. இதை சரிசெய்ய என்ன செய்வது என பார்க்கலாம்.
  • SHARE
  • FOLLOW
பைக் ஓட்டியே முதுகு வலி வருகிறதா? மறக்காமல் இதை செய்யுங்க!


வாழ்க்கை முறையில் உணவு, உடை, ஆரோக்கியம் இவைகளை எப்படி தவிர்க்க முடியாதோ அதேபோல் தான் பயணம் என்பதும். பயணம் என்ற உடன் அனைவரும் நீண்டதூரம் பயணிப்பதை தான் நியாபகம் கொள்கிறார்கள். நாம் அன்றாட வாழ்விற்கு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வும் பயணம்தான்.

பொதுவாக நமது வீட்டில் இருந்து அலுவலகம் செல்வதும் பயணம். அருகில் ஏதோ தேவைக்காக நாம் மேற்கொள்வதும் பயணம். இத்தகைய பயணங்களுக்கும் பெரும்பாலானோர் பயன்படுத்துவது இருசக்கர வாகனம் எனப்படும் பைக். நீண்ட தூரம் நாம் மேற்கொள்ளும் பயணத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அருகில் பயணம் செய்வதற்கு நாம் கொடுப்பதில்லை.

அதிகம் படித்தவை: 15 நாட்களில் எடை குறைய வேண்டுமா.? சீரக நீரை இப்படி ட்ரை பண்ணுங்க..

தவிர்க்க முடியாத இருசக்கர வாகனம் பைக்

எந்தவொரு பயணத்திற்கும் பாதுகாப்பு என்பது தேவை. பலரும் தினசரி பைக்கை பயன்படுத்துவார்கள். இதை கணக்கிட்டால் பல ஆயிரம் கிலோ மீட்டர் வரும். இப்படி நாம் பைக்கை பயன்படுத்துவதால் முதுகு வலி என்பது தவிர்க்கமுடியாத பிரச்சனையாக மாறும்.

பைக் உதவியுடன் எங்கும் சென்றடைவது எளிது என்பது உண்மைதான். ஆனால், தினமும் பைக்கில் பயணம் செய்வதால் பலர் முதுகு மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படுவதை நாம் புறக்கணிக்க முடியாது. ஏற்கனவே வலி உள்ளவர்களுக்கு இந்த வலி என்பது மேலும் அதிகரிக்கும். சரி, எப்படி இந்த முதுக வலியை போக்குவது என பார்க்கலாம்.

தினசரி பைக் பயணத்தால் ஏற்படும் முதுகு வலியில் இருந்து விடுபடுவது எப்படி?

தோரணையை கவனித்துக்கொள்ளவும்

தினமும் பைக் ஓட்ட வேண்டும் என்பதை பலரால் தவிர்க்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பைக் ஓட்டும் போதெல்லாம், சரியான தோரணையில் உட்கார வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். பெரும்பாலானோர் பைக்கில் முன்னோக்கி சாய்ந்து அமர்ந்திருப்பார்கள், சிலர் குனிந்து அமர்ந்திருப்பார்கள். இப்படி முறையற்ற தோரணையில் உட்கார்ந்திருப்பதால் முதுகுவலி அதிகரிக்கிறது.

இது முதுகுத் தண்டுவடத்தில் அழுத்தத்தையும் உருவாக்குகிறது. தோரணையை மேம்படுத்துவது முதுகு மற்றும் இடுப்பு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.

உடற்பயிற்சி செய்யுங்கள்

தினமும் பைக் ஓட்டுவது முதுகெலும்பு, தோள்பட்டை மற்றும் கழுத்தில் அதிக அழுத்தத்தை உருவாக்குகிறது. உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் இவ்வகை வலிகளில் இருந்து விடுபடலாம். உண்மையில், முதுகுவலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் சில பயிற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும்.

இதற்கு கேமல் போஸ், கேட் போஸ், ஸ்ட்ரெச்சிங், வால் புஷிங் போன்ற சில பயிற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். இது தோரணையை மேம்படுத்துவதோடு, எலும்புகளும் நெகிழ்வானதாக மாறும், இது முதுகுவலியைப் போக்கும்.

back-pain-solution

அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்

தினமும் அதிக நேரம் இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டியிருந்தால், இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் இடுப்பு மற்றும் கால்களை நீட்ட ஒரு வாய்ப்பை வழங்கும். சிறிது நேரம் நிறுத்துங்கள், பிறகு உங்கள் பயணத்தைத் தொடருங்கள். உங்களால் முடிந்தால், பைக் சவாரிகளில் இருந்து அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இது இடுப்புக்கு நன்மை பயக்கும்.

சவாரி செய்யும் நிலையில் கவனம் செலுத்துங்கள்

பைக் ஓட்டும் போது, நீங்கள் அமர்ந்திருக்கும் பொசிஷன் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ரைடிங் பொசிசனையும் கவனிப்பதும் முக்கியம். அத்தகைய பைக்கை நீங்கள் வாங்கக்கூடாது, இது உங்கள் தோள்கள், முதுகு மற்றும் இடுப்பில் கூடுதல் அழுத்தத்தை உருவாக்குகிறது.

எப்போதும் வசதியான மற்றும் இடுப்புக்கு சப்போர்ட் தரும் பைக்கையே தேர்ந்தெடுங்கள். மேலும், எப்போதும் உங்கள் சவாரி நிலையை சரியாக சரிசெய்யவும். இது முதுகு வலியிலிருந்து விடுபட உதவும்.

 

உங்களை நீரேற்றமாக வைத்திருங்கள்

பைக் ஓட்டும் போது உடலில் நீர்ச்சத்து குறைந்தால், முதுகுவலி, தோள்பட்டை வலி, கழுத்து வலி போன்றவை மோசமடையலாம். இதைத் தவிர்க்க, உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது முக்கியம். உடலில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால், எந்த வகையான உடல் பிரச்சனையும் உங்களை எளிதில் தொந்தரவு செய்யாது.

இதையும் படிங்க: Burn Fat: கலோரிகளுக்கு பதிலாக கொழுப்பை எரிப்பது எப்படி? இதோ டிப்ஸ்!

நிபுணரை சந்திக்கவும்

பைக் ஓட்டும் போது உங்களுக்கு கடுமையான முதுகுவலி இருந்தால் மற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்பும் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் சற்றும் சிந்திக்காமல் உடனடியாக ஒரு நிபுணரை அணுகவும். பிசியோதெரபி செய்ய அவர்கள் உங்களுக்கு ஆலோசனை கூறலாம் அல்லது சில களிம்புகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கலாம். இது முற்றிலும் உடலுக்கு நல்லது.

image source: freepik

Read Next

kidney Stones: இவர்களுக்கெல்லாம் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் அதிகம்.!

Disclaimer