Health Budget 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் இடம்பெற்றிருந்த பல்வேறு அம்சங்களுக்கு மத்தியில் சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் தொடர்பாக ஏணைய அம்சங்கள் இடம்பெற்றிருந்தது.
மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களை பலர் அறிந்திருப்பதில்லை. சில பிரபலமான திட்டங்களை மட்டுமே அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அனைவரும் மத்திய, மாநில அரசின் முழுத் திட்டங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். காரணம், மத்திய மாநில அரசின் திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொரு இந்தியருக்கும் அது சொந்தமானது.
முக்கிய கட்டுரைகள்
மத்திய அரசு பட்ஜெட் 2024 ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பட்ஜெட்டில் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு என 2024-2025ன் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.90,658.63 கோடி ஒதுக்கப்பட்டது. அதேபோல் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தில் ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும், உதவியாளர்களுக்கும் மருத்துவப் பாதுகாப்பு விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டின்படி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கு ரூ.87,656.90 கோடியும், சுகாதார ஆராய்ச்சித் துறைக்கு ரூ.3,301.73 கோடியும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மத்திய அரசு பட்ஜெட் 2024 முக்கிய அம்சம்
அதேபோல், மையத்தின் முதன்மைத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்துக்கு முந்தைய ஒதுக்கீடு ரூ.6800 கோடியுடன் ஒப்பிடும்போது இந்த முறை ரூ.7,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் மறுபுறம், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் (ABDM) என பிரபலமாக அறியப்படும் தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷனுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் அதிகரிப்பு இல்லை.
தேசிய சுகாதார பணிக்கு (NHM) அரசு ரூ.36,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கான (ஐசிஎம்ஆர்) பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2,295.12 கோடியிலிருந்து ரூ.2,732.13 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
தேசிய டெலி மென்டல் ஹெல்த் திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.65 கோடியில் இருந்து ரூ.90 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
யூனியன் பட்ஜெட்டில் தன்னாட்சி அமைப்புகளுக்கு ரூ.18,013.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்) பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.4,278 கோடியில் இருந்து ₹4,523 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
புற்றுநோய் மருந்துகளுக்கு வரி விலக்கு
கூடுதலாக, மத்திய நிதியமைச்சர் புற்றுநோயாளிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மூன்று முக்கிய புற்றுநோய் மருந்துகளுக்கு முழு சுங்க வரி விலக்கு அறிவித்தார். இது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த திட்டங்களில் மிகக் குறிப்பிடத்தக்க ஒன்று. எக்ஸ்ரே குழாய்கள் மற்றும் டிஜிட்டல் டிடெக்டர்களின் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி குறைப்பும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
ஆயுஷ் திட்டம் உட்பட சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு, சுகாதார மேம்பாடு, நோய் பரவல் தடுத்தல் மற்றும் பொது சுகாதார சேவைகளை வலுப்படுத்துதல் ஆகியவை இந்திய அரசின் முன்னுரிமைகலில் ஒன்றாக பார்க்கப்படுகிறது என்று இந்தியாவின் WHO பிரதிநிதி ரோடெரிகோ எச்.ஆஃப்ரின் கூறியுள்ளதாக தனியார் செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
மூன்று புற்றுநோய் சிகிச்சை மருந்துகளின் மீதான சுங்க வரி விலக்குகள், உயிர்காக்கும் சிகிச்சைகளை மலிவு மற்றும் அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் அரசு தொடர்ந்து மும்முரம் காட்டி வருகிறது. இந்த நடவடிக்கைகள் அனைவரின் ஆரோக்கியத்திற்கான பாராட்டுக்குரிய விஷயமாகும்.
Image Source: FreePik