$
கொழுப்பால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் உள்ளன. குறிப்பாக உடல் சீராக இயங்க கொழுப்பு அவசியமாகிறது. இருப்பினும் எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து தான். உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது இதய நோய், டைப் 2 நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.
மாறிவிட்ட வாழ்க்கை முறை, ஜங்க் ஃபுட், முறையான உடற்பயிற்சியின்மை, அதிக அளவில் சாப்பிடுவது, ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வது, தூக்கமின்மை போன்ற காரணங்களால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகரிக்கிறது.
இதனைக் கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
1. உணவுமுறை:
உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவதில் நமது உணவு முறை மிக முக்கிய பங்காற்றுகிறது. கொழுப்பு நிறைந்த சிவப்பு இறைச்சி வகைகள், வெண்ணெய், பதப்படுத்தப்பட்ட உணவுகள் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

இதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்கள், நட்ஸ் வகைகள், விதைகள் மற்றும் மெலித்த புரதங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
2. உடற்பயிற்சி:

கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உடற்பயிற்சி மிக முக்கியமானது. உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும்,அதிகப்படியான கொழுப்பை எரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தினமும் வெறும் 30 நிமிடங்களை உடற்பயிற்சிக்காக செலவிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், புத்துணர்ச்சி பெறவும் உதவும்.
3. பூண்டு:
நமது சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பூண்டில் உள்ள அல்லிசின் என்ற பொருள், ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது குடல் அதிகப்படியான கொழுப்பை உறிஞ்சுவதை தடுக்கிறது. எனவே பூண்டை பச்சையாகவோ, சமைத்தோ அல்லது பொடியாகவோ உட்கொள்ளலாம்.
4. ஆப்பிள் சிடர் வினிகர்:
ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம், கல்லீரல் கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் குடல் அதிக அளவிலான கொலஸ்ட்ராலை உறிஞ்சுவதையும் கட்டுப்படுத்துகிறது.

ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை ஒரு கிளாஸ் நீரில் கலந்து தினமும் குடித்து வரலாம்.
5. ஆளி விதைகள்:

ஆளிவிதை நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் வளமான ஆதாரமாக விளங்குகிறது. இவை இரண்டும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். உங்களுடைய காலை உணவு, ஸ்மூத்தி, தயிர் ஆகியவற்றுடன் ஆளி விதைகளை கலந்து எடுத்துக்கொள்ளலாம்.
6. கிரீன் டீ:

கிரீன் டீயில் கேட்டசின்கள் என்ற ஆன்டிஆக்ஸிடன்கள் அதிகமுள்ளது. இது LDL எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. தினமும் க்ரீன் டீ பருவது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்.
7. நட்ஸ் வகைகள்:

நட்ஸ்களில் காணப்படும் நார்சத்து மற்றும் தாவர ஸ்டெரால்கள் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. பாதாம், அக்ரூட், பிஸ்தா ஆகியவை கெட்ட கொழுப்பை குறைக்கக்கூடிய நட்ஸ் வகைகளாகும்.
8. சிவப்பு ஈஸ்ட் அரிசி
சிவப்பு ஈஸ்ட் அரிசி கொலஸ்ட்ராலை நிர்வகிக்க உதவுகிறது. சீன மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் சிவப்பு ஈஸ்ட் அரிசியில் உள்ள மோனாகோலின் கே என்ற கவலை, கல்லீரல் கொலஸ்ட்ராலை உருவாக்குவதற்கு தேவையான மிக முக்கிய நொதியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
ஏற்கனவே வேறு சிகிச்சைக்காக மருத்துக்களை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு இந்த அரிசியை எடுத்துக்கொள்வது நல்லது.