Fri Sep 11, 2026 | 10:20 PM IST

Black Hair Remedies: இயற்கையாக நரைமுடியை கறுப்பாக்க இந்த 4 குறிப்புகளை பின்பற்றுங்க!!

How To Make Hair Black Naturally : தற்போதை நாளில் முடி உதிர்வை போல, இளநரை பிரச்சனையும் அதிகரித்துள்ளது. வயது அதிகரிக்க அதிகரிக்க முடி நரைப்பது சகஜம். ஆனால், தற்போதைய வாழ்க்கை முறை, உணவு முறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மனா அழுத்தம் என பல காரணங்களால் சிறு வயதிலேயே முடி நரைக்கும் பிரச்சனையை நாம் சந்தித்து வருகிறோம்.

இருப்பினும், முடி நரைக்கும் பிரச்சனை மரபியல் மாற்றம், மருந்துகளின் அதிகப்படியான நுகர்வு மற்றும் வேறு பல காரணங்களாலும் ஏற்படலாம். பெரும்பாலும் வெள்ளை முடியை கருமையாக்க மருதாணி மற்றும் டை பயன்படுத்துவோம். இதனால், வெள்ளை முடியை கருமையாக மாற்றலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Cinnamon for hair : அடர்த்தியான கூந்தலை பெற இலவங்கப்பட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க!

ஆனால், அது சில நாட்களுக்கு மட்டும் தான். இது நிரந்தர தீர்வு இல்லை. வெள்ளை முடியை கருப்பாக மாற்ற பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இயற்கையான முறையில் உங்கள் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 4 எளிய குறிப்புகள் பற்றி நாங்கள் கூறுகிறோம்.

வெள்ளை முடியை கருமையாக்க இயற்கை வைத்தியம்

சத்தான உணவுகளை உண்ணுங்கள்

வெள்ளை முடி பிரச்சனைக்கு உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைவும் ஒரு முக்கிய காரணம். எனவே, சத்தான உணவுகளை உங்கள் அன்றாட உணவுப்பழக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். சரிவிகித மற்றும் சத்தான உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் வெள்ளை முடி பிரச்சனையை நிரந்தரமாக நீக்கலாம்.

ஆம்லா ஹேர் பேக்

நெல்லிக்காய் அனைத்து முடி பிரச்சனைகளிலிருந்தும் விடுபட ஒரு சிறந்த மருந்து. இதில், வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது இயற்கையான முறையில் முடியை கருப்பாக்க உதவுகிறது. நெல்லிக்காயை நன்றாக பேஸ்ட் போல அரைத்து வைத்தால் போதும். அதில் தேங்காய், பாதாம், கடுகு எண்ணெய் என ஏதேனும் ஒரு எண்ணெயைக் கலந்து, உச்சந்தலையில் தடவி வர முடி விரைவில் கருப்பாக மாறும். இதை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம் : இந்த 9 பழக்கங்கள் முடி ஆரோக்கியத்தை பாதிக்கும்!

முடிக்கு எண்ணெய் தடவவும்

தேங்காய் எண்ணெய், கடுகு, பாதாம் அல்லது ஆமணக்கு எண்ணெயுடன் எலுமிச்சை சாறு, மருதாணி இலைகள் அல்லது கற்றாழை கலந்து தடவி வந்தால், முடி இயற்கையாகவே கருப்பாக மாறும். இதை வாரத்திற்கு 2-3 முறை தவறாமல் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

வெங்காயம் சாறு தடவவும்

வெங்காயத்தில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. அத்துடன் முடிக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன. இதன் காரணமாக முடி பிரச்சனைகளை நீக்குவதில் இது மிகவும் நன்மை பயக்கும். இது முடியை இயற்கையாக கருப்பாக மாற்றவும் உதவுகிறது. வெங்காயச் சாற்றை வாரத்திற்கு 2-3 முறை தலைமுடிக்கு தடவலாம் அல்லது வெங்காயச் சாற்றில் தேங்காய் அல்லது கடுகு எண்ணெய், நெல்லிக்காய், எலுமிச்சை சாறு போன்றவற்றை கலந்து தடவலாம்.

இந்த எளிய வீட்டு வைத்தியத்தின் உதவியுடன், எளிதாக உங்கள் முடியை கருப்பாக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இந்த உதவிக்குறிப்புகளை தவறாமல் பின்பற்ற வேண்டியதுதான்.

Image Source: Freepik

Read Next

Fenugreek Seeds for Hair: ஆரோக்கியமான கூந்தலை பெற வெந்தயத்தை இப்படி முடியில் தடவுங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content