
$
கவலை ஒரு மோசமான வியாதி. நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என நினைத்து,நினைத்தே அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் முடங்கிவிடுவோம். கவலையில் இருந்து விடுபட வாழ்க்கை துணைக்கு எந்த வகையில் உதவலாம் என பார்க்கலாம்…
முக்கியமான குறிப்புகள்:-
எல்லோருடைய திருமண வாழ்க்கையும் ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது. கணவனுக்கோ, மனைவிக்கோ உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறோம். அவர்களை அன்புடன் அரவணைத்து, மருந்து கொடுத்து பார்த்துக்கொள்கிறோம். அதேபோல் தான் மன ரீதியான பிரச்சனைகளுக்கும் வாழ்க்கை துணையின் அன்பும், அரவணைப்பும் மிகவும் முக்கியமானது.
கவலை மன அழுத்தத்தின் ஒரு பகுதியாகும். கவலை இருக்கும்போது, வாழ்க்கை துணை எப்போதும் கோபப்படுவார், அந்த கோபம் உங்களை எரிச்சலூட்டும். இதனால் குடும்ப வாழ்க்கை சண்டை, சச்சரவுகள் அதிகரிக்கும். இந்த கவலை நீண்ட நாட்களாக தொடர்ந்தால் திருமண வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டு, விரிசலில் கூட முடியலாம்.
உங்கள் கணவனோ அல்லது மனைவியோ எதையாவது நினைத்து அதீத கவலையில் இருந்தால் அதனை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் அவரது கவலையைக் குறைக்கலாம். இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியேற உங்கள் துணைக்கு உதவுங்கள். உங்கள் துணையின் கவலையைக் குறைக்க சில குறிப்புகளை கீழே கொடுத்துள்ளோம்.
எதற்காக கவலைப்படுகிறார் என அறிந்து கொள்ளுங்கள்:
உங்கள் வாழ்க்கை துணையின் கவலையைப் போக்க முதலில் அவர் எதற்காக கவலைப்படுகிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது உங்கள் பார்ட்னர் எதிர்கொள்ளும் பிரச்சனையை முன்கூட்டியே தெரிந்துகொள்ள உதவும். அதன் மூலம் நீங்கள் அவர்களை சிறப்பாக கவனித்துக் கொள்ள முடியும்.
வழக்கமான உங்கள் வாழ்க்கை துணை எந்த விஷயத்தை நினைத்து அதிகம் கவலைப்படுவார் என்பதை தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள். மனக்கவலையை கொட்டித்தீர்க்கிறேன் என்ற பெயரில் உங்களிடம் பேசுவதை முழுமையாக காதில் வாங்கிக்கொள்ளுங்கள். இது அவர்களுக்கு மன அமைதியை தருவதோடு, கவலையை சற்றே குறைக்க உதவும்.
பேசி புரிய வையுங்கள்:
திருமண வாழ்க்கைக்கு தகவல் தொடர்பு மிகவும் முக்கியமானது. கணவன், மனைவியும் தினமும் ஒரு மணி நேரமாவது மனம் விட்டு பேசுவது ஆரோக்கியமான திருமண வாழ்க்கைக்கு உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் தருணங்களில் உரையாடல் ஆறுதலான விஷயமாக அமையும். எனவே உங்கள் பார்ட்னர் பார்க்க கவலையாக தெரிந்தால், எதையோ பறிகொடுத்தது போல் இருந்தால் அவரிடம் பேசுங்கள். அவருக்கு என்ன பிரச்சனை என்பதை வெளியே சொல்ல வையுங்கள்.
நீங்கள் அவருக்கு ஸ்பெஷலானவர் என்பதை தெரியப்படுத்துங்கள். இதற்காக, துணைக்கு பரிசுகளை வழங்குங்கள், சிறப்பு திட்டமிடல் செய்யுங்கள். நீங்கள் வசதியாக பேசக்கூடிய இடத்திற்கு உங்கள் துணையை அழைத்துச் செல்லுங்கள்.
நிபுணர் உதவியை நாடுங்கள்:
நிறைய முயற்சி செய்தும் உங்கள் துணையிடம் எதுவும் மாறவில்லை என நீங்கள் உணர்ந்தால், நிபுணரிடம் உதவி பெறலாம். கவுன்சிலிங் அமர்வுகள் அவர்களுடைய கவலையை வெளிப்படையாக பேச வைத்து, அதற்கான ஆலோசனைகளை பெற உதவும்.
இதைச் செய்வதன் மூலம், உங்கள் கூட்டாளியின் பிரச்சினையை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்வீர்கள் மற்றும் கவலையை சமாளிக்க அவருக்கு உதவலாம். ஆலோசகர்கள் கவலையை எவ்வாறு சமாளிப்பது மற்றும் உங்களுக்கு பதட்டம் இருக்கும்போது என்ன செய்வது என்பது குறித்த நிபுணர் ஆலோசனையைப் பெறுவது எப்படி என்று உங்களுக்குச் சொல்வார்கள்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version