How to get rid of greasy hair : தலைமுடி ஒருவரின் அழகை அதிகப்படுத்தி காட்டும் தன்மை கூந்தலுக்கு உண்டு. அதனால் தான் அவற்றை நாம் பொக்கிஷம் போல பராமரிக்கிறோம். இயல்பாக நாம் மழையில் நனையும் போதோ, அதிகமாக தலைக்கவசம் அணிவதாலோ அல்லது தலையில் அதிகப்படியான எண்ணெய் பசையால் கூந்தல் பொலிவிழந்து ஒன்றோடு ஒன்று ஒட்டி (Greasy hair) காணப்படும். சில சமயங்களில் அதிக துர்நாற்றமும், எண்ணெய் பசை காரணமாக அரிப்பு அதிகரித்து முடி உதிரும் அபாயமும் ஏற்படலாம்.
இதற்கு சரியான சிகிச்சை இருந்தாலும் அனைவராலும் அதிக பணம் செலவழித்து பார்லருக்குச் செல்ல முடியாது. அப்படி இருக்கும் சூழ்நிலையில், வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்வது சிறந்தது. அதிக செலவு இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து, உங்கள் முடி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் ஷைனிங்காக மாற்றுவதற்கான சில வீட்டு வைத்திய குறிப்புகளை நாங்கள் கூறுகிறோம்.
இந்த பதிவும் உதவலாம்: ஆரோக்கியமான முடி வேண்டுமா? இந்த 7 ரகசியத்தை தெரிந்துக்கொள்ளுங்களேன்!
நெல்லிக்காய் பொடி மற்றும் பூந்தி கோட்டை பொடி

நெல்லிக்காய் மற்றும் பூந்தி கோட்டை (Reetha Powder) பயன்படுத்துவது தலை முடிக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. முடியின் ஒட்டும் தன்மையை குறைக்க இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து பயன்படுத்தினால், தலைமுடி பொலிவுடன் காணப்படும்.
தேவையான பொருள் :
நெல்லிக்காய் தூள் - 2-3 தேக்கரண்டி.
ரீத்தா தூள் - 2-3 டீஸ்பூன்.
செய்முறை :
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில், நெல்லிக்காய் தூள் மற்றும் ரீத்தா தூள் சேர்க்கவும்.
இப்போது சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து இவற்றை நன்கு கலக்கவும்.
நன்கு கலந்ததும் இவற்றை சுமார் 15 நிமிடம் ஊறவைக்கவும்.
எப்படி பயன்படுத்துவது?
தலைமுடியாய் விரித்து இரண்டாக பகிரவும். இப்போது முறையாக செய்து வைத்த இந்த கலவையை உச்சந்தலையில் இருந்து நன்றாக தடவவும்.
முடியை சிறிய பாகங்களாக பிரித்து தலை முழுவதும் நன்றாக அப்ளை செய்யவும்.
இப்போது, தலையில் 5 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும்.
10 நிமிடம் கழித்து, அதிக அடர்த்தி இல்லாத ஷாம்பூவின் உதவியுடன் முடியை சுத்தம் செய்யவும்.
வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால், உங்கள் முடி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் மென்மையாக இருக்கும்.
கறிவேப்பிலை மற்றும் தயிர்

கறிவேப்பிலை கூந்தலுக்கு மிகவும் நல்லது என்பது நம்மில் பலருக்கு தெரியும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உச்சந்தலையை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. அதே போல, தயிர் கூந்தலுக்கு புரதத்தை தருகிறது. கூந்தலை பராமரிக்க இவற்றையும் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள் :
கறிவேப்பிலை - ஒரு கொத்து.
தயிர் - 1 கப்.
செய்முறை :
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கருவேப்பிலை இலைகளை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
பின்னர் அதில் தயிர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
தண்ணீர் சேர்க்க வேண்டாம். இது பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை நன்கு கலக்கவும்.
பயன்படுத்தும் முறை :
முதலில், உங்கள் தலை முடியை சீப்பின் உதவியுடன் இரண்டு பகுதிகளாகப் பிரித்து, பின் இந்த பேஸ்ட்டை உச்சந்தலையில் தடவவும்.
இதையடுத்து உங்கள் கைகளை வைத்து லேசாக மசாஜ் செய்யவும்.
பின்னர், தலைமுடியை 30 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்கவும்.
இதற்குப் பிறகு, ஷாம்பூவின் உதவியுடன் முடியை சுத்தம் செய்யவும்.
வாரத்திற்கு ஒரு முறை இதை செய்து வந்தால் நல்ல பயன் பெறுவீர்கள். இது முடியை மென்மையாக்குவதுடன் முடியின் அடர்த்தியையும் அதிகரிக்கும்.
குறிப்பு - மேலே குறிப்பிட்டுள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதற்கு முன், நீங்கள் சோதனை செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் முடி அமைப்பும் வித்தியாசமாக இருக்கும். மேலே உள்ள குறிப்புகள் உங்களுக்கு உடனடி பலன்களைத் தரும் என்று நாங்கள் கூறவில்லை. ஒருமுறை உங்கள் நிபுணரிடம் ஆலோசித்து, பின்னர் அவற்றைப் பயன்படுத்துவது நல்லது.
image source: freepik