சில ஆண்களுக்கு விறைப்புத் திறன் குறையும். அப்படிப்பட்டவர்களால் உடலுறவை அனுபவிக்க முடியாது.அந்த பிரச்சனையை தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
வாழ்க்கை முறை மாற்றம் ஆண்களின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல அந்தரங்க வாழ்க்கையும் பாதிக்கிறது. தற்போது நிறைய ஆண்கள் திருமணத்திற்கு பிறகு பாலியல் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக விறைப்புத்தன்மை சம்பந்தமான பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் தாம்பத்ய வாழ்க்கையில் சிக்கல் எழுகிறது.
ஹைட்ராலிக் இரத்த விளைவின் காரணமாக ஆண்களுக்கு விறைப்புத்தன்மை ஏற்படுகிறது, பாலியல் உணர்வு தூண்டப்படும்போது, உடல் ஆண்களின் அந்தரங்க பகுதியை நோக்கி அதிக அளவில் இரத்தத்தை செலுத்துகிறது. விறைப்புத்தன்மை மிகவும் குறைவாக அல்லது மோசமாக இருப்பதினால் ஆண்களின் பாலியல் வாழ்க்கை மட்டுமல்ல, குழந்தைப்பேறும் கேள்விக்குறியாகிறது.

எனவே ஆண் உறுப்பின் விறைப்புத்தன்மை கோளாறை சரி செய்யக்கூடிய உணவுகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்...
வால்நட்ஸ்:
ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளை தீர்ப்பதில் வால்நட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றை உட்கொள்வதால், பாலுறவு திறன் அதிகரித்து, உடலுறவு சிறப்பானதாக அமையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
முந்திரி:
முந்திரி பருப்பில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள புரோட்டீன்கள் உங்களை பாலியல் ரீதியாக வலிமையாக்குகிறது. மேலும், அவை ஆண்ணின் அந்தரங்க உறுப்பிற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
பூசணி விதைகள்:
பூசணி விதைகளில் ஜிங்க் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இவை உடலில் சுழற்சியை அதிகரித்து உடலுறவை சுவாரஸ்யமாக்குகிறது.
கானாங்கெளுத்தி:
இது ஒரு வகை மீன். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை டெஸ்டிகுலர் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன மற்றும் ஆண்களின் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துகின்றன. எனவே, இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது.
வான்கோழி:
வான்கோழி சிக்கனில் மெலிந்த புரதங்கள், செலினியம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை நிறைந்துள்ளன. இவை ஆண்களின் பாலியல் பிரச்சனைகளை நீக்குகிறது. இவற்றை உண்பதால் ஆணுறுப்பில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
கோழி நெஞ்சுக்கறி:
கோழியின் மார்பக பகுதி புரதத்தின் நல்ல மூலமாகும். இதில் அர்ஜினைன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இந்த கோழி மார்பகம் உடலில் புரதத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. இதனை உண்பதால் ஆணுறுப்பில் ரத்த ஓட்டம் சீராகி விறைப்புத்தன்மை பிரச்சனை நீங்கும்.
Image Source: Freepik