இன்றைய நவீன சமையலறைகளில், நான்-ஸ்டிக் பாத்திரங்கள் (Non-Stick Cookware) ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. எண்ணெய் குறைவாக பயன்படுத்தி சமைப்பது, உணவு எளிதில் ஒட்டாமல் வருவது, சுத்தம் செய்ய சுலபம் ஆகிய காரணங்களால் பலரும் இதனை விரும்புகிறார்கள். ஆனால், இந்த வசதிகளின் பின்னால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சில ஆபத்துகள் இருக்கின்றன என்பதை பலர் அறியவில்லை.
நான்-ஸ்டிக் பாத்திரங்களின் தன்மை
நான்-ஸ்டிக் பாத்திரங்கள் பெரும்பாலும் Teflon (டெஃப்ளான்) எனப்படும் PTFE (Polytetrafluoroethylene) என்ற கெமிக்கல் பூச்சுடன் வருகிறது. இது உணவு ஒட்டாமல் இருக்க உதவுகிறது. ஆனால், அதிக வெப்பத்தில் இதன் தன்மை மாறி நச்சு வாயுக்கள் வெளிப்படும்.
மறைந்துள்ள ஆபத்துகள்
நச்சு வாயுக்கள் உருவாகும் அபாயம்
பாத்திரத்தில் பூசப்பட்டிருக்கும் Polytetrafluoroethylene, 260°C மேல் சூடானால், toxic fumes (நச்சு வாயுக்கள்) வெளியிடும். இதை நீண்ட காலம் சுவாசித்தால், தலைவலி, குமட்டல், மூச்சுத்திணறல், மற்றும் “Polymer Fume Fever” போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
புற்றுநோய் அபாயம்
நான்-ஸ்டிக் பாத்திரங்களில் முன்பு பயன்படுத்தப்பட்ட PFOA (Perfluorooctanoic Acid) என்ற ரசாயனம், சில ஆராய்ச்சிகளின்படி புற்றுநோய், கருப்பை பாதிப்பு, மற்றும் ஹார்மோன் சமநிலை குலைவு போன்ற பிரச்சனைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.
ஹார்மோன் பாதிப்பு
நான்-ஸ்டிக் பாத்திரத்தில் இருந்து வெளிவரும் ரசாயனங்கள் endocrine disruptors ஆக செயல்பட்டு, ஹார்மோன் சமநிலையை குலைக்கும். இதனால் மகப்பேறு பிரச்சனைகள், உடல் எடை மாற்றங்கள், மற்றும் தைராய்டு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு
சில ஆய்வுகள், PFOA போன்ற ரசாயனங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் காட்டுகின்றன.
மேலும் படிக்க: கர்ப்ப காலத்தில் நான் ஸ்டிக் குக்வேர்களில் சமைப்பதால் என்ன ஆகும் தெரியுமா.?
பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிகள்
* அதிக வெப்பத்தில் சமைக்க வேண்டாம் – நான்-ஸ்டிக் பாத்திரங்களை 230°Cக்கு மேல் சூடாக்காதீர்கள்.
* மெட்டல் கரண்டி தவிர்க்கவும் – கெமிக்கல் உரியாமல் இருக்க, மரம் அல்லது சிலிகான் கரண்டி பயன்படுத்தவும்.
* சேதமடைந்தால் மாற்றுங்கள் – நான்-ஸ்டிக் பாத்திரத்தில் கீறல் ஏற்பட்டால் உடனே மாற்றுங்கள்.
* மிதமான வெப்பத்தில் மட்டும் சமைக்கவும் – அதிக வெப்பம் நச்சு வாயுக்களை வெளியிடும்.
* வெளிச்சூழலில் பயன்படுத்தவும் – காற்றோட்டம் உள்ள இடத்தில் சமைப்பது நல்லது.
ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பான மாற்றுகள்
* Cast Iron Pans (இரும்பு பாத்திரங்கள்) – இயற்கையாக non-stick தன்மையை பெறும், இரும்பு சத்து வழங்கும்.
* Stainless Steel Cookware – ரசாயனமில்லாமல், நீடித்த காலம் பயன்படுத்தக்கூடியது.
* Clay Pots (மண் பாத்திரங்கள்) – பாரம்பரிய மற்றும் சத்தான சமையலுக்கு சிறந்தது.
* Carbon Steel Pans – திடமானது மற்றும் high heat cookingக்கு ஏற்றது.
இறுதிச் சொல்..
நான்-ஸ்டிக் பாத்திரங்கள் சமைப்பதை எளிதாக்கினாலும், அதைப் பயன்படுத்தும் முறையில் கவனம் இல்லாமல் இருந்தால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிக வெப்பத்தை தவிர்த்தல், சரியான கருவிகளை பயன்படுத்துதல், சேதமடைந்ததும் மாற்றுதல் போன்ற முறைகள் அவசியம். நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக இயற்கையான சமையல் பாத்திரங்களை தேர்வு செய்வது மிகச் சிறந்த முடிவாகும்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version