Fenugreek Water: அதிக கொலஸ்ட்ரால் காரணமாக, மாரடைப்பு, இதயத் தடுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளின் ஆபத்து அதிகரிக்கிறது. சரியான நேரத்தில் கொலஸ்ட்ரால் அளவை சரிசெய்யவில்லை என்றால், பல கடுமையான நிலைமைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மோசமான உணவுப் பழக்கம் மற்றும் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை காரணமாக அதிக கொலஸ்ட்ரால் ஆபத்து அதிகரிக்கிறது.
முக்கியமாக நமது உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உற்பத்தி செய்யப்படுகிறது - ஒன்று உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL) இது நல்ல கொலஸ்ட்ரால் என்றும் மற்றொன்று குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படுகிறது.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் வழிகள்
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் ஹை கொலஸ்ட்ரால் எனப்படும் பிரச்சனையை சந்தித்து இதனால் பல விளைவுகளை எதிர்கொள்ள நேரும்.
கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த வெந்தயத் தண்ணீரைக் குடிப்பது நன்மை பயக்கும். இதை எப்படி குடிப்பது, எப்படி தயாரிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
அதிக கொழுப்பை குறைக்க வெந்தய நீர் எப்படி உதவுகிறது?
வெந்தயம் பொதுவாக மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் பல மருத்துவ குணங்களும் உள்ளதால் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. வெந்தய நீர் வயிறு மற்றும் செரிமான அமைப்பு உட்பட உடலின் பல பாகங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதனை தொடர்ந்து உட்கொள்வது அதிக கொலஸ்ட்ராலை குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.
ஆரோக்யா ஹெல்த் சென்டரின் மருத்துவ உணவியல் நிபுணர் டாக்டர் வி.டி.திரிபாதி கூறுகையில், "வெந்தய விதைகளில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, புரோட்டீன்கள் போன்ற குணங்கள் உள்ளன. இவை கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும்.
வெந்தய விதைகளை தொடர்ந்து வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள். இது அதிக கொழுப்பு மற்றும் எடையை கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் பல பிரச்சனைகளுக்கும் இதன் நுகர்வு நன்மை பயக்கும்.
அதிக கொலஸ்ட்ராலை குறைக்க வெந்தயத்தை எப்படி உட்கொள்வது?
அதிக கொலஸ்ட்ராலை குறைக்க, வெந்தய நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இதைத் தயாரிக்க, ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் தண்ணீரை நன்றாக வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். விரும்பினால் எலுமிச்சை சாறும் சேர்த்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து குடித்து வந்தால், அதிக கொலஸ்ட்ரால் கட்டுப்படும்.
அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறிகள்
மார்பு வலி மற்றும் அசௌகரியம்
சுவாசக் கோளாறு
அதிகரித்த இரத்த அழுத்தம்
தடீர் பீதி
இதய துடிப்பு திடீர் அதிகரிப்பு
உடலில் தொடர்ந்து சோர்வு மற்றும் சோம்பல்
உடலின் இடது பக்கத்தில் திடீர் வலி
வழக்கமான உடற்பயிற்சி HDL கொழுப்பின் அளவை அதிகரிக்கவும், LDL கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. நீங்கள் மது அருந்தினால், அதை கட்டுப்படுத்தவும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் சாப்பிடுங்கள். அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள் அதிகம் தோன்றினால் முதலில் மருத்துவரை அணுகவும்.
Image Source: FreePik