ஆப்பிள் சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்கனும்? - முழு சத்துக்களும் கிடைக்கும் எப்படி சாப்பிடலான்னு தெரிஞ்சிக்கோங்க!

ஆப்பிளில் அடங்கியுள்ள சத்துக்கள் பல உடல்நலப் பிரச்சினைகளை நீக்குவதில் பயனுள்ளதாக உள்ளன. இந்தப் பழத்தை தினமும் சேர்த்துக்கொள்வதால் என்னென்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என பார்க்கலாம். 
  • SHARE
  • FOLLOW
ஆப்பிள் சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்கனும்? - முழு சத்துக்களும் கிடைக்கும் எப்படி சாப்பிடலான்னு தெரிஞ்சிக்கோங்க!


சுகாதார நிபுணர்கள் பெரும்பாலும் ஆப்பிள் சாப்பிட பரிந்துரைக்கின்றனர். ஆப்பிள்களை உட்கொள்வதன் மூலம், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பெருமளவில் மேம்படுத்தலாம். சிறந்த பலன்களைப் பெற, ஆப்பிள்களை சரியான முறையில் உட்கொள்வது மிகவும் முக்கியம். ஆப்பிள் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதும் உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆப்பிளை எப்படி உட்கொள்வது? ( Right way to consume Apple)

நீங்கள் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு ஆப்பிள்களை சாப்பிடலாம். காலை ஆப்பிள் சாப்பிடுவது சிறந்தது. இதில் உள்ள ஃபைபர் மற்றும் பெக்டின் (Pectin) வயிற்றை நன்கு சுத்தமாக வைத்து, செரிமானத்தை தூண்டுகிறது. மேலும், இது நாள் முழுக்க சக்தி கொடுக்க உதவும். ஆனால் எக்காரணம் கொண்டும் காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடக்கூடாது. தவிர்க்க முடியாத காரணங்களால் வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட நேர்ந்தால், சிறிது சுடு தண்ணீர் குடித்த பிறகு சாப்பிடுவது நல்லது.

மாலையில் ஆப்பிள் சாப்பிடுவது கூட ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். காலை உணவுக்குப் பிறகு ஆப்பிள் சாப்பிடலாம். ஆப்பிள் சாப்பிட்ட பிறகு குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். ஆப்பிள் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

ஆப்பிளில் அதிகமான ஃபைபர் இருக்கிறது, இது இரவில் செரிமானத்திற்கு சற்று சிரமமாக இருக்கலாம். சிலருக்கு வயிற்று வலியை ஏற்படுத்தும். ஆப்பிளை அரைத்தோ, ஜூஸாகவோ சாப்பிடுவதை விட முழு ஆப்பிளை நன்றாக மென்று சாப்பிடுவதே உடலுக்குத் தேவையான ஆரோக்கியத்தை தரும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கவனிக்க வேண்டிய விஷயம்:

ஆப்பிள் சாப்பிட்ட உடனே நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்வோம். ஆப்பிள் சாப்பிட்ட பிறகு, முள்ளங்கி அல்லது ஊறுகாய் போன்றவற்றை உட்கொள்ளக்கூடாது. இது தவிர, இந்த பழத்தை சாப்பிட்ட பிறகு தேநீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். ஆப்பிள் சாப்பிட்ட உடனே பால் குடிப்பது குடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆப்பிளின் இயற்கையான அமிலத்தன்மை, கார உணவுகளின் அமிலத்துடன் சேர்ந்து அசிடிட்டி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் ஆப்பிளுடன் வேர்க்கடலை பர்பி, தயிர், பாதாம், வால்நட்ஸ், ஓட்ஸ், தானியங்களைச் சேர்ந்து சாப்பிடுவது உடலுக்கு இரு மடங்கு நன்மை தரும்.

ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம்:

நம் பாட்டி காலத்திலிருந்தே, ஆப்பிள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. ஆப்பிள் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் பருமனைக் குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். எலும்பு ஆரோக்கியம் முதல் இதய ஆரோக்கியம் வரை உங்கள் ஆரோக்கியத்திற்கு அனைத்து வகையான நன்மைகளையும் வழங்குவதில் ஆப்பிள் உதவியாக இருக்கும் என்பதை நிரூபிக்க முடியும்.

Image Source: Freepik

Read Next

உங்க டயட்ல பீர்க்கங்காயை ஏன் கண்டிப்பா சேர்க்கணும் தெரியுமா? இது தெரிஞ்சா சாப்பிடாம இருக்க மாட்டீங்க

Disclaimer

குறிச்சொற்கள்