Urinary Infection Remedies: நீர்க்கடுப்பை சட்டென்று சரிசெய்ய எளிய வீட்டு வைத்தியம்!

  • SHARE
  • FOLLOW
Urinary Infection Remedies: நீர்க்கடுப்பை சட்டென்று சரிசெய்ய எளிய வீட்டு வைத்தியம்!


Home Remedies For Urinary Infection: நீர்க்கடுப்பு எதனால் ஏற்படும் தெரியுமா? நம் உடலில் உள்ள நீர் வியர்மை மூலம் அதிகம் வெளியேறும் போது, உடலில் நீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த நேரத்தில் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. மேலும் சிறுநீரகம் அல்லது சிறுநீரக பாதையில் அழற்சி ஏற்பட்டாலும், நீர்க்கடுப்பு ஏற்படலாம். 

நீர்க்கடுப்பு ஏற்படுவதால் சிலருக்கு காய்ச்சல் ஏற்படும். மேலும் சிலருக்கு சுறுநீரகம் அல்லது அதை சுற்றியுள்ள உறுப்புகளில் தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்படலாம். குறிப்பாக இந்த நீர் கடுப்பு பிரச்னை என்பது கோடையில் அதிகம் காணப்படும். இதில் இருந்து உடனடியாக வெளியேற சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவை என்னவென்று இங்கே காண்போம். 

பார்லி நீர்

நீர்க்கடுப்பில் இருந்து விரைவில் குணமடைய பார்லி அரிசி நீர் சிறந்த தேர்வாக இருக்கும். இதற்கு ஒரு கப் பார்லி அரிசி எடுத்துகொள்ளவும். இதனை கழுவிக்கொள்ளவும். பின்னர் இதில் 10 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பின்னர் இந்த நீரை குடிக்கவும். இதை செய்தால் சிறுநீர் சார்ந்த பிரச்னைகள் ஏற்படாது. 

இதையும் படிங்க: Heart Disease: தினமும் இரவு லேட்டாக தூங்குபவரா நீங்க? கவனம் இதய நோய் வருவதற்கான ஆபத்து அதிகம்!

புளிக்கரைசல்

நீர்க்கடுப்புக்கு புளிக்கரைசல் நல்ல மருந்தாக இருக்கும். இதற்கு நெல்லிக்காய் அளவு புளியை எடுத்துக்கொள்ளவும். இதனுடன் பொடித்த கருப்பட்டியை சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும். கருப்பட்டி இல்லையென்றால் இதனுடன் நாட்டுச்சக்கரை கூட சேர்க்கலாம். இப்போது இதை குடிக்க வேண்டும். 

உலுந்து நீர்

நீர்க்கடுப்பி பிரச்னை உள்ளவர்கள், இரவு முழுவதும் ஊற வைத்த உலுந்து நீரை குடிக்கவும். இதனை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது சிறுநீர் எரிச்சல், நீர்க்குத்தல் போன்ற பிரச்னைகளை தீர்க்கும். 

சீரக நீர்

ஒரு டீஸ்பூன் சீரகத்தை தண்ணீரில் கொடுக்க விட்டு, அதில் கற்கண்டை பொடித்து சேர்த்துக்கொள்ளவும். இதனை தினமும் குடித்து வந்தால் சிறுநீரக பிரச்னை தீரும். 

​நீர் முள்ளி இலை

நீர் முள்ளி இலைகளை நன்கு அரைத்துகொள்ளவும். இதனை சாதம் வடித்த தண்ணீருடன் கலந்து ஊற விடவும். ஒரு மணி நேரம் கழித்து இதனை குடிக்கவும். இது நீர்க்கடுப்பு பிரச்னைகளை தீர்க்கும்.  

இளநீர்

நீர்க்கடுப்பு பிரச்னை உள்ளவர்கள் தினமும் இளநீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இது இரு சிறந்த தேர்வாக இருக்கும். இது உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் இது உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. இதனால் உடல் குளிர்ச்சியாகும். இயற்கையாகவே உடல் குளிர்ச்சியாக உள்ளவர்கள், இளநீரை அதிகம் எடுக்க வேண்டா. 

மேற்கூறிய வீட்டு வைத்தியங்களை செய்தும், நீர்க்கடுப்பு பிரச்னை தீரவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. 

Image Source: Freepik

Read Next

Belly Fat Home Remedies: ஈஸியா தொப்பை குறைய சிம்பிளான வீட்டு முறைகள் இதோ

Disclaimer

குறிச்சொற்கள்