$
How to measure bra size: நீங்கள் வாங்கும் பிரா சரியான அளவில் உள்ளதா என எத்தனை முறை சோதித்து பார்த்திருப்பீர்கள்?. இப்படியொரு கேள்வியைக் கேட்டால் பெரும்பாலான பெண்கள் சொல்லும் பதில் ‘ஒருமுறை கூட இல்லை’ என்பதாக தான் இருக்கும்.
சமீபத்திய ஆய்வு முடிவுகளின் படி 80 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் தங்களது மார்பக அளவை விட தவறான பிராக்களையே அணிந்திருப்பது தெரியவந்துள்ளது. தவறான அளவில் பிரா அணியும் போது அதை ஷேப்பை மாற்றி, உங்களுடைய தோற்றத்தையே சீர்குலைப்பதோடு, தசை வலியையும் உண்டாக்கக்கூடும்.

எல்லா நேரத்திலும் பிரா அணிவது நபரின் ஆரோக்கியத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கலாம் எனக்கூறும் ஆஸ்டர் ஆர்வி மருத்துவமனையின் தலைமை பிசியோதெரபிஸ்ட் பாலக் டெங்லா, தவறான அளவில் பிரா அணிவதால் ஏற்படக்கூடிய அடிப்படை பிரச்சனைகள் குறித்து விளக்கியுள்ளார்.
- சுவாசிப்பதில் சிக்கல்:
இறுக்கமாக பிரா அணிவதால் மார்பு விரிவடைவது பாதிக்கப்பட்டு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.
- மார்பக தளர்வு:
சரியான அளவில் பிரா அணியவில்லை என்றால், மார்பகத்திற்கு சரியான சப்போர்ட் கிடைக்காது. இதனால் மார்பக திசு நீட்சி அடைந்து, மார்பகங்கள் தளர்ந்து போகக்கூடும்.
- புற்றுநோய் அபாயம்:
இறுக்கமான அளவுகளில் பிரா அணிவோருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட அதிக அளவில் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் இறுக்கமாக பிரா அணியும் போது அவை, மார்பக திசுக்களின் நிணநீர் வடிகால்களை கட்டுப்படுத்துவதால், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்சிதை மாற்றங்கள் ஏற்படுகிறது. இது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.
- உளவியல் பிரச்சனைகள்:
நாள் முழுவதும் ப்ரா அணிவதால் ஏற்படும் அசௌகரியம் மற்றும் சரியான அளவில் பிரா அணியாததால் தோற்றத்தில் ஏற்படும் மாற்றம் சிலருக்கு உளவியல் ரீதியான பிரச்சனைகள் ஏற்பட காரணமாகிறது.
மார்பக குறைப்பு அறுவை சிகிச்சைக்கான இணைப்பு:
சிறிய அளவிலான பிராக்களை அணிவதற்கும், மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சை செய்வதற்கும் இடையே தொடர்பு இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
அதாவது 2003ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, சரியான பிரா அணியாத 102 பெண்களுக்கு, மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டது போன்ற தோற்றம் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் 70 சதவீத பெண்கள் தங்களது கப் அளவை விட சிறிய அளவிலான கப் அளவு கொண்ட பிராக்களை அணிவதே ஆகும்.
பிரா அணியாமல் இருக்கக்கூடாதா?
பெண்கள் பிரா அணிவது மார்பகங்களுக்கு சப்போர்ட் மற்றும் தோற்றத்தை சீராக்க மட்டுமல்ல, அவர்களுடைய ஒட்டுமொத்த தோரணையையே மாற்றி காட்டுவதோடு, திசுக்களின் தொய்வு ஏற்படுவதையும் தடுக்கிறது. மேலும் சரியான அளவிலான பிராவை அணிவது ஒருவரின் தோற்றம், சுயமரியாதை மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும்.
இதையும் படிங்க: Lose Weight With PCOS: பிசிஓஎஸ் உள்ள பெண்கள் உடல் எடையை குறைப்பது எப்படி?
சில சமயங்களில் ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது எலும்புகளை இறுக்கி, முதுகு தசைகளை பலவீனப்படுத்தி, தசை நார்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவது போல் தோன்றலாம்.

இருப்பினும் உடற்பயிற்சி செய்யும்போது மார்பகங்களுக்கு சரியான சப்போர்ட் தரக்கூடிய வகையில் ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது கட்டாயமாகும். இல்லையெனில், உள் மார்பக திசுக்கள் பாதிக்கப்படுவதோடு, கழுத்து பிடிப்பு, முதுகுவலி போன்றவற்றை ஏற்படுத்தும்.
சரியான பிரா அணிவது ஏன் கட்டாயம்?
பெண்களின் மார்பக அளவு அவ்வப்போது மாறக்கூடியது, எனவே சரியான அளவை மதிப்பீடு செய்து அதற்கு ஏற்றார் போல் பிராக்களை வாங்க வேண்டும். இதற்கு காரணம் வயது மற்றும் எடையில் ஏற்படும் மாற்றம் காரணமாக அமைகிறது.
சரியான பிரா என்று வரும் போது, முதலில் கப் அளவை கவனிக்க வேண்டும். பெரிய அளவிலான மார்பகங்களுக்கு சிறிய அளவு பிராவை அணியும் போது, இறுக்கமான பட்டை காரணமாக மேல் முதுகு தசைகள் (ட்ரேபீசியஸ்), கழுத்து, தோள் பட்டை பகுதிகளில் வலியை ஏற்படுத்தக்கூடும்.
வழக்கமான பிராக்களை விட ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. இது பெண்களுக்கு கழுத்து, முதுகு மற்றும் தோள்களில் ஏற்படக்கூடிய வலி மற்றும் அசெளகரியங்களை குறைக்க உதவுகிறது.

அண்டர்வயர்டு பிரா அணிவதால் ஏற்படும் தீமைகள்?
பிரா அணிவது மார்பகங்களுக்கு 80 சதவீத ஆதரவை வழங்குகிறது. இதனால் அண்டர்வயர்டு பிராக்களை அணிவது பெண்களிடையே அதிகரித்து வருகிறது. ஆனால் அண்டர்வயர்டு பிரா அணியும்போது, அவை மார்பகங்களில் ஓவர் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் மார்பகத்தை சுற்றிலும் ரத்த ஓட்டம் மற்றும் சுவாசம் பாதிக்கப்படக்கூடும்.
இறுதியாக பிசியோதெரபிஸ்ட் பாலக் டெங்லா கூறுகையில், பிரா என்பது பெண்ணின் ஒப்பனை தோற்றத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் பெரும் துணைபுரிகிறது. இது பெண்ணின் சுயமரியாதை மற்றும் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. எனவே சரியான அளவிலான பிராக்களை தேர்வு செய்வது மிகவும் அவசியமானதாகும் என்கிறார்.
Image Source: Freepik